கோரக்பூர் – 70 மழலைகள் இறந்து
விட்டனர். இதற்கு இடையில் சுதந்திர கொண்டாட்டம் அவசியமா என்ற கேள்வி எழுவது தவிற்க
இயலாதது. கொண்டாட்டம் தேவை இல்லை ஆனால் கேள்வி கேட்க்கும் சுதந்திரம்
பெற்றுத்தந்தவர்களை நினைவு கூற இந்த நாள் அவசியம். சரி இந்த கோர சம்பவம் யாருடைய
தவறு யார் அலட்சியம், யோகியா, அந்த பிராணவாயு தருவதற்கு மறுத்த ‘புஷ்பா
சேல்ஸ்’ நிறுவனமா?
இந்த
கேள்விகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ
விபத்தை நினைவுகொள்வோம். 2004
சூலை 16
அன்று நடந்தது அந்த கோரா விபத்து(!?)
இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் ஆணைக்குழு
2006 ஆம் ஆண்டு சமர்பித்த அறிக்கையின்படி, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
அதில் வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஆய்வு செய்யலாம். என்று சொல்லப்பட்டதை இன்று நடைமுறை படுத்துவது எந்த அளவு சாத்தியம். பள்ளிகளில்
இடம் கிடைப்பதற்கே தவமாய் கிடக்கும் இவர்கள் ஆய்வு செய்வார்களா? இந்த சிந்தனை ஏன் அந்த
நீதி அரசர்களுக்கு வரவில்லை. நமக்கு நம்மை நம் உரிமைகளை காக்க சட்டம் உள்ளது ஆனால்
அதை எடுத்து கையாள தான் இங்கு நமக்கு தெம்பு இல்லை.
சரி இதன் பின் பள்ளி விபத்துக்கள்
நடக்கவில்லையா, பள்ளி பேருந்துகள் விபதுக்குல்லாகவில்லையா?
மீண்டும் கோரக்பூர் – வியாபாரத்தில் கொடுத்த
பொருளுக்கு பணம் சரிவர கட்ட தவறினால் மேற்கொண்டு பொருள் தந்து நிலுவை தொகையை
ஏற்றிக்கொண்டு போனால் புஷ்பா சேல்ஸ் எப்படி வியாபாரம் செய்ய முடியும், இது தர்மம்
தானே, என இன்று சுதந்திர தின கொண்டாட்டத்தை வெறுப்பவர்களும் அடுத்த 10 வருட
விசாரனையில் இப்படி பேசக்கூடும்.
ஒரு மூன்று மாதம் பின்னோக்கி செல்வோம் போர்பஸ்
பத்திரிக்கை உலகின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிட்டது, முதல் நாள் ஒரு பெயர்
அடுத்த நாள் மீண்டும் பில் கேட்ஸ் தான் என நம் சட்டமன்ற தேர்தல் நிலவரம் போல்
மாறியது. அதில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் குழப்பமேதும் இன்றி முதலிடம் அம்பானி
தான். ஆனால் அதில் முதல் நூறு பேர் யார், அவர்கள் செய்து வரும் தொழில் என்ன என்று
அலசியபோது அதில் முதல் ஐந்து தொழில்கள், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கட்டுமானம்
என முதல் இடத்தில ஒய்யாரமாக இருப்பது மருந்தும் அது சார்த்த தொழில்களும் தான்.
இம்பெரியல் பேங்க் (Imperial Bank of India) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) என
1959ல் பொதுவுடைமையாக்கி இந்திய அரசாங்கத்தின் நேரடி
கட்டுப்பாட்டில் வந்து இதர வங்கிகளை வாரி அனைத்துக் கொண்டது போல, பர்மா ஆயில்
பாரத் பெற்றோலியம் என 1976ல் தேசியமயமாகி
இன்று வரை பொது மக்களுக்கு சேவை செய்வது போல இந்த பள்ளிகள், மருத்துவம், மருத்துவம்
சார்ந்த தொழில்கள் எல்லாம் பொதுவுடைமையாக்க அரசாங்கம் முன் வரலாமே. இதனை விடுத்தது
ஒவ்வொரு முறையும் ஆணைக்குழு
அமைத்து அரசானை பிறப்பித்து அதை நடைமுறை படுத்த ஒரு குழுவை அமைத்து இப்படி குழு
குழுவாக அமைப்பது தவிர்க்கலாமே.
தமிழ் நாட்டில் சாராயக்கடையை அரசாங்கம் அதன்
நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல இந்த மருத்துவத்தையும், கல்வியையும்
அரசாங்கம் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இத்தகைய வியாபார நோக்கில்
நடக்கும் போக்கு மாறி இத்தகைய நிகழ்வுகளை தடுக்கலாமே. ஆனால் ஆள்பவர்கள் அதை
குடும்பத் தொழிலாகவே செய்து வரும்போது இது எப்படி சாத்தியம்.
இந்தகைய சிந்தனை அவர்களுக்கு வராது காரணம் நம்
பிரதமரை சுற்றி அமர்ந்திருப்பது வியாபாரிகள், இவர் ஆலோசனை நடத்துவதும்
வியாபாரிகளோடு தான். அதனால் தான் இப்படி நாடு போய்கொண்டு இருக்க இன்னும்
அரசாங்கத்திடம் இருப்பதையும் தனியாரிடம் ஒப்படைக்கவே நேரம் பார்த்து வருகிறார், சேலம்
இரும்பாலை, ஏர் இந்தியா என
போகிறது அரசின் திட்டங்கள்.
எழுபதாம் முதல் சுதந்திர
தின வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment