Sunday, January 14, 2018

கார்பரேட் களவாணிகள்

த்தனை வாரஇறுதி நாட்களில் வேலை செய்யும் நிறுவனம் அழைத்தது என்று மராத்தான் ஓட, மரம் நட சென்றிருகிறீர்கள்.  இப்படி விழுந்து விழுந்து அடுத்த நாட்டுக்கு நன்மை செய்பவர்கள் அவர்களின் சொந்த நாடுகளில் வேலையில் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் இங்கு கடை திறந்திருகிறார்கள் என்பதை மறந்து விடகூடாது.

அவர்கள் தேவை பாதி ஊதியத்தில் வேலை நடக்க வேண்டும் அதற்கான இடம் இந்தியா. அது போக வேலை வாய்பை காரணம் காட்டி உள்நுழைந்து இடம், மின்சாரம், தண்ணீர் என அடிப்படை வசதிகளை சலுகைகளில் பெறலாம். வரி ஏய்ப்பும் இங்கு சுலபம். இது எல்லாவற்றிட்கும் மேல் இப்படி இவர்களையே ஓடவும், செடிகள் நட வைத்து நல்ல பெயர் எடுத்து  தயாரித்த பொருட்களை இங்கேயே விற்றும் விடலாம். அப்படி எனில் அங்கு என்ன வேலையில் இருந்தாலும் அதற்க்கு மார்கெடிங்கும் செய்திருக்கிறீர்கள்.

சால சிறந்த உதாரணம் ITC, இவர்கள் தாயரித்து விற்கும் நோட்டுக்களை வாங்கினால் அதில் ஒரு ரூபாய் ஏழை குழந்தையின் படிப்பிற்கும் போகும். அப்படி எதனை விற்றனர், என்ன பங்கு படிப்பிற்கு போனது, எதனை குழந்தைகள் படித்து வந்தனர் யாருக்கு தெரியும். ஆனால் நல்ல பெயார் கிடைத்து விட்டது. ITC என்றால் Indian Tobacco Company, இதன் பிரதான விற்பனை புகையிலை. 1910 முதல் 1970 வரை Imperial Tobacco Company அதன் பின்னரே ‘I India என மாறியது.

எது எப்படியோ வேலைவாய்ப்பு கிடைகிறதே என எண்ணினால் அதற்க்கு ஒரு கணக்கு, ITCயில் பணியாற்றும் தொழிலாளர்கள் 25,959. இந்தியாவில் 19 வயதிற்கு மேல் 58வயதிற்குள் இருப்பவர்கள் எண்ணிக்கை 60, 95, 45,570 பேர். 0.004% பேருக்கு வேலை தந்துவிட்டு இவர்கள் பெரும் சலுகைகள் எத்தனை? தமிழகமே சுமார் நான்கு ஆண்டுகள் மின்சாரம் இல்லாமல் இருந்த போதும் சென்னைக்கு மட்டும் தினம் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே தடை என இருந்தது இந்த .௦௦4 சதவீதத்திற்காக.


2017 துவக்கத்தில் நடந்த அற்புதமான அறப்போராட்டம் சல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்து தந்தது. இதை முன்னின்று நடத்தியது இளைஞர்கள் என்று பொதுவாய் சொல்வதை காட்டிலும் மாணவர்கள் என்று சொல்வதே நிதர்சனம். IT corridorல் வேலை பார்க்கும் எத்தனை பேர் அந்த மொத்த ஏழு நாட்களும் செல்ல முடிந்தது? இப்படி ஒரு போராட்டம் இங்கு வேலை செய்பவர்களால் சாத்தியமே இல்லை. காரணம் கடன், பிள்ளை படிப்பு.

