Thursday, July 17, 2014

வர்த்தகம் மட்டுமே!

நான் கண்டது குருவை அல்ல விற்ப்பனையாளரை!
நான் பெற்றது கல்வி அல்ல சரக்குகளை!
நான் தேர்ச்சி பெற்றது வாழ அல்ல விற்ப்பனைக்கு!
நான் இருப்பது கோவிலில் அல்ல சந்தையில்!
புத்தகத்தில் இருந்ததை தலையில் ஏற்றி
நுணுக்கம் செய்து என் ஆற்றலை தரையில் கூறுகட்டி வைத்திருக்கிறேன்
என் கனவுகளை எல்லாம் புதைத்து
அதன் மீதமர்ந்து வியாபாரம் பேசுக்கிறேன்!
பள்ளிக்கூடம் மொத்தவிற்பனை நிலையம்!
மாணவர்கள் சில்லறை வர்த்தகர்கள்!
நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள்!
இதில் எங்கும் நடப்பது வர்த்தகம் மட்டுமே!




Saturday, May 31, 2014

யவன் பாடுவான் இனி கீதம்

வனோ என் தெய்வம்
எவன் துஷ்டன் அவனை கண்டு பொருக்காமல்
அவன் தலை கொய்வானோ அவனென்று ஆகாதோ
தவறுகள் கண்டு துடித்து எழுந்து
முடிந்தவரை முட்டி நான் மாண்டால்
என் பின் எவன் எழுந்து தவறுகள் களைய வருவானோ
அவன் என் குல சாமி ஆகானோ
பலனுக்கென்று பாராமல்
யாவருக்கும் தான் கொண்டது கணக்கிடாது
ஈய்து வாழ்பவன் அன்றோ
பின் இறக்காமல் இருந்துகொண்டே இருப்பவனா இறைவன்
இருக்கும் காலம் தொட்டு
வந்ததின் காரணம் உணர்ந்து கடமை முடிப்பவன் வேறு யாரோ
காணும் உயிரெல்லாம் நானே என்று
களத்தில் காண்டிபம் ஏந்தியவனுக்கு
பாடிய கீதம் தானே நான் மேல் சொன்ன தெய்வம் யாவும்
சொன்னது உணராது சொன்னவன் நாமம் சொல்லி மட்டும் இட்டு
இனம் கண்டு குணம் மறந்து
ஈனமாய் வாழும் இவர் மதி உரைக்க
இனி யார் பாடுவர் எந்த கீதம்?



Sunday, April 27, 2014

இல்லாமல் இருந்திருந்தால்

ருத்தியாக தானே வந்து நின்றாய்
ஏன் எனக்கு நவராத்திரி நாயகியாக தெரிந்தாய்
என்னோடு தோள் உரச நடந்து தோழனானாய்
தலையில் தட்டி தவறுகள் திருத்தினாய்
எனை சேயாக்கி தாயாகி
ஏனோ என்கையில் நீயே சேயானாய்
இன்னும் என்னென்னவாகி எனை என்னவாக்கா போகிறாய்?
எங்கோ கிடந்தது பார்த்திடும் மேகமா தாகம் தீர்க்கும்
நீ சீவி முடித்து வரும் கேசம் தீண்டினால் தீராதா?
பார்வை இருப்பதால் தானே
பார்த்துமட்டுமே தாகம் எடுக்க எட்டி நிற்கிறேன்
இல்லாமல் இருந்திருந்தால்
உனை தொட்டு பார்த்திருப்பேன்!
தினமும் உன்னால் அழகாக தெரியும் ஆகாயத்தையும் பூலோகத்தையும்
உன் பார்வையால் இன்னும் அழகாக கண்டிருப்பேன்!

Sunday, March 30, 2014

கோர்க்க நீயா வா!

ரையிர பேய் கூட
ஒத்த மரத்துல தூங்க போயாச்சு
ராத்திரி பொழுதெல்லா
தொலைச்ச தூக்கத்த தேடியே காணாம போகுது
என்னத்த தேடனு எத தொலச்சேனு
தேடும் போதே மறந்து போகுது
தூக்கம் கலஞ்சு கண்ணு தெறக்கும் போது தெரியுது
அதுவர நீ என் கூட பேசினத நினச்சுதா நேரம் போனது
பொண்ணுக்கு காதல் வந்தா
யாருக்கு தெரியாது
செரிக்காத சோரா
அவ நெஞ்சு கூட்டில கிடந்தது வாட்டி எடுக்கு
என் பொழப்பு இங்க வேற
காதல் வந்து வாட்றது எனக்கே தெரியாது
என்னைய வாட்றது அதுனே தெரியாம
என் மலே நானே வெறுப்பாகி கிடந்தே
எவனையும் கூட்டுல சேக்காம தனியாவே திரிஞ்சே
எல்லா புரிஞ்சு சொல்ல வரதுக்குள்ள
நீ போய்டே
நீ போ இப்போ நீயாவே
நா தொலச்சத தேடயில கிடச்சுது ஒ தூக்கோ
நீயாவே தேடிட்டு வா
நீ நானுங்கரத கொர்த்து நாமுனு ஆக்க
ஆயுசு இன்னு இருக்கு காத்துகிடக்க
நா கிடக்கே உனக்காக!

