Monday, December 16, 2013

கண்ணில் நீர் மல்க மகிழ்வேன்

ள்ளி செல்ல பிள்ளைகள் அழுவதும்
உற்றவர் மாண்டதும் பெற்றவர் அழுவதும்
படிப்பின் பயன் பின் நாளில் என்னவென்று தெரியாது பிள்ளைக்கு
மாண்டபின் என்னவென்று உணராது மூட மதியும்
கடந்த நிலை கனவுகளை ஆளும் பொழுது
இருக்கும் நிலையே நினைவில் இல்லாது போகும்
இன்று வந்ததே நாளை வரவே
நாளை வரப்போவதே எப்போதும் கலைந்து போகும் கனவே
பிறக்கும் வரை பிண்டம்
இருக்கும் வரை பெயர்
விட்ட மூச்சை இழுக்க மறந்து விட்டால் கூடு
இதில் நான் எங்கு வந்தேன்
என்னுடையது என்று எதை நான் எங்கு எடுத்து வைப்பேன்
எடுத்தே வைத்தாலும் – வைத்ததை
கூடு கூடு என கூடிக் கழித்து விழும் கூட்டில் எங்கு சுமப்பேன்
மகிழ்ச்சியை காசு கொண்டு கணக்கிட்டு
சிரிப்பினை கொண்டு மகிழ்ச்சியை இடைபோட்டு
கூடு விழும் நாள் வரை நாடு பல தேடி
உன்னை உணராது இழுக்க மறந்துபோவேனோ
பரம்பொருள் உன்னை கண்ட பின் சிரிப்புக்கு மட்டும் இடம் ஏது
வாழ்க்கையே வெறும் புல்லி என்று ஆனா பின் மரணமா வலித்திடும்!
காலமெனும் சிலந்தி எம் தோல் எல்லாம் வலை பின்னி
மயிர் சாயம் வெளுத்து
வானம் பார்த்த பூமியென தலையாகி
உறவுகள் என்ற இச்சையோடு இணங்கி
போகும் நாள் வரை பிடித்திருந்தால்
காலன் அவன் இழுக்கையில் எங்ஙனம் உணர்ந்து செல்ல
பெற்றதை எல்லாம் தந்து
கொண்டதை எல்லாம் கொடுத்து தீர்த்து
உண்டதை எல்லாம் சீரணித்து
போகும் வழி பார்த்து இருப்பின்
நீ அழைக்கையில் தானே எழுந்து
பின்னே ஒட்டிய மண்னைகூட துடைத்து வந்து
உன் பாதம் பற்றி அமர்வேன்
அமரனாவேன்!



Sunday, December 1, 2013

மகுடி

ரு முறை உண்டு
தினங்கள் இரண்டு சுருண்டு கிடந்தேன்
உறவுகள் எல்லாம்
மாதம் கிழித்து எறியும் சட்டையென இருந்தேன்
என் வட்டாரத்தில் யாரும் வரலாம்
யவரும் தங்கிட முடியாது
யாரையும் தாங்கிட நான் இல்லை என்றிருந்தேன்
ஒரு முறை பட்ட சலனத்தில்
சிக்கி இப்படி மாறினேனோ
இல்லை இப்பிறப்பே எனக்கு இப்படிதானோ என்றிருந்தேன்
மகுடியாய் வந்தாய்
சிரிக்க வைத்தாய்
என்னை நானே ரசித்தேன்
என் கனவுகளை உணவாய் உண்டாய்
பாவம் ஏதும் பார்க்காதவனுக்கு
பயம் தொற்றிக்கொள்கிறது
என் இருளினை எரித்து
காணாத வெளிச்சம் தந்தாய்
காயத்திற்கு மருந்து தேடாதவனை
உன்னோடு பேச காரணம் தேட வைத்தாய்
இதுவரை தனியாய் இரவும் பகலும் கடந்தவன்
இந்த மகுடிக்கு
ஒவ்வொரு நொடிக்கும் ஏங்கி
உற்றத்தோழனாய் இருந்த தனிமைக்கு பயந்தவனானேன்!



Saturday, November 16, 2013

வா!