அரபு நாடுகளில் ஐந்து ஆண்டுகள் தான், அமெரிக்காவில் வட்டி விகிதம்  நான்கு சதவீதர்த்திர்க்கும் குறைவு ஆனால் இந்தியாவில் வீட்டு கடன் கட்ட 15 – 20 ஆண்டுகள் ஆகிறது அதாவது 25 வயதில் கடன் வாங்கினால் கட்டி முடிப்பதற்குள் 40 50 வயது ஆகிவிடும். அப்படி தான் இங்கு ஊதியமும் கட்டுமான செலவுகளும் சரியாக வைக்கபடிருக்கிறது. அது போக குழந்தை படிப்பு, மருத்துவம், தீபாவளிகள், பொங்கல்கள், சடங்குகள் என எல்லாம் வந்து போகும். இதில் அனைத்திலும் இந்த நிறுவனங்களே தான் இருக்கிறது. மருத்துவம் விலை நிர்னினைப்பது, படிப்பு, கடன் வட்டி  விகிதம் என எல்லாம்.

இதில் எல்லாம் தப்பி பிழைத்து வந்தால் ஏன் எதற்கு என்றே சொல்லாமல் ஆயிரக்கணக்கானோர் வேலையிலிருந்து தூக்கிஎறியப்படுவார். எட்டு, பத்து என ஆண்டாண்டு காலம் அந்த நிறுவனங்களுக்காக உழைத்தவர்கள் ஏதேதோ காரணம் சொல்லி வெளியே அனுப்புவர். அந்த கதறல்கள் வாட்ஸ் எப்பில் கேட்டிருக்கலாம். அதன் பின்னர் இருக்கும் கணக்கு இது தான், ஒருவருக்கு ஆண்டுக்கு 10% என ஊதியம் உயர்ந்திருந்தால் முதல் மாதம் துடங்கி பத்து ஆண்டு முடிவில் அது 236% வளர்ந்திருக்கும். ஆனால் அதில் பாதியை தந்தாலே போதும் என அந்த ஆண்டு படிப்பு முடித்து வந்தவர்கள் இருப்பார்கள். இது தான் இவர்கள் தரும் வேலை வாய்ப்பு.

நாமே தயாரித்து, அதற்க்கு மார்கெட்டிங்கும் செய்து, அதையே வாங்கி தின்று தீர்த்து, அதற்கு அவர்களிடமே மருந்தும் வாங்கி விழுங்கி போராடவும் முடியாமல் கடனை  கட்டிக்கொண்டு இன்னும் என்ன என பார்த்தால் இப்போது டெல்லி வாகன புகையால் மூச்சு திணறுகிறது இதற்கான மாற்று வழி மின்சார வாகனம். இது கண்டு பிடிக்கப்பட்டது 1828ல் ஹங்கேரியில்.

அதன் வேகம் அதிக பட்சம் 32km/h எனவே இதன் மீது இருந்த மோகம் குறைந்து எரிபொருள் வாகனகளே சந்தையில் கொடி நாட்டின. இரண்டாம் உலக யுத்தத்தின் போது  ஐரோப்பாவில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் அவர்கள் கவனம் மின்சார வாகனம் மீது திரும்பியது. இன்று மின்சாரம் கொண்டு தொடர்வண்டி இயக்க முடிந்த விஞ்ஞானத்தினால் இதர வாகனம் இயக்கம் பற்றி ஆராய நேரம் இல்லாமல் போனது எரிபொருள் வியாபாரத்தில் ஏற்கனவே முதலீடு செய்த நிறுவனங்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். காலையில் அவசரமாய் ஓடிப்போய் வாங்கும் பச்சை மிளகாய் முதல் தினம் குடிக்கும் பால் விலை மாற்றத்தில் இந்த எரிபொருளின் பங்கு கனிசமானது.

எங்கோ இருக்கும் நிலவில் என்ன இருக்கிறது என்று பார்பதை விடுத்தது எரிபொருளுக்கு மாற்று கண்டறிந்தால் சாமானியனின் வரி பணத்தில் அவனுக்கு தேவையானது கிடைத்திருக்கும். விண்ணில் மிதக்கும் செயற்கை கோள் விழுங்கியது எல்லாம் நம் வரி பணம் அது ஏனோ நமக்கு பயன் தருவதாக இல்லை.

