Showing posts with label பாசம். Show all posts
Showing posts with label பாசம். Show all posts

Sunday, December 25, 2011

சுயநலம்


பேருந்தில் நின்றிருந்த அம்மாவுக்கு
எழுந்து இருக்கை தருகிறேன்!
சாலையில் கால் இடறி
விழுந்த அம்மாவுக்கு கை கொடுத்து தூக்கி விடுகிறேன்,
அவர் பால் பொருட்களை பொறுக்கி தருகிறேன்!
வேகமாய் செல்லும் போதும் -
யாரும் வழி கேட்டல் நின்று பதில் சொல்கிறேன்!
கண் பார்க்க முடியாது -
வரும் பேருந்து எண் என்ன வென்று கேட்கும் அம்மாவுக்கு
நான் கடுப்பில் இருந்த போதும் நிதானமாய் பார்த்து சொல்கிறேன்!
எங்கோ நான் இல்லாது
தனியாய் பேருந்தில் போகும்,
தினம் சாலையை கடக்கும்
என் அம்மாவுக்கு யாரேனும்
இது போல் உதவி செய்வர் என்ற சுயநலத்தோடு!

-- சித்ரன்




Sunday, November 13, 2011

எ மக!

ன் பிரணாப் பெருங்கனலால்
என் இனயவள் உதிர்த்த
வியர்வையின் உன்னதம் நீ!
உன்னை நுட்பமாய் தொட்டு ரசித்து சொல்லும்போது
எதுவும் புரியாமலேயே அவளோடு சிரிப்பேன்!
நீ நடக்கும்வரை நானும் உன்னோடு தவழ்வேன்,
அந்த வெயிலின் வெப்பத்தால் மட்டும்மல்ல -
என் உள்ளங்கையின் வெப்பத்தால் வளர்பவள் நீ,
என் கை பிடித்து நடக்கும் என் அன்னை நீ,
என் மார்பில் தூங்கும் என் அன்னை நீ,
சாப்பிட மறுத்து என் முகத்தில் உமிழ்ம் என் அன்னை நீ,
பள்ளி செல்ல அடம் பிடிக்கும் என் அன்னை,
என் தோளில் சாய்ந்து அழும் என் அன்னை நீ,
தாவணி போட ஊர் பார்க்க
வெட்கத்தில் என் பின்னல் ஓடிப்போய் ஒளியும் என் அன்னை நீ,
அடுத்தவன் கைபிடித்து உன்னை தாரைவாற்கும்போது -
கண்ணீர் துடைக்கும் என் அன்னை நீ,
நான் வளர்க்கும் என் அன்னை நீ,
என் வாழ்வின் ஆதாரம் நீ,
எங்கள் காதலின் அடையலாம் நீ,
என் மூன்றாம் அன்னை நீ!

--சித்ரன்