Showing posts with label ரசனை. Show all posts
Showing posts with label ரசனை. Show all posts

Thursday, September 11, 2014

கோவத்தில் பிரியத்தை தெளிப்பவளே

நீ திட்ட திட்ட திகடுதடி
திட்டித் தீர்த்தப் பின்னு
நாக்கிலே சப்பு கொட்டி கேட்க துடிக்குதடி..
உன் கோவத்தையும்
திருவிழாவா கொண்டாடி ரசிக்கிறனே..
கோவத்தில் நீ விடும் பெருமுச்சிக்குள் வசிக்கிறேனே..
அந்த கருவிழி உருள உருள
ஓடி களச்சு
ஒரு சோம்பு பச்சை தண்ணிகுடிச்சதா அடிவயிறு குளிருதடி..
திட்டி திட்டி எம்மேல உன் உரிமைய காட்டி
என் உயிரயே உலுக்கரியே..
இன்னு என்ன பண்ணி தொலைப்பியோ
நீ சிரிச்சு என் நெஞ்சோட சாஞ்சா
நா எப்படி சாவேனோ!

Saturday, December 29, 2012

காதல் போல்

னவுகள் எல்லாம் தாண்டி
காலை கண்கள் விழித்தெழுந்து
கதிரவன் அவன் கதிர்கள் தேடி வான் நோக்கின்
கார் மேகம் சூழ்ந்த வானில் இருந்து அசைந்தாடி
காற்றோடு கை கோர்த்து மனதோடு வரும்
காதல் போல் விழுகிறதா என்ற ஐயம் எழுப்பி விழும் துளிகள்
கனம் தாங்கிய மனதின் பாரம் குறைக்கிறது!





Saturday, November 5, 2011

குறுக்கு சிறுத்தவள்!


லை கொதிப்பு போல் இவள் இயக்கம் இருக்கும்,
போட்டுத்தந்த பாதையில் மட்டுமே
இவள் பயணம் இருக்கும்,
அதிகம் ஒடிந்து போகமாட்டாள்,
அதிகம் உழைப்பில் களைக்கமாட்டாள்,
அதிகம் சுமப்பாள்,
யார் குருக்கிடினும்
இவள் கூர் வேகம் குறையாது,
இவள் பாதை இவளுக்கு மட்டுமே.
இப்படியும் ஒருத்தி வந்திருக்கிறாள்,
அதுவும் எப்போது என்பதை
எண்ணுதல் ஆச்சரியம் கூடும்.
எந்த பாதையிலும் சென்று,
வருவோர் போவோருக்கு வளைந்து கொடுத்து,
இப்படியாக இருந்தவர்கள் வாழ்த்த காலத்தில்
இவளும் வந்திருக்கிறாள் எனில்
இவளை பெற்றவனை என்னவென்று வைதிருப்பர்!
பலர் சிலாகித்திருந்தாலும்
சிலராயினும் சீன்டியிருக்கலாம்!
ஆனால் இன்று,
அவள் இடுப்பை வளைத்து செல்லும்
அழகை பார்க்கமாட்டார் இல்லை,
தினம் தினம் பார்பவருக்கும்
பரவசம் குறையவில்லை
யாருக்கும் குறையாத அவள் கூர் வேகம் போல்,
விழியில் பிரமிப்பு போகவில்லை
அவளோடு பல முறை பயணம் செய்தும்.
நன்றி மீண்டும் வருக என இரு கரம் கூப்பி
சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்
அவளோடு பயணம் முடித்து
அவரவர் பாதை பார்த்து போவோருக்கு இன்று!
எப்போதோ எவனோ கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கிறேன்
மண்டைக்காரன் அவன்!

--சித்ரன்

Sunday, October 2, 2011

என்னவள்!