இது மட்டுமில்லை இனி சுய தொழில் என்பதே சாத்தியமில்லா நிலையை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கிறோம். உதாரணம் சொந்தமாக ஆட்டோ வைத்திருக்கலாம் ஆனால் தொழில் செய்ய ஒரு பெரு நிறுவனதில் அதை இனைக்க வேண்டும் - ‘Ola’. நிலம் பண்ணையார்களுடையது விவசாயி தினமும் கூலிக்கு வேலை செய்வான், இந்த நிலையை தான் நிறுவனங்கள் இங்கு நிறுவிவருகின்றனர்.

1757லில் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவை ஆழ துவங்கி 1874லில் பிரிடிசாரின் ஆளுகைக்குள் வந்து 1947லில் சுதந்திரம் பெற்றுவிட்டோம் இனி எந்த நிறுவனதிற்கும் அடிமை இல்லை என எண்ணி இருந்தால் ஒரே ஒரு செய்தி.

சிறுவர்களை குறி வைத்து தான் இங்கு அது விற்பனைக்கு வந்தது - Maggi. 2014 மார்ச் மாதத்தில் உத்திர பிரதேசத்தில் வழக்கமான சோதனைகளின் போது MSG அல்லாத உணவு பொருள் என்று அச்சடிக்கப்படிருந்த அந்த மஞ்சள் பைகளில் MSG இருந்தது. அதை தொடர்ந்து மத்திய உணவு ஆய்வகத்திற்கு அனுப்ப ஏப்ரல் 2015ல் தான் அவர்களின் அறிக்கை வருகிறது. அதுவரை குழந்தைகளுக்கு ஊட்டபட்டுக்கொண்டு தான் இருந்தது. அவ்வறிக்கையில் வந்த அளவானது Nestle நிறுவனம் சொன்ன அளவை வீட சுமார் ஆயிரம் மடங்கு அதிகம். ஆனால் மே மாதம் வரையில் அது ஒரு பெட்டி செய்தியாக தான் இருந்தது. வழக்கம் போல் ‘India wants to know’ என ஊடகங்கள் உறக்கத்தில் இருந்து எழுந்து கதற துவங்க செப்டம்பர் இறுதியில் 38,000 டன் maggi திரும்பபெரப்பட்டு அழிக்கப்பட்டது.

அதாவது இந்த தவறு கண்டறியப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்கள் தாண்டி. அதற்க்கு nestle கட்டிய அபராதம் மூன்று லட்சம் ரூபாய். ஓராண்டு கால இடைவெளியில் என்ன பேரம் பேசப்பட்டது என யாரரிவர்? எந்தனை சிறார்கள் இதை உண்டு ஒவ்வாமைக்கு ஆளானார்கள் யார் கணக்கு பார்த்தனர்? எது எப்படியோ அடுத்த ஒரே ஆண்டில் திரும்பவும் விற்பனைக்கு வந்து விட்டது.

ஒரு சிறு குறிப்பு, MSG -   mono-sodium glutamate – உணவின் சுவை எப்படி இருந்தாலும் அது நல்ல சுவையான உணவு தான் என நம் மூளையை ஏமாற்றும் ஒரு ரசாயினம். இது இயற்கை பழங்கள் காய்களிலும் இருக்கும். ஆனால் அளவானது மீறினால் கெட்டுப்போன பண்டமே ஆனாலும் நம்மக்கு நல்ல சுவையாக தான் தெரியும்.

இது மாட்டிக்கொண்ட மேகியின் கதை மட்டும் தான், இன்னமும் Cola, Pepsi, KFC, McDonald, தினமும் குடிக்கும் டீ, திரையரங்குகளில் இருட்டில் உண்ணும் பாப்கார்ன் என எதில் என்ன இருக்கிறதோ?


இன்னமும் கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என நினைத்து கொண்டிருந்தால் தாய் பாலும் நஞ்சாகும்.