Thursday, February 13, 2014

பொழிந்திட வா!

வெளுத்திருந்த வானம் எங்கும் முகில் வந்தது
சேர்த்த முகில் அனைத்தும் உடைந்தது
உடைந்த முகில் நீராய் பொழிந்தது
பொழியும் நீராய் நீயே வந்தாய் என்றே ஓடினேன்
நான் வேகம் கூட்டுவதற்குள் ஏன் நின்றாய்??
ஒரு துளியும் நினையாமல்
உன் நினைவில் நான் நின்றேன் மீண்டும் வெளுத்த வானடியில்
மீண்டும் வருவாய் என்று இன்னும் நிற்கிறேன்
நீ பொழிந்தால் போகும் என் மீது நான் பூசிய கரையாவும்
போகும் போனது போனபின்னர் நான் மீண்டும் பிறப்பேன்
பிறந்த என்னை கையில் ஏந்த நீயே வா
நீ வருவாய் என்றே சிரித்துகொண்டு நானும் பிறப்பேன்!
உன் கரத்தில் நான் விளையாடிட
என் கண்ணின் விழியில் நீ உன்னை தேடிட
உன்னை கிள்ளி
உன் கரத்தில் இருந்து நான் கிளம்பிட
நீ துரத்தி வா என்னை
இந்த விளையாட்டு விளையாடிட
என்னை நினைக்க வா
இன்னும் நிற்கிறேன் வா அடியே
என்னை கலைத்து விட்டு போன நீயே – வா
என் மீது பொழிந்திட!





Saturday, February 8, 2014

அனுபவம் புதுமை

நீ மழலை இல்லை
இருந்தும் என் கையில் ஏந்தத்தவிக்கிறேன்
நீ இல்லாத போதும்
உன்னோடு பேசி சிரிக்கிறேன்
பொத்தி வைத்திருந்த பூவிலிருந்து
ஒரு பட்டம்புச்சி பறந்தது
உன் சிறு பார்வை என்னை கடக்கும் நேரம்
என் நிலை மங்கி உதடுகள் புன்னகை ஒன்று பூத்தது
என்னை நானே ரசித்தேன்
சிறு சிரிப்பால் சாகடித்தாய்
ஒரு புன்னகை வீசி எழுப்பிவிட்டு போனாய்
இன்னும் என்ன செய்வாய் – என்னை
என்றே காத்திருக்கிறேன் தினமும்!
காதல் என்று சொல்லிவிட்டால் கனம் குறையும் என்றே
சொல்லாமல் தாங்கினேன் அதோடு உன்னை!
அருகினில் உன்னை கண்டாலே
துளி துளியாய் சிதறினேன்
பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் படபடக்க!
உன்னோடு பேசிவிட்டு நடக்கும் நேரம்
அனைவரும் எனை ரசிப்பது போல் ஒரு கலக்கம் கொண்டேன்
என்ன? என்ற உன் கேள்விக்கு
எவ்வளவோ பதில் யோசித்தும்
ஒன்றுமில்லை என்று மட்டும் சொல்லி நகர்கிறேன்
உறக்கம் எல்லாம் என் அறையில் உறங்கிட
இரவுகள் எல்லாம் காதல் சாயம் பூசி செல்ல
பகல் எல்லாம் பைத்தியமாய்
கண்ணாடியில் என்னை கண்டே நான் வெட்கம் கொள்ள
குரல்வழி தண்ணிர் இறங்குகையிலேயே தாகம் கொள்ளும்
புது அனுபவம் கற்றேன் – உன்னால்
என்றால் பொய் என்று சொல்லும்
உன் மேல் கொண்ட ஈர்ப்பு!