Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Sunday, September 17, 2017

புத்தரின் இனவெறி

னிதா – தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதுவும் பரிச்சயமான பெயர். அவளின் மரணத்திற்கு பின் இருக்கும் அரசியலை தாண்டி, நீட்டை தாண்டி நம்மோடு நம் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை நேற்று வரை பங்கிட்டுக் கொண்டிருந்த ஒருத்தி இன்று இல்லையே என்ற ஆதங்கம் தான் இன்று பலரை உலுக்கியது.

அந்த ஆதங்கம் ரோகிந்திய இன மக்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது மிக வருத்தம்.

யார் இவர்கள், இசுலாமியர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் இன்று அண்ட நாடில்லாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நிற்கும் நாடோடியானவர்கள்.

உலகப் போரில் அமெரிக்கா சப்பானில் வீசிய அணுகுண்டின் வீச்சு இன்னமும் இருப்பதை போல இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியுற்ற போது இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி பிரித்து சுதந்திர வேட்க்கையை நீர்த்து போக செய்த சூழ்ச்சி இன்றும் காச்மீரில் நம் மக்களை இழந்து கொண்டிருகிறோம். அது போல தான் மியான்மர் பர்மாவாக இந்தியாவோடு கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த போது பர்மா மக்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்கள் என்று ஒதுக்கி இந்தியர்களுக்கும், ரோகிந்திய இன மக்களுக்கும் அன்றைய முன்னுரிமை வழங்கியது.


அந்த வெறுப்பு சுதந்திரம் அடைந்து இராணுவ ஆட்சியில் 1982ல் அவர்களின் குடியுரிமை பறிக்கம் அளவு வளர்த்திருந்தது. திருமணம், கல்வி, வழிபாட்டு தளம் என அனைத்தும் மறுக்கப்பட்டன.

8/8 /1988ல் எழும்பும் 8888 (8888 uprising) என மாணவர்களால் ஏற்ப்பட்ட புரட்சியில் ஆங் சங் சுகி அடையாளம் காணப்பட்டார். ஒரு அகிம்சைவாதியாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டார். அந்த புரட்சிக்கு பின்னும் ரோகிந்திய இன மக்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் சுகி இராணுவ ஆட்சியை வெறுத்த இராணுவ அதிகாரிகளை கொண்டு கட்சி ஒன்றை துவங்கி 2015ல் ஆட்சி அமைத்தார். அதன் பின் ரோகிந்திய மக்களின் நிலை இன்னமும் மோசமாது. இதற்க்கு இடையில் 3/9/2014ல் அல் காயிதா அமைப்பு வெளியிட்ட கானொளியில் மியான்மர் முசுலீம்களை நாங்கள் மறக்கவில்லை. அவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் என்றது. அதற்கு அங்கிருந்த முசுலீம் குழுக்கள் எங்கள் தாய்நாட்டிற்கு எந்த அச்சுறுத்தல்களையும் ஏற்க்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இன்று ‘மியான்மருக்கு திரும்புவதை வீட இந்தியாவில் மடிவதே மேல்’ என்ற ஒரு ரோகிந்திய அகதியின் வார்த்தை உணர்த்தும் அவர்கள் நிலையை.

பெளத்த சமயத்தை பிரதானமாக கொண்ட இலங்கையில் நடந்த கொடுமையின் நீட்சியே அதே பௌத்தத்தை கொண்ட மியான்மரில் அரங்கேறி வருகிறது.

துன்பத்துக்கான காரணம் பற்று என்ற புத்தரின் வழிவந்தவர்கள் மியான்மரை தங்கள் நாடு என சொந்தம் கொண்டாடி இவர்களின் குடியிரிமைகளை பறித்து விரட்டும் போது தென்னகத்தில் உள்ளவர்களை கீழ் பிறப்பாகவும், சமணர்களை கழுவேற்றிக் கொன்று தங்கள் சைவ சமயத்தை நிலை நிறுத்திய இந்தியா இவர்களால் தீவிரவாத அச்சுறுத்தல் வரும் என்று தடுப்பதில் எந்த முரணுமில்லை.

அல்லாவின் பெயரை சொன்னதற்காக ஒடுக்கப்பட்ட போது