ன் அழகை என் கர்வத்தில்
கணக்கிட்டு கொள்ளும் தனித்துவமான என் அழகே
நீண்ட தூரம் நீ சென்று விட்ட போதும்
பேசாமல் நாட்கள் கடந்து போகின்ற போதும்
இன்னும் என் கண்கள் உன்னை காண்கிறதே
என் செவியில் உன் சிரிப்பின் இசை ஒலிக்கிறதே
இரவுகள் கலைந்தாலும்
கண்களில் கனவுகள் உரைகிரதே
யாரென்னை அழைத்த போதும் திரும்பவில்லை நான்
உன் பெயர் வரும் திசை திரும்ப மறக்கவில்லை
யாவரும் தேடும்படி
என்னை நான் துலைத்துவிட்டேன்
உன் கண்கள் என்னை துளைத்தவுடன்
மீண்டும் எய்துவிடதே உன் பார்வையை
இப்போதே இரண்டாக உணர்கிறேன் நான்
இன்னும் என்னை உடைக்காதே
உன்னை அள்ளி அணைக்கையில் ஒட்டிக்கொள்வேன்
வெட்க்க அணையை உடைத்துவிட்டு வா
நீல வானத்தில் மேகம் அள்ளி தெளிப்பேன்
இந்நாள் வரை உன் முகம் காட்டிய
அந்நிலவை கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்வேன்
நீண்ட நிலத்தில்
அடர்ந்த காடுகள் தேடி புற்கள் பறித்துப்பரப்பிவிடுவேன்
உன்னோடு கிடந்து அந்த வானத்தில் மேகம் கலைத்து விளையாடிட
வா!


Monday, November 11, 2013

மிருகம்

சி இருக்கு
சாப்பிட சோறும் இருக்கு
ஆனா சாப்பிட தோனல
நல்லா தூக்கம் வருது
போய் கிடந்து படுத்தா பாதி ராவுல தூக்கம் களையுது
எல்லா சரியா இருக்கு
ஆனா ஏதோ குறையற மாறி இருக்கு
நல்ல பாட்டு கேட்டு
நல்ல நண்பன்கிட்ட பேசி நாள் கலியுது
இன்னு என்னவோ விட்ட மாறியே இருக்கு
இது காதல்னு சொன்னாங்க
ஆனா அது இல்ல ..
முடிக்க வேண்டியது ஒன்னு மிச்சம் இருக்கு
எவனோ ஆரம்பிச்சு வெச்சது இன்னு தலையில கிடக்கு
குரோதம் உள்ள இருக்கு
எல்லா விட்டு போக நானின்னு போதி மரம் பக்கம் போகல
மனுசனா பாக்க தெரிஞ்சாலு ஆதி மிருகம் தானே
இன்னிக்கு கடவுள் மனுசனா வந்து மன்னிக்க கத்துக்கொடுத்தாலு
ஆதில கத்து கொடுத்தது இந்த மிருகம் தானே
அடுச்சது தலைல இல்ல எல்லா மறந்து போக
முதுகுல குத்தினது மருந்து போட கைகூட எட்டல
மூணு தலைமுறை முன்னாடி கடந்த பாதைய கூட மறக்காது
குத்தினவன் முகம் மறக்குமா...




