Friday, March 8, 2013

அவள்!

லகின் ஒவ்வொரு பிறப்பிலும் மீண்டும் பிறப்பவள்..
நேற்று என்னை பெற்றெடுத்து..
எனக்கு கற்பித்து..
என் கரம் பற்றி விளையாடி..
இன்று,
என்னோடு பணிபுறிந்து..
சிரித்து மகிழ்ந்து..
நாளை..
என்னில் பாதியாகி..
எனக்கு உதித்து..
அடம்பிடித்து.. அழுது..
அழவைத்து..
எல்லாமுமாய் என்னை முழுமையாக்கும் அவள்..
அவளில்லையேல் நானில்லை..

Saturday, December 29, 2012

காதல் போல்

னவுகள் எல்லாம் தாண்டி
காலை கண்கள் விழித்தெழுந்து
கதிரவன் அவன் கதிர்கள் தேடி வான் நோக்கின்
கார் மேகம் சூழ்ந்த வானில் இருந்து அசைந்தாடி
காற்றோடு கை கோர்த்து மனதோடு வரும்
காதல் போல் விழுகிறதா என்ற ஐயம் எழுப்பி விழும் துளிகள்
கனம் தாங்கிய மனதின் பாரம் குறைக்கிறது!





Thursday, December 20, 2012

நோக்கெதிர் நோக்குதல்

ரு மாதம் முன்னர், ஒரு வாரக்கடைசியில் நானும் என் நண்பனும்  தி-நகர் சென்று கொண்டிருந்தோம், வழக்கம் போல தலை கவசம் இல்லை. ஒரு காவல் அதிகாரி வண்டியை  நிறுத்தி அவர்கள் வழக்கத்தை  கேட்டார்,

“வா வா இப்டி ஓரமா போடு வா... ஹெல்மெட் இல்ல.. வண்டி நம்பர் ப்ளேட் வேற உங்க இஷ்டத்துக்கு இருக்கு. ஹ்ம்ம்”

friend ஓட வண்டி சார்”

“ஆனா நீ தானே ஒட்டு வந்தே... ஹெல்மெட்க்கு இருநூறு, நம்பர் ப்ளேட்கு நூறு.. சரி தானே”

“சார் எல்லாத்தையும் பார்த்தா எப்டி.. கொஞ்சோ பாத்து சொல்லுங்க”

“சனிக்கிழம நீங்க சரக்கு அடிக்க போவீங்க நாங்க என்ன செய்யறது?” னு ஒரு கேள்வி கேட்டுட்டு கலகலனு ஒரு சிரிப்பு வேற

“இல்ல சார்.. சரகெள்ளா அடிக்கரதில்ல”

“அஹ! சரக்கு இல்லையா..?” என ஆச்சர்ய பட்டவர் வேற ஒரு நல்ல கொக்கி போட்டாரு..

“உங்கள மாறி கொஞ்சோ கலர இருந்தா பரவால.. எதாவது மடியும்.. என்ன பாரு.. எதாவது வாங்கி பூசனும்ல அப்போ தான் உங்க அளவு இல்லைனாலும் எனக்கும் எதாவது மடங்கும்”

“நீங்க வேற.. அதுவே பெரும் குழப்பத்துல இருக்கு” என சொல்லி ஒரு நூறு ரூபாயை கட்டி விட்டு நகர்தோம்.

சரி... அவர் சொன்னது பற்றிய யோசனை தொடங்கியது போய் வரும் வழி நெடுகிலும்,

ஒரு ஆணுக்கு ஒரு விஷயம் இருந்தால் அவன் தன் வாழ்கையின் அடுத்த தேவைகளை நோக்கி வேகமாய் ஓடாத் துவங்குவான். அந்த விஷயம் தான் பெண். தன்னை பற்றி தன்னை காட்டிலும் அதிகம் சிந்திக்கும் ஒருத்தி. சதா தன்னை சுற்றியே வரும் ஒருத்தி. எங்கே யாரிடம் நின்று பேசினாலும் ஒரு பார்வையில் தன் அருகே இழுக்கும் ஒருத்தி. அவள் ஒருத்தி தான் வேண்டும்.

இவனுக்கு காதல் எப்படி வரும் எனில்,

காணும் பெண் இடத்திலெல்லாம் வந்திடாது காதல்.
யவர் கண் நோக்கும் கால் - தன் கண்
விழித்திருப்பது மறந்து - அவள் விழி
இவன் வயிறு வரை பாய்கிறதோ – அதுவே
காதல் என கொள்வான் அவன்!

அந்த ஒருத்திக்கு என்ன வேண்டும். அவள் தன்னை நோக்க இவன் என்ன செய்ய வேண்டும்? மிருக இனத்தை பொறுத்தமட்டில் தன் ஆண்மை பலம் நிரூபித்தால் போதும். ஆதியில் மனிதனும் அப்படி ஆரம்பித்தது தான். பலம் பொருந்தியவன் தான் காட்டில் பிற மிருகங்களிடமிருந்து தன்னை காத்து, வேட்டையாடி தனக்கும் தன் சந்திதியினருக்கும் உணவளிக்க முடியும் என நம்பினாள் அவள்.

