Thursday, March 29, 2012

என்னோடு என்னைக்கொல்லும் துரோகி



கண்கள் விழிக்கவே வெறுப்பாக இருந்தது. இருத்தும் விழித்து விட்டத்தை பார்த்தவாறே படுத்திருந்தான். கண்கள் கலங்கின. வெறுப்போடு அதை துடைத்து எறிந்தான். முகம் முழுக்க வெறுப்பு தொற்றிக்கொண்டு இருந்தது.

அப்போது தான் வந்தான் உள்ளே அவன். இன்னும் அதிக நிசப்தம் அந்த அறையில் நிலவியது. வந்தவன் முகத்தை பார்க்கக் கூட விரும்பாதவனாய் மறு புறம் திருப்பிக் கொண்டான்.

சில நிமிடங்கள் நிசப்தத்தோடே நகர்ந்தது. இன்னும் வெறுப்பு ஏறி முகம் சிவக்க அவனை பார்த்து கத்தினான்..

எங்க டா வந்தே?? உன்ன எல்லா.. இச்ச. பாரு இப்போ தினமும் என் முஞ்சி மாறுது. முன்னாடி எல்லாம் சொல்லுவியே கண்ணாடியே பார்த்து தல சீவிவிட்டு வான்னு. அப்போ எல்லாம் அதை பார்த்ததே இல்ல. ஆனா இப்போ தினம் தினம் .. ஒரு நாளிக்கே பல தடவ பார்க்கறே.. அப்டியே தா..

சொல்லி முடிக்கும் முன்னரே குரல் தழுதழுத்தது. கொஞ்சம் ஆசுவாசம் படுத்திக்கொண்டு மூக்கை துடைத்துக் கொண்டு தொடர்ந்தான்

அப்டியே தான் இருகேனானு... தலைய கோதின கையில அவ்ளோ முடி சின்ன புன்னகைக்கு பின் தொடந்தான் இந்த இதுக்கு எத்தன கடை ஏறி.. எந்த எந்த சலூன்.. கிரீன் இட்டிரேன்ஸ்...இச்ச...

தலையில் அடித்துக் கொண்டு தொடர்ந்தான்.. கண்கள் கலங்கிய படி..

வாயால சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சு தெரியுமா? காலைல சரியா பாத் ரூம் கூட போக முடியல.

இடைமறிக்க முயன்றவனை பார்த்து, கண்களை வேகமாக துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்த்து

டேய் பேசாத சாவடுச்சுடுவேன்

 கைகள் உதற ஆரம்பித்தன, மேல் மூச்சு வாங்கியது. மீண்டும் மீண்டும் கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே இருந்தான். வந்தவனுக்கு ஏது சொல்வது என்று தெரியாமல், வெளியே போகவும் தோணாமல் பேச்சு வாங்கியப்படி நின்றிருந்தான்.

எங்கே வலிக்குதுனே தெரியாது. ரொம்ப நேரம் தூங்கினா எங்கே செத்து போய்டேனோனு தூக்கத்திலயே பயமா இருக்கு. சொல்லிக்கொண்டே வெறுப்போடு அவனை ஒரு பார்வை பார்த்தான். வந்தவனுக்கு கைகள் விறைத்து போய்விட்டிருந்தது. வந்தவன் முகத்தை பார்க்க பார்க்க இவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கத்ததத் துவங்கினான்.

எப்டி டா உனக்கு எல்லா ஒன்னும் ஆகல.. நல்லா இருக்க.. ஏன்டா இப்டி எல்லாரையும் சாகடிக்கறீங்க. தூ.. இதே மாதிரி எத்தன பேரை சாகடிச்சிருப்ப.. உன்ன மாறி ஆளுங்கள கொன்னா என்ன?”