பிழைக்க வழி

சொந்த மண்ணில் பிழைக்க வழியில்லாமல்
என்றோ மனைவியை மீட்க கடந்த அந்த கடல் கடந்து
ஆண்டுகள் நூத்துக்கு மேல் அங்கு  வேர் ஊன்றி
உரிமைக்காக ஏங்கி
உறவை இழந்து
உரிமைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள்
ஒவ்வொருவராக மடிய
போராடியவர்கள் போர் குற்றவாளிகளாக
அவர்களுக்கு உரிய உரிமையும் இல்லாமல்
இழிவாகக் கொல்லப்பட்டு
மிஞ்சிய மக்கள்
இன்று சொந்த மண்ணிலும் திறந்தவெளிச் சிறையில்
இன்னமும் வாழ வழியில்லாமல்
காலம் கழிக்கும் அவர்களுக்கு
தமிழ் தமிழ் என முழங்கி ஆட்சி பிடித்தவர்கள்
மத்தியில் கிடைத்த பங்கிற்கு விலை போய்
மொழிக்கு ரயில் மறியல் செய்தவர்கள்
அம்மொழி பேசும் மக்கள் மானம் இழந்த போது
மொழியை செம்மொழியாக்கி மார்தட்டியவர்களா
நியாயம் பேசுவார்கள்?
ஆள்பவர்கள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி நிலையம் வைத்திருந்தும்
தம் மக்கள் அவலம் ஏதும் சொல்லாமல்
தீபாவளி பொங்கலுக்கு சிறப்பு படங்கள் மட்டும் நிறுத்தாது போடவர்களா
நியாயம் பேசுவார்கள்?
அவலங்கள் பதித்த குருந்தகுடுகள் வெளி வராது
வெளியிட்டவர்களை தண்டித்து
போராடியவர்களை கைதி செய்து
தம் மக்களை எரித்தவர்களின் கொடியை எரித்தது குற்றம் என்றனர்.
தமிழ் பேசி கட்சி வளர்த்த இவர்கள் மறைக்க நினைத்த
ஒவ்வொரு காட்சியையும் உலகிற்கு காட்டி விட்டது
ஆங்கிலம் பேசும் தொலைக்காட்சி!
தமிழை டமில் என்று உச்சரிபவர்கள் தான் இன்று குரல் கொடுக்கின்றனர்
தமிழர்களுக்காக..
புலம்பெயர்ந்தவர்களை கொல்ல ஆயுதமும் ஆட்களையும்
தந்து தந்து உதவியவர்களா போர் முறை தவறியவர்களை தண்டிப்பார்கள்?
தன் மண்ணில் பிழைக்க வழியில்லாமல் சென்ற
சொந்த மகள்களை பலாத்காரம் செய்ய பயிற்சி அழித்தவர்களா
நியாயம் பேசுவார்கள்?
சுதந்திரத்தின் போது கொடுத்த அத்துணை வாக்கையும்
ஆண்டுகள் உருண்டோடியும் தலைகள் பல உருண்டும்
சொந்த மண்ணிலேயே கைதிகளாய்
எந்த நடத்தைக்கும் சந்தேகத்துக்கு உரியவர்களாய்
தினம் தினம் சொந்த கஷ்மீர் மக்களையே ஏமாற்றி வரும்
இந்த இந்தியாவா புலம்பெயர்ந்தவர்களுக்கு பிழைக்க வழி சொல்லிவிடும்?





Wednesday, October 16, 2013

நிலாவொளி நிழல்

நிலாவொளி நிழலோடு நான் நடக்கையில்
உன்னோடு நடந்த அந்த ஞாபகம் எல்லா தெறிக்க
எட்டாத அன்னிலவில் உன் முகம் கண்டு என் பாதை நான் மறக்க
நீ இப்போ என்னோடு இல்லையே என்ற எண்ணம் நான் மறக்கவோ
பிறை என்றாலும் உன் சிரிப்பை காணமல் போவேனோ...
கருசக்காட்டு பக்கம் வானத்தில் மேகம் ஏதும் கூடாம
மண்ணெல்லாம் ஈரம் காஞ்சு கிடப்பது போல
இனி விழ துளி இல்லைனு கண் காஞ்சு நிக்க
உன் பேர் கேட்கும் போது எல்லா அடி வயித்தில் புளி கரைக்க
ஏமாற போறேன்னு தெருஞ்சே
உதிர்ந்த பட்டாம்பபூச்சி இறகா ஓசை வந்த திசை திரும்பி
சீனி தின்ன வந்து, ஊதின காற்றில் பறந்து விழும் எறும்பா ஏமாந்து நிப்பேன்
ஊரெல்லாம் அடங்கி ஏத்தின விளக்கு திரி கருகி போக
இன்னும் என் மனசுல நடக்கும் போர் முடியல
முடுச்சு வெக்க நீ இல்ல
முடுச்சு போட உன் கழுத்தும் இல்ல
கண்ணு தூங்க போனாலு கொடுக்கர தெய்வம் தான் கூரை பிரிக்கறதா
வீட்டு கூரையையே கொட்ட கொட்ட பார்த்து போகுது இந்த ரா பொழுது
எங்கே கிடந்தாலு நீ வந்து மிதிக்கவே விட்டம் பார்த்து கிடக்கும் நெஞ்சு
நஞ்சு எடுத்து குடுச்சாலு கண்ணுறக்கம் வரதில்லையே
நீ வந்து முடி கோதி உன் மடி கொடுத்து செத்து போனு சொல்லு
ஏதும் சொல்லாம போகும் இந்த உசுரு...




