Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Monday, December 16, 2013

கண்ணில் நீர் மல்க மகிழ்வேன்

ள்ளி செல்ல பிள்ளைகள் அழுவதும்
உற்றவர் மாண்டதும் பெற்றவர் அழுவதும்
படிப்பின் பயன் பின் நாளில் என்னவென்று தெரியாது பிள்ளைக்கு
மாண்டபின் என்னவென்று உணராது மூட மதியும்
கடந்த நிலை கனவுகளை ஆளும் பொழுது
இருக்கும் நிலையே நினைவில் இல்லாது போகும்
இன்று வந்ததே நாளை வரவே
நாளை வரப்போவதே எப்போதும் கலைந்து போகும் கனவே
பிறக்கும் வரை பிண்டம்
இருக்கும் வரை பெயர்
விட்ட மூச்சை இழுக்க மறந்து விட்டால் கூடு
இதில் நான் எங்கு வந்தேன்
என்னுடையது என்று எதை நான் எங்கு எடுத்து வைப்பேன்
எடுத்தே வைத்தாலும் – வைத்ததை
கூடு கூடு என கூடிக் கழித்து விழும் கூட்டில் எங்கு சுமப்பேன்
மகிழ்ச்சியை காசு கொண்டு கணக்கிட்டு
சிரிப்பினை கொண்டு மகிழ்ச்சியை இடைபோட்டு
கூடு விழும் நாள் வரை நாடு பல தேடி
உன்னை உணராது இழுக்க மறந்துபோவேனோ
பரம்பொருள் உன்னை கண்ட பின் சிரிப்புக்கு மட்டும் இடம் ஏது
வாழ்க்கையே வெறும் புல்லி என்று ஆனா பின் மரணமா வலித்திடும்!
காலமெனும் சிலந்தி எம் தோல் எல்லாம் வலை பின்னி
மயிர் சாயம் வெளுத்து
வானம் பார்த்த பூமியென தலையாகி
உறவுகள் என்ற இச்சையோடு இணங்கி
போகும் நாள் வரை பிடித்திருந்தால்
காலன் அவன் இழுக்கையில் எங்ஙனம் உணர்ந்து செல்ல
பெற்றதை எல்லாம் தந்து
கொண்டதை எல்லாம் கொடுத்து தீர்த்து
உண்டதை எல்லாம் சீரணித்து
போகும் வழி பார்த்து இருப்பின்
நீ அழைக்கையில் தானே எழுந்து
பின்னே ஒட்டிய மண்னைகூட துடைத்து வந்து
உன் பாதம் பற்றி அமர்வேன்
அமரனாவேன்!



Saturday, July 21, 2012

எதையும் நம்பிடேன்


வனே இல்லை எனில் என் தமிழ் வளர்ந்தது எவ்வண்ணம்
அவனை பரிகாசம் செய்யின்.,
திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் ஏற்றிய பாடல் கூற்று என்ன?
திருமூலர் சொன்னா திருமந்திரம் பொய்யென கொள்வேனோ?
இவன் பேச்சில் பெரிய புராணம் புதைந்துவிடின் என் தமிழ் என்னவாவது?
இன்னமும் கரம் பிடித்து தடுமாறி நடக்கும் – அறுவியல்
சொல்லும் நாள் வரை அவனை எண்ணாது இருக்குமோ என் மனம்
எல்லாம் அவன் என்றும்
அவன் என்னுள்ளும் என்ற பின்
இன்னும் தெருவில் தேடுவேனோ?
ஆனால் கையில் விதை இருக்க நிழல் கிட்டிடுமோ?
எடுத்து எரிந்து விட்டால் வளர்திடுமோ?
மூலவர் அவர் மந்திரமும்  இதுவன்றோ
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
எம் பசுவும் பால் சொரியும்
வெறி ஐந்தும் அடக்கிட முடியும்
என்னை நான் மேய்ப்பேன்!
என்னை என்னுள் கண்ட பிறகு தெரியும் அவன் யார் என்பது
அதுவரை நம்பிடேன் யவர் கூற்றும்!
சொல்லும் சொல் வண்ணமே கேட்கையில் சிலிர்த்திடும் என் மனமே
நம்பிடாதே நம்பி நின்றிடாதே
கேட்கையில் கிட்டிடும் சிலிர்ப்பை காட்டிலும் பெரியது காண்போம்
மெய்யாய் நாம் உணரும் போது!
அதனால் நம்பிடேன் யவர் கூற்றும்!





--சித்ரன்

Saturday, June 23, 2012

குரு

யாதுமானவன்
யாதும் அவன்
என்னுள் எனதை தேடிக்கொள்ள
கற்றுத்தருபவன் - அவன்
எல்லாம் என்னவென்ற கேள்விக்கும்
எல்லாவற்றிலும் நான் யார் என்ற கேள்விக்கும் 
விடை தேட வழி சொல்பவன்  அவன்
மூன்றில் என்னை முதன்மை படுத்தி
உணர்ந்திட உதவுபவன்  அவன்
கட்டுண்டு கிடப்பவன் அன்றே அவன்
கட்டுண்டு இருப்பின் என் கட்டை அவிழ்ப்பது எவ்வாறோ?
சுதந்திரமானவன்
சூத்திரங்கள் உமிழ்பவன்
கர்மம் அறுத்தவன்
தர்மம் அறிந்தவன்  அவன்
கோடியில் ஒருவன் அல்ல என் குரு
கோடிக்கணக்கானோர் என் குரு.