சத்தம் கதவுகளை தாண்ட, வெளிய அமர்ந்து இருந்த செவிலி உள்ளே ஓடி வந்து அவனை அமைதியாக்கினாள். வந்தவனை அந்த அறையை விட்டு வெளியே கூட்டிச் சென்றாள்.

நீங்க தான் அவர் ரூம்மெட்டா?”

ம்ம்

சிகரெட் பழக்கம் இருக்கா?”

ஆமா, ஆன..

அவர் சும்மா செக் அப் வந்தப்ப டாக்டர் அவருக்கு பழக்கம் இல்லை அப்டிங்கரத நம்பவே இல்ல. போக போக தான் தெருஞ்சது பெசிவ் ஸ்மொகர் அப்டினு. மத்த புகை எல்லாம் ஒரு பக்கம்ன.. இது வேற மாதிரி சார். நீங்க இழுத்து வெளியே விட்டுருவீங்க ஆனா பெசிவ் ஸ்மொகர்ஸ் அத உள்ள இழுகரதொட சரி வெளிய வராது. புரியுதுங்களா?”

மேற்கொண்டு அவனால் ஒன்றும் கேட்க முடியவில்லை. முகத்தை மறைத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வேகமாக வெளியே நடந்தான். வழியில் யாரோ ஒருவர் புகைதுக்கொண்டு இருக்க அருகில் நின்றிருந்த கர்பஸ்திரியையும் ஒரு நொடி நின்று பார்த்து நடந்தான்.

Thursday, March 22, 2012

நான் கேட்பதெல்லாம்

ங்களிடம் புது சட்டை கேட்கவில்லை
கிழிந்த என் சட்டையை தைக்க கற்றுக்கொடுங்கள் என கேட்டு நிற்கிறேன்
உங்கள் கரம் பிடித்து நடக்க வேண்டாம்
என் பாதையை விட்டு நீங்கள் விலகி நடத்தால் போதும் என்கிறேன்
உங்கள் அறிவுரைகளை நான் கேட்பதில்லை
என் அறிவு பசிக்கு தீனி கேட்கிறேன்
உங்களின் உபதேசம் தேவையில்லை
கலந்துரையாடி அறிவு பெற எண்ணுகிறேன்
தோள் கொடுத்து தூக்கிவிட வேண்டாம்
என் கால்களை இடராது இருங்கள்
நாங்கள் வளர்ந்து கொள்வோம்
எங்கள் எண்ணங்களை கொல்லாது இருந்தால் போதும்
உங்கள் ரசனைக்கு என்னை தீனியாக்காதீர்கள்
எனக்கென்று ரசனைகள் உண்டு, மதிப்பு கொடுங்கள் போதும்
உங்கள் கனவுகளுக்கு என்னை செயலாக்கம் செய்யாதீர்கள்
நீங்கள் இடறிய பாதையில் என் பயணத்தை தடுக்காதீர்கள்
தானாய் இடறி விழுந்தால் நானாய் எழ கற்றுக்கொள்வேன்

என்னை விட்டு விடுங்கள்!



Monday, March 19, 2012

நீ கனவல்ல

ன் கரம் பிடித்து ஆரம்பித்த கடலில்
இன்று நான் மட்டும் தன்னந்தனியாக
நால் கரைகளும் இருளானதே
என் கண்கள் ஏதும் காண மறுக்கிறதே
ஆழம் போய் முத்தெடுத்து 
ஒளியில் உன் முகம் கண்டேன் வழிநெடுகில்
உன் மதி முகம் என் மதி மயக்கி நான் விழவில்லை
நிகழ்திடக் கூடும் என எதிர்பார்க்கும் வேளைக்கும்
நடந்து விட்டதை உணரும் தருணத்திற்கும்
இடையில் நாம் விழுந்து கிடந்ததை உணர்தோம்
மற்ற உணர்வுகள் எலும்பும் முன்
நீ எழுந்து சென்றது தெரியாமல் இன்றும் அதே உணர்வோடு  நான்
மதியில் உன் முகம் கண்டு சிரிக்கிறேன் மூழ்குவது அறிந்தும்
நீ என்னோடு இருப்பது கனவல்ல

கனவுகள் தான் என் வாழ்க்கை!