Sunday, August 25, 2013

ஒரு பெண்ணாக

நான் மறந்துவிட்டேன்
உன் கரத்தில் புதைந்த என் கரத்தை
சாலை ஓரம் நடக்கையில்
யாரும் இல்லா இடம் வரும் போது
உன் கரம் தேடி பிடித்த என் சந்தோசம்
நான் மறந்துவிட்டேன்
யாரோடு நீ பேசினாலும்
யாது வேலை எனக்கு இருந்த போதும்
கண்கொட்டாமல் உன்னை பார்த்த நொடிகள்
நான் மறந்துவிட்டேன்
ஊரே கேட்க
உன்னை நான் கேலி செய்து சிரித்த சிரிப்புகள்
நான் மறந்துவிட்டேன்
உன் குறுஞ்செய்தியின் வருகைக்கு காத்திருந்து
கடந்து போன நொடிகளை ஏமாற்றி மீண்டும்
காத்துக்கிடந்த காலங்கள் யாவையும்
நான் மறந்துவிட்டேன்
எனக்காக நீ அழுத அழகை யாவையும்
உன் அழகான பொய்கள் கேட்க நான் பூண்ட பொய் கோபம் யாவையும்
என் சோகம் தீர்க்க நீ சொன்னா வார்த்தைகள் யாவையும்
உன் கண்ணில் என்னை நான் கண்டு வெட்கப்பட்ட நேரம் யாவையும்
என் முகம் எங்கும் பரவிய உன் மூச்சு காற்றையும்
நான் மறந்துவிட்டேன்
என் தந்தைக்கு மகளாய்!
என்றைக்கும் சுமையென சுகமான உன் நினைவுகள்
கண்ணீரால் சூடாக்கும் என் தலையனையை...
ஒரு பெண்ணாக அது வழிந்திட வழி கொடுப்பேன்!







Saturday, July 6, 2013

அவளும் நானும்

அவள்: கிளம்பியாச்சா??
நான்: ம்ம்ம்.. Bus ல தான் இருக்கேன்
அவள்: ம்ம்ம்
நான்: ....
அவள்: ம்ம் நாளைக்கு .. ... சரி.. சாப்டியா?
நான்: எப்பவு travel முன்னாடி சாப்பிட மாட்டேன்.
அவள்: பசிக்காது..?? சரி water bottle வாங்கினியா?
நான்: இல்ல.. எப்பவும் வாங்க மாட்டேன்
அவள்: நீ வாங்கலைனா நா தூங்க மாட்டே
நான்: எய்.. எப்பவு வாங்க மாட்டே
அவள்: நீ இப்போ வாங்கு
நான்: சொன்னா கேளு.. இறங்கி போய் வாங்கனு.. வேண்டா
அவள்: வாங்குன்னு சொன்னே
நான்: (பல்லை கடித்து) நா வாங்கிக்கறேன்
அவள்: (மெல்லிய குரலில்) நா ரொம்ப தொல்ல பண்றேன்னா??
நான்: இல்ல.. அப்டி இல்ல.. நா ... ...
அவள்: (சத்தமாக) அப்டிதா ...  நீ போய் water bottle வாங்கு.. போ.................
நான்: (சிரித்து கொண்டே) loose பன்னி ..

Wednesday, June 19, 2013

வேண்டும்!!!