அனால் இன்று கதை வேறு... நிறம் முக்கியமா? அவள் நிறம் பார்த்தா  காதல் வயப்படுகிறாள்?

முத்தம் தரும்பொழுதிலே ஆண் அவள் கண்கள் நோக்கி அவளை நோக்கி இருப்பான், அவளோ அதை கண்கள் முடியே உணர்வாள். அவள் உணர்வுகளால் ரசிக்கத் தெரிந்தவள். நிறம் கண்டு போபவள் அல்ல.

அவள் கனவுகளை மதிக்க வேண்டும் அதன் பின்னரே அவள் அவனின் சொற்களுக்கு செவி சாய்ப்பால். அதே கனவிற்கு சரியாக வண்ணமிட்டு அழகு படுத்தி அவள் முன் நிறுத்தினால் போதும் அவள் அவனை நம்பி வந்து அவன் மார்போடு தலை சாய்ப்பால்.
எந்த ஒரு தருணத்திலும் ஏது ஒரு செய்கையும் அவள் அல்லாது ஒரு உலகம் தன்னை மகிழ்விக்கும் என ஆண் இருந்தால் பின் அவளோடு கொண்ட பந்தம் விட்டுப்போக அவளே வழி செய்வாள். காரணம் அவளுக்கு அவன் மட்டுமே உலகம் என்று ஆகி இருக்கும். இருவர் வாழ அவள் ஓர் உலகம் செய்வாள், அவளை மதித்தால் போதும், அவள் சொல்லுக்கு மதிப்பளிதால் போதும்.

வள்ளுவர் சொல்வது இதனை விட பெரியது,

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு1311

பெண்ணாக பிறந்த எல்லோரையும் பொதுவாக எண்ணி கண்களால் உண்பதால் கற்ப்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பை பாவை நான் தழுவ மாட்டேன் என கொபம்கொல்லுவாள். பார்தவே இப்படி ஆகும் என்கிறார் வள்ளுவர்.

Thursday, December 6, 2012

காதலின் அடையாளம்

ன் கண்கள் கலங்கி
நீ நிற்க எதுவும் காரணமாக இருக்கட்டும்,
அந்த உதட்டின் ஓரம் வரும் சிறு புன்னகையாயினும் அதற்க்கு
நான் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்ற
என் பிடிவாதத்திற்கு யார் என்ன பெயர் வைத்து அழைத்தாலும்,
நீ அதை  நான் உன் மேல் கொண்ட காதலின் அடையாளமாக கொள்ளவேண்டும்..!

Monday, October 8, 2012

நட்போடு காதல் செய்வீர்!

ராத்திரி ஒரு ஒன்பது பத்து மணிக்கு துணிகளை துவச்சுக்கிட்டே வானொலியில ஏதோ பாட்டு நல்லா இருக்கேன்னு கேட்டுகிட்டு இருந்தேன். பாட்டுக்கு இடையில பயபுள்ள ஏதோ கேட்டுச்சு, திருமணத்திற்கு பின்பு நடப்பை தொடர முடியாமல் போவதற்கு காரணம் என்ன? அப்டின்னு. கேள்வி கேட்டுட்டு பாட்டு போடுவான்னு நம்பி கேட்டா உடனே ஒரு கல்யாணம் ஆன பொண்ணு.. அதுவும் காதல் கல்யாணம் செஞ்ச பொண்ணு ஏதோ அவங்களுக்கு ஒரு நண்பனா.. இப்போ கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவன் கூட பேச முடியலயா, முன்னாடியெல்லாம் எதுவானாலும் அவன் கூட தான் பகிர்துக்குமா. இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் முடியலைன்னு ரொம்ப சங்கடம பேசுச்சு. சரி இப்போவாவது பாட்டு போடுவானு பார்த்தா இல்ல, இந்த பக்கம் தொகுப்பாளர் ஏன் இப்படி நடப்பை புருஞ்சிக்க மாட்டேன்கிறாங்க அப்டி இப்டின்னு இவர் பேசி ஒரு வழியா பாட்ட போட்டாங்க.


இத்தன பேச்சு கேட்டதுக்கு அப்புறம் நமக்கு பாட்டு எங்கே கேட்க்கும், யோசிக்க ஆரம்பிச்சாச்சு .

இப்போ அந்த கணவர்கள் எல்லா அவங்க மனைவிகளை தங்கள் நடப்பை (ஆணோ பெண்ணோ) தொடர விடுறாங்க. இவங்களும் எல்லா பிரச்சன, சந்தோசம், சோகம், சண்டை எல்லாம் அந்த நண்பர்கள் கூட பகிர்த்துகிட்டா இந்த பக்கம் இவரு எதுக்கு?

அட, இது ரெண்டு பக்கமும் தான், கணவர்களை தங்கள் பிரச்சன. சோகம் எல்லா நல்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுக்கு இந்தப்பக்கம் எதுக்கு கல்யாணம் பண்ணனும், வெறும் குழந்தைக்குனு சொன்னா அப்போ இச்சைக்கு அப்டின்னு ஆகிடாது.

வள்ளுவர் வாக்கின் படி பார்த்தால்,
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு” – 1122

உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து இல்லாதது போல் இவளோடு நான் கொண்ட நட்பு அப்டின்றாறு. எந்த அதிகாரம்னா, ‘காதற் சிறப்புரைத்தல்’.

காதல் அதிகாரத்துல மடந்தையொடு கொண்ட காதல்னு சொல்லாம நட்புன்னு ஏன் சொல்லணும்?

காதல் தெரிவது புணர்தலில், நட்பு தொடர்வது பகிர்தலில். கல்யாணம் நீண்ட நெடு பயணம் என தொடர காதலோடு நட்ப்பும் தேவை என உணர்தலின் வெளிப்பாடாகவே இந்த குறளை நான் காண்கிறேன்.

நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நண்பன் ஒருவன் வேண்டும் எனில், கட்டிலை மட்டும் பகிர்ந்துகொள்ள கல்யாணம் செய்து வாழ்க்கை துணை என கொள்ள வேண்டிய அவசியம் என்ன.

நல்ல நண்பன் என தெரிந்த பின் வேறு துணை தேடி அழைவதேன்? தெரியாத ஒருவரை தெரிந்து கொள்ளுதல் நட்பின் ஆரம்பம். தெரிந்தவரை புரிந்து கொள்ளுதல் நட்பு. புரிந்து கொண்டவர் கை கோர்த்து நடக்கும் நெடு பயணம், வாழ்க்கை.

நல்ல நண்பனை கல்யாணம் செய்து கொண்டால் இந்த சங்கடங்களுக்கு வழியே இல்லையே. அதை செய்யாது வேறு சில காரணங்கள், சௌகரியங்கள் பார்த்து நாம் செய்யும் தவறுக்கு நம் துணையை இப்படி வானொலியில் வசை பாடுவது எதற்கு?

காதலனோ காதலியோ, காதலை கடந்து நட்பு பாராட்டி காதல் செய்யின், வேறு உறவுகளோடு பகிர்தல் மிக அவசியப்படாது. அவசியம் இருப்பினும் தடைகள் சொல்லாது. காதல் அழகானது, நட்போடு இருப்பின் அதுவே ஆழமானது. நட்போடு காதல் செய்வீர்.


Saturday, September 29, 2012

நம்மோடு நாம்!

சுவர் இல்லா அறையின் கதவுகளை தாளிட்டு உன்னை
நான் நெருங்கும் போதும்,
கதவை திறப்பது போல் உன் சிறு விழிகள் நம்
இடையேயான இடைவெளியை அளக்கும்!
அருகில் வந்து உன்னை தீண்டும் முன்பே
போக விடு என பொய் சொல்லும் உன் சிவந்த உதடு!
கரம் பற்றியவுடன் மார்பில் சாய்ந்து
தொல்லை செய்யாதே என முத்தம் கேட்க்கும்
என் மேல் நீ கொண்ட நான் காணாத காதல்!
முத்தம் தீர்ந்தவுடன்
எச்சி பன்னிட்டஎன சட்டையோடு என்னை தள்ளிவிட்டு
மார்போடு சாய்ந்துக்கொள்ளும் தருணம் நீ கேட்டுணர்வாய்
உன்னோடு நான் கொண்ட காதல்!




Sunday, September 16, 2012

மீண்டும் கண்டுனர்ந்தேன்!

ந்தி கடந்து வந்த  இருள்
அடிவானத்தில் மின்னல்
காலின் கீழ் கடல் அலை
தலை எல்லாம் மழை தூறல்
அங்கு கனம் கூடாது என
என் காதுமடல் கண் மூக்கு வழி
வழிந்தோடி ஒலியலை செய்யும் கடலோடு கலக்கும் நொடி
ஊரெல்லாம் என் உடன் இருப்பினும்
யாரெல்லாமோ என்னுடன் நடப்பினும்
ஆண் என்ற கர்வம் தலையில் இருப்பினும்
என் கரம் நீ பற்றி நடக்கையில்
என் எல்லா கர்வமும் உருகி
நான் இருந்த உலகம் என் பார்வையில் இருந்து விலகி
உன் விழியில் நம் உலகம் பார்த்த தருணம் மீண்டும் கண்டேன்
இன்னும் மீளவில்லை என்பதனை இன்றும் உணர்ந்தேன்!