Tuesday, March 13, 2012

தாயுமானவன் நான்

யிலில் 
என் எதிரில் அமர்ந்து இருக்கும் குழந்தை 
கையை சன்னல் வழி வெளி நீட்ட
அதன் தாயானவள் அதட்டி கை இரண்டை கட்ட வைத்தாள்..
அது கண்டு ரசித்து புன்னகையுடன் தலை திருப்பின்
எதற்கோ அழுகின்ற அந்த குண்டு குழந்தையை 
துக்கி போட்டு, வயிறில் வாய் வைத்து ஊதி
தந்தை சிரிக்க வைக்க போராடிக்கொண்டிருந்தார்..
நானும் இப்படி தான்
திசை மாறி போகும் என் மனதை அதட்டி
அடக்குகிறேன் சில நேரம் தாயாய்
இழந்ததை நினைத்து அழும் பொழுது
தேற்றுகிறேன் தந்தையாய்!
என் மனதிற்கு தாயுமானவனாய் நான்!!!





Saturday, March 3, 2012

கர்மம்

ரணம் வருதல் யாரும் அறிவதும் இல்லை,
போபவன் அறியாவண்ணம் அது வந்து கடந்து போவதும் இல்லை
மூச்சை விட்டபின் யாது நிகழ்வென்று அறியா போது
அதை சாபம் என்று கூறுதல் பகுத்தறிவில்லை!
போகின்ற காலம் நெருங்கும் போது 
யாவையில் இருந்தும் விலகி வாழ்வது நன்று
காலன் அவன் இழுக்கும் தருணம் 
அங்கத்தில் உயிர் சிக்கிட சிதைந்திட கூடும்!
நம் தாகம் தீர்க்க செய்த செயல் தந்த பலன்கள் யாவைகும் 
வழி செய்து தருதல் கடன் என்று ஆகும்.
இந்த கடனும் கர்மமென்றாகும்..!
நம் வழி பயணம் துடங்க துணை ஒன்று தேடுதல்
இணை என்று கொண்ட பின் 
இணங்கி நடத்தல் முறையென்று கொள்க!
இந்த முறையும் கர்மமென்றாகும்..!
மனம் கொண்டதில் சென்று
தொழில் செய்து பணம் பார்த்தல்..
கற்றது கொண்டு செயல் செய்து வாழ்தல்..
பதின் காலம் எல்லாம் கலைகள் செய்தல்..
நட்பு பாராட்டி சிரித்து அழுது
அடித்து சேர்ந்து ஒழுகுதல்
தாயும் தந்தையையும் மதித்து நடத்தல் கடமை என்னும் கர்மம்!
வெளிவரும் வழி தடங்கள் இன்றி இருத்தலும்
தண்ணீர் குடத்தில் மிதக்கும் தருணம் வளரும் யாவையும்
குடம் நோக்கியே பயணம் முதல் தொடங்கும்  கர்மம்
எங்கிருந்து ஒட்டி வருகிறது என்று அறிந்து யாது செய்ய?

இனி செய்யும் கர்மம் ஏதோ பார்த்து செய்க..



Friday, March 2, 2012

நம்பப்படவேண்டியவர்

டவுள்,
யாருக்கும் நிரூபிக்க படவேண்டியவர் அல்ல,
நம்பப்படவேண்டியவர்
அவர் இனி தருவதற்கு ஏதும் இல்லை என!
நம்முள் இருக்கும் நம்பிக்கை என்னும் விதை
அது ஒன்று போதாதா?
இன்னும் அவர் மேல் நம்பிக்கை இல்லாமல்
அவர் பால் கோவிலுக்கு சென்று கேட்பது வேண்டாம்!