கால்கள் தோய காடு மலை கடந்து நடக்க வேண்டும்
கையில் ஏந்தாது அப்படியே ஆற்றில் நீர் அருந்த வேண்டும்
அருவியின் மடியில் நான் என்பதும் எந்த நாள் என்பதும் மறந்து கிடக்க வேண்டும்
கடந்து போகும் மேகம் எல்லாம் கலைத்து புது படம் வரைந்து விளையாட வேண்டும்
இன்னும் ஒரு மனித மணம் இல்லாத இடம் தேடி
இமைகள் சேர்ந்தோ பிரிந்தோ இருப்பது தெரியா வண்ணம் - இருட்டில் 
கிடந்தது உறங்க வேண்டும்
தண்ணீர் தண்ணீர் என்று தாகம் எடுக்க வெயில் அடியில் நடக்க வேண்டும்
நிழல் கூட விழாத இடத்தில் வெயில் தேடியும் நடக்க வேண்டும்
உயிர்கள் காண கண்கள் விரிய
பயம் போக காணும் உயிர்கள் இடத்திலெல்லாம் ஓடி விளையாடிட வேண்டும்
பசிக்க பசிக்க நாவு தழு தழுக்க உணவு தேடியும் ஓடிட வேண்டும்
மணல் மணல் என காணும் இடமெல்லாம் அலை மணல் என வனம் கடந்திட வேண்டும்
ஒரு பனை மர நிழல் தேடி அலைந்திட வேண்டும்
இரத்த நாளம் உறைய வெள்ளை பனியில் கிடந்தது வெயிலுக்கும் அழுதிட வேண்டும்
உயிரையும் உறயவைக்கும் பனிக்காற்றில் மூக்கின் துவாரம் வழி ரத்தம் கசிந்த போதும்
இன்னும் வேண்டுமென்பேன்
வெயிலால் கால்கள் கந்தி நடுக்கி, வீங்கி வெடித்திடும் போதும் 
இன்னும் வேண்டுமென்பேன்
பசியால் வயிறு ஒட்டி
கண்கள் காட்சிகளை காண மறுக்கும் போதும்
நா வறண்டு குரல்வளை எச்சில் விழுங்க முடியாத போதும்
நெஞ்சு அடைத்து இதயம் வெடித்திடும் நிலை வந்த போதும்
தலை எல்லாம் சூடேறிய போதும்
இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டுமென்பேன்!



Friday, June 14, 2013

:)

நிலவொளியில்
உன் நினைவில்
சிறு சிரிப்போடு நான்!






Tuesday, May 21, 2013

எப்போ வர போரே!

ப்போ வர போரே
வாங்கி வெச்ச தேனீர் ஆறி திரிஞ்சு போச்சு
காத்து காத்து நின்னு
காலில் எறும்பு ஊறி தடம் பதிஞ்சு போச்சு
வானம் பாத்து பாத்து பெருமூச்சு விட்டு மேகம் எல்லா
கலஞ்சு போச்சு
நீ வரு வழி பார்த்து பார்த்து
விளக்கு எறுஞ்சு அனஞ்சு பார்வ எடுக்க மறந்து
தூக்கம் தொலஞ்சு போச்சு
நேத்தி நினப்பில இன்னிக்கு காலம் போகுது
இன்னு எத்தன நாள் நானு கடக்க
எப்போ வர போரே
நினைக்க நினைக்க நாளு கடக்குது
கண்ணுல நீர் கண்ணம் வழி வழியுது
நீர் காஞ்சும் வழுஞ்ச தடம் கூட துடைக்க மறந்து அடுத்த
நினப்புக்கு போறேன் தினம் தினம்..
பழைய தடம் தேடி இப்போ புது நீர் வழிஞ்சு
கழுத்து காது மடல் எல்லா நினஞ்சு போச்சு
உன் நினைப்புல கண்ணு வழி வரு நீருல நானு வளருரே
எப்போ வர போரே
என்ன சிருச்சு வளரவைக்க
எப்போ வர போரே!






Friday, March 8, 2013

அவள்!

லகின் ஒவ்வொரு பிறப்பிலும் மீண்டும் பிறப்பவள்..
நேற்று என்னை பெற்றெடுத்து..
எனக்கு கற்பித்து..
என் கரம் பற்றி விளையாடி..
இன்று,
என்னோடு பணிபுறிந்து..
சிரித்து மகிழ்ந்து..
நாளை..
என்னில் பாதியாகி..
எனக்கு உதித்து..
அடம்பிடித்து.. அழுது..
அழவைத்து..
எல்லாமுமாய் என்னை முழுமையாக்கும் அவள்..
அவளில்லையேல் நானில்லை..