Sunday, August 25, 2013

ஒரு பெண்ணாக

நான் மறந்துவிட்டேன்
உன் கரத்தில் புதைந்த என் கரத்தை
சாலை ஓரம் நடக்கையில்
யாரும் இல்லா இடம் வரும் போது
உன் கரம் தேடி பிடித்த என் சந்தோசம்
நான் மறந்துவிட்டேன்
யாரோடு நீ பேசினாலும்
யாது வேலை எனக்கு இருந்த போதும்
கண்கொட்டாமல் உன்னை பார்த்த நொடிகள்
நான் மறந்துவிட்டேன்
ஊரே கேட்க
உன்னை நான் கேலி செய்து சிரித்த சிரிப்புகள்
நான் மறந்துவிட்டேன்
உன் குறுஞ்செய்தியின் வருகைக்கு காத்திருந்து
கடந்து போன நொடிகளை ஏமாற்றி மீண்டும்
காத்துக்கிடந்த காலங்கள் யாவையும்
நான் மறந்துவிட்டேன்
எனக்காக நீ அழுத அழகை யாவையும்
உன் அழகான பொய்கள் கேட்க நான் பூண்ட பொய் கோபம் யாவையும்
என் சோகம் தீர்க்க நீ சொன்னா வார்த்தைகள் யாவையும்
உன் கண்ணில் என்னை நான் கண்டு வெட்கப்பட்ட நேரம் யாவையும்
என் முகம் எங்கும் பரவிய உன் மூச்சு காற்றையும்
நான் மறந்துவிட்டேன்
என் தந்தைக்கு மகளாய்!
என்றைக்கும் சுமையென சுகமான உன் நினைவுகள்
கண்ணீரால் சூடாக்கும் என் தலையனையை...
ஒரு பெண்ணாக அது வழிந்திட வழி கொடுப்பேன்!