Sunday, December 25, 2011

சுயநலம்


பேருந்தில் நின்றிருந்த அம்மாவுக்கு
எழுந்து இருக்கை தருகிறேன்!
சாலையில் கால் இடறி
விழுந்த அம்மாவுக்கு கை கொடுத்து தூக்கி விடுகிறேன்,
அவர் பால் பொருட்களை பொறுக்கி தருகிறேன்!
வேகமாய் செல்லும் போதும் -
யாரும் வழி கேட்டல் நின்று பதில் சொல்கிறேன்!
கண் பார்க்க முடியாது -
வரும் பேருந்து எண் என்ன வென்று கேட்கும் அம்மாவுக்கு
நான் கடுப்பில் இருந்த போதும் நிதானமாய் பார்த்து சொல்கிறேன்!
எங்கோ நான் இல்லாது
தனியாய் பேருந்தில் போகும்,
தினம் சாலையை கடக்கும்
என் அம்மாவுக்கு யாரேனும்
இது போல் உதவி செய்வர் என்ற சுயநலத்தோடு!

-- சித்ரன்




Saturday, December 17, 2011

என் கண்ணில்...

ரே செய்தி ஒரு பக்கம் மரணம் தரும் ரணமும்,
மறுபக்கம் வாழ்நாள் ஆனந்தமும் தரும் எனில்
என் கண்கள் வழி வழியும் நீர்
ஆனந்த கண்ணீரோ அல்ல என்னை எரிக்கும் வெண்ணீரோ??
அது எதுவாயினும்
என்னை தலை குப்பற செய்யும் செய்தி
உன்னை பற்றியது என்பது மட்டும் புரிகிறது, என் வாழ்வே!
உனக்கு எதுவும் கேட்க வேண்டாம் எனவே
வாய் மூடி சிரித்தவாறே அழுகிறேன் நானே அறியாது!






Monday, December 12, 2011

உன் மனை புகா இனம்


டையறினம் அவன் கண்ணன் -
உன் மனை புகுவான் எனில்,
நான் இடையர் இனம் அல்ல.
காடு திரியும் சிவன்
அவன் இனமும் அல்ல.
இனம் கண்டு,
அவர் கொண்ட பணம் கண்டு
கணக்கு போட்டு அனுமதிக்கப்படும்
உன் மனை புகா இனம்!
இப்படி உள்ளவர் எவரையும் சகா எனவும்
காட்டிக்கொள்ளா இனம்!


தெரியல!

ன் கால் மேலே ஏறி நின்னுருக்கா,
முத்தொ கொடுத்தா,
அவ உதட்ட கடுச்சுறுக்கெ,
கட்டி புடுச்சிருக்கோ,
ஒன்னா  அழுதிருக்கோ,
ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிருக்கோம்,
என்னென்னமோ பேசிருக்கொ,
கைய புடுச்சுகிட்டு நடந்திருக்கொ,
இப்போ, ஒன்னு இல்ல,
எதுவும் வேண்டான்னு சொன்னா..?
செத்து கீழ விழுந்திட்ட மாதிரி இருந்தது,
என்னமோ..
அவ எப்பவு என் கூடதா இருப்பானு இருந்தது
அவ அப்படிதா நினைக்க வெச்சா..
ஆனா நா எதோ விட்டுட்டேன் போல,
அவளுக்கு ஏனோ நம்பிக்கை இருந்தது
எப்படியும் அவ போனப்புறம்
வேற ஒருத்தியோட என் வாழ்க்கை நல்ல இருக்கும்னு!
தெரியல!