லையில் விழும் நீரானது -
அங்கத்தோடு தழுவி அங்கங்கே தங்கிச் செல்வது போல்,
என் சிந்தையோடு தழுவி என்றும் தங்கிடுதல் அவள் ஆகுமோ!
பார்த்ததும் விழச் செய்திடும் அழகான அகண்ட கண்கள்
அதன் மேல்சீரான புருவமும், கூரான நாசியும் கொண்டு,
தாரான கூந்தல் முதுகு தாண்டி தொட்டிட்டால் அவள் ஆகுமோ..?
அதன் முன்புறம் அவள் அழகு கூட்டினல்
அவள் நகைக்க, இதழ் நினைக்க என் தொண்டை வற்ற செயல் அவளேன்றாகுமோ?
அடிமேல் அடி வைத்து அவள் நடக்க
என் காலம் நின்றுவிட்டால் அவளேன்றாகுமோ?
என் தவறினை ரசித்துத் திருத்திட்டால் தெரிந்திடுமோ அவள் என்று!?
இது எல்லாமோ நான் பார்ப்பேன்,
கோவம் கொள்ளும் வேளையில் என்னை போ எனச் சொல்லி,
மார்போடு சாய்ந்து அழும் அவளுக்கென்ன!
வர வேண்டாம் என சொல்லி எனக்காகக் காத்திருக்கும் அவளுக்கென்ன!
சிரித்தாலே மறைத்திடும் விழியானாலும்
எங்கிருந்தும் என்னை குத்திடும் அவளுக்கென்ன!
என்னை போல் என் மேல் காதல் கொள்ளுதல் போதாது
அவள் என்னவள் என நான் உணர்ந்திட!





Saturday, September 10, 2011

மழை இரவில்..!

னைத்தையும் தொட்டணைக்க வந்துக்கொண்டிருக்கும் மழையின் அறைகூவலாய்
அனைத்தையும் சுழலவைதுக் கொண்டிருந்தது காற்று!
வருகிறேன் என சொன்னதுதான் தாமதம் என்பது போல்,
விருட்டென வந்து கொட்டியது..
இந்த மழை..
எங்கோ சென்றுக்கொண்டிருந்த ஜோடியை,
அந்த பாலத்தின் அடியில் ஒதுங்க வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது!
பேருந்தில் சன்னால் ஓரம் தூங்கிகொண்டிருந்தவரை
சடாரென எழுப்பி விட்டு சிரித்தது மேகக் கூட்டம்!
வேகமாய் தன் கடையை பூட்டிக் கிளம்பியவரை
அதனினும் வேகமாய் திறக்கவைத்து,
சாலையோரம் சென்றுக்கொண்டிருந்தவரை தஞ்சம் அடையவைத்து,
அவர் மேல் சாரல் புன்னகை விசிக்கொண்டிருந்தது!
ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டும் வாழும்-
அற்ப ஜீவனாய் ரோட்டோராதில் உறங்கிக்கொண்டிருந்தவரை,
உதற வைத்து இரக்கமின்றி அவரிடத்தை ஈரமாக்கி விட்டிருந்தது-
தான் மண் மீது கொண்ட உரிமை பத்திரம் காட்டி!
கொஞ்சம் பயந்தார் போல் தான் வேகமாய் ஓடியது,
அவரிடத்தில் விழுந்த நீர் உரிமை நிலைநாட்டி இருப்பினும்!
சிலருக்கு அனந்த கண்ணீராக!
சிலருக்கு கொதி நீராக!
உலகிற்கு சம மழை என பெய்த போதும்,
பாகுபாடுகள் பல உண்டு இங்கு!
இரவோடு வந்ததால் இன்னமும் நெருக்கம் உண்டு
கொஞ்சம் வெறுப்போடு!
காலையும் கேட்கலாம் ஈரம் காய்தாலும்
இந்த திடீர் மழையை பற்றி
பலவாறான பேச்சுக்களை!
பார்த்ததை காட்டிலும் கொஞ்சம் அதிகமாய்!