Sunday, January 30, 2011

விழிப்பதற்குள் வாழ்ந்துவிடுங்கள்!!!

ந்தவொரு சிறு தவறையும் பார்த்திராத கண்கள்..
எந்தவொரு தீங்கும் பேசிடாத செக்கச்சிவந்த உதடுகள்..
எந்த கரையும் படிந்திடாப் பிஞ்சு விரல்கள்..
என்னை பார்த்துச் சிரித்துச் சோரூட்டிக்கொண்டிருந்தது,
ஒவ்வொரு வாய்ச் சோற்றிலும் என் பாவம்..
என் அழுகை... சஞ்சலம்.. செத்துக்கொண்டிருந்தது..
கொஞ்சங்கொஞ்சமாய் ஊட்டியத்தில் கடைசி வாய் ஊட்டும்போது,
எதோ சொல்லச் சிவந்த வாய்த் திறந்தாள்..
அதற்குள் கண் விழித்துவிட்டேன், இன்றுவரை தெரியவில்லை,
அந்த உதடு சொல்ல வந்தது ஏதென்று..
எதுவாய் இருப்பினும் உடனே சொல்லிவிடுகிறேன் இப்போதெல்லாம்...
யாருக்குத் தெரியும் இந்தக் கனவு எப்போதுக் களையும் என்று!!!
யார் கனவில் வாழ்கிறோமோ,
எதுவாயிருப்பினும் சொல்லி விடுங்கள், சிரித்து விடுங்கள்..
அழுவதாயினும் அழுதுவிடுங்கள்..
கரம் பிடிபதாயினும் பிடித்து நடந்து விடுங்கள்..
தோள் சாய்வதாயினும் சாய்ந்துவிடுங்கள்..
கொடுப்பதாயினும் கொடுத்துவிடுங்கள், பெறுவது பெற்றுவிடுங்கள்..
அவர்கள் விழிப்பதற்குள்!


காதலிப்போர் யாரெனில்...

காதலிக்கும் வரை,
அவளுக்கு இவனும்.. இவனுக்கு அவளும்,
கடல் நீர் போல!
ஊரார் அறிய உரைத்து,
கரம் பிடித்த பின்னரே..
ஒருவருக்கு ஒருவர் ஊராற்று நீர் ஆவர்!!!