ஏதும் நடந்திராது போல் தான் கேட்டு
விட்டாய்..
'ஹே!
எப்படி இருக்க?' என்று,
நானும் உண்மையை
மறைத்து தான் சொல்லிவிட்டேன்,
'ம்..
நல்லா இருக்கே' என்று!
எதிர்பார்த்திருப்பாய்
நானும் கேட்பேன் என,
அல்லது
முறைக்காவது நான் கேட்டிருக்க வேண்டும்
நீ? எனவாவுது சின்னதாக ஒரு கேள்வி!
நீ எது பதிலாக
சொன்னாலும் வலித்திடும் என்றே - உன்
அடுத்த கேள்வி
வரை மௌன மொழி கொட்டித்தீர்தேன்!
'ம்'
என சொன்னாலும் சரி,
'இல்ல
டா' என நின்றிருந்தாலும்!
பிரிந்துசென்ற
போது ஏற்பட்ட ரணத்தில் இயம் வார்தற்போல் எரிந்திருப்பேன்!
நானும் வழி கண்டுபிடித்து திரும்பி நடந்திருப்பேன்,
பார்த்ததும்
தடுக்கிடும் கயல்விழி என இருந்திருந்தால்..
அந்த சின்னக்
கண்ணில் நான் விழுந்தது எப்படி எனவே அறியாத போதே..
ஆராய்ச்சியில்
நான் கிடந்த போதே ஏனோ சென்றுவிட்டாய்!
இன்னமும்
கேட்கிறது கடைசியாக..
என் கரம்
பிடித்து உன் கரத்தை அதில் புதைத்து நீ சொன்னது..
'பத்திரமா
தானே இருக்கு... அப்படியே இருந்திட கூடாதானு தோணுது' - என
முடிக்கும்
முன்னரே தழுதழுத்த உன் குரல்!