Monday, March 24, 2014

முதல் துளி நீ எனக்கு!

மொட்டை மாடி தூக்கத்தை கலைக்கும் சிறு தூறல் போல
உன் துப்பட்டா தீண்டும் போது
விழித்திருந்தும் மீண்டும் விழிக்கிறேன்..
பேசி முடித்து நீ போகும் போது
அடைமழையில் ஆடி தலை துவட்டி
சிறு தூறல் தேடி கை நினைக்க துடிக்கும் மனமாய்
வேறு என்ன பேச என்று தேடித்துடிக்கிறது..
நீ நில்லாமல் ஏதும் சொல்லாமல்
சிறு பார்வை வீசி குட்டி சிரிப்பை எறிகையில்
மழை தூறல் தாங்கிய இல்லைகள்
என் முகத்தில் சாரல் தெறிக்கிறது..
உன்னோடு நடக்கையில்
அந்த வானம் வெளிக்கிறது
இருந்தும் உன் சிரிப்பில் மின்னல் வெட்டி
அடைமழையே பொழிகிறது..
உனை காணாத போதும்
சிலந்தி வலையில் சிக்கிய துளியாய்
மின்னும் உன்னோடு இருந்த ஞாபகங்கள்..
எங்கிருந்தோ ஆரம்பித்து
ஆயிரம் மையில் கடந்து
எங்கு எதை தொட்டு வந்தபோதும்
என் நெற்றி மத்தியில் வந்து சேரும்
என்னை தொடும்
முதல் துளி நீ எனக்கு!

Thursday, February 13, 2014

பொழிந்திட வா!

வெளுத்திருந்த வானம் எங்கும் முகில் வந்தது
சேர்த்த முகில் அனைத்தும் உடைந்தது
உடைந்த முகில் நீராய் பொழிந்தது
பொழியும் நீராய் நீயே வந்தாய் என்றே ஓடினேன்
நான் வேகம் கூட்டுவதற்குள் ஏன் நின்றாய்??
ஒரு துளியும் நினையாமல்
உன் நினைவில் நான் நின்றேன் மீண்டும் வெளுத்த வானடியில்
மீண்டும் வருவாய் என்று இன்னும் நிற்கிறேன்
நீ பொழிந்தால் போகும் என் மீது நான் பூசிய கரையாவும்
போகும் போனது போனபின்னர் நான் மீண்டும் பிறப்பேன்
பிறந்த என்னை கையில் ஏந்த நீயே வா
நீ வருவாய் என்றே சிரித்துகொண்டு நானும் பிறப்பேன்!
உன் கரத்தில் நான் விளையாடிட
என் கண்ணின் விழியில் நீ உன்னை தேடிட
உன்னை கிள்ளி
உன் கரத்தில் இருந்து நான் கிளம்பிட
நீ துரத்தி வா என்னை
இந்த விளையாட்டு விளையாடிட
என்னை நினைக்க வா
இன்னும் நிற்கிறேன் வா அடியே
என்னை கலைத்து விட்டு போன நீயே – வா
என் மீது பொழிந்திட!





Saturday, February 8, 2014

அனுபவம் புதுமை

நீ மழலை இல்லை
இருந்தும் என் கையில் ஏந்தத்தவிக்கிறேன்
நீ இல்லாத போதும்
உன்னோடு பேசி சிரிக்கிறேன்
பொத்தி வைத்திருந்த பூவிலிருந்து
ஒரு பட்டம்புச்சி பறந்தது
உன் சிறு பார்வை என்னை கடக்கும் நேரம்
என் நிலை மங்கி உதடுகள் புன்னகை ஒன்று பூத்தது
என்னை நானே ரசித்தேன்
சிறு சிரிப்பால் சாகடித்தாய்
ஒரு புன்னகை வீசி எழுப்பிவிட்டு போனாய்
இன்னும் என்ன செய்வாய் – என்னை
என்றே காத்திருக்கிறேன் தினமும்!
காதல் என்று சொல்லிவிட்டால் கனம் குறையும் என்றே
சொல்லாமல் தாங்கினேன் அதோடு உன்னை!
அருகினில் உன்னை கண்டாலே
துளி துளியாய் சிதறினேன்
பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் படபடக்க!
உன்னோடு பேசிவிட்டு நடக்கும் நேரம்
அனைவரும் எனை ரசிப்பது போல் ஒரு கலக்கம் கொண்டேன்
என்ன? என்ற உன் கேள்விக்கு
எவ்வளவோ பதில் யோசித்தும்
ஒன்றுமில்லை என்று மட்டும் சொல்லி நகர்கிறேன்
உறக்கம் எல்லாம் என் அறையில் உறங்கிட
இரவுகள் எல்லாம் காதல் சாயம் பூசி செல்ல
பகல் எல்லாம் பைத்தியமாய்
கண்ணாடியில் என்னை கண்டே நான் வெட்கம் கொள்ள
குரல்வழி தண்ணிர் இறங்குகையிலேயே தாகம் கொள்ளும்
புது அனுபவம் கற்றேன் – உன்னால்
என்றால் பொய் என்று சொல்லும்
உன் மேல் கொண்ட ஈர்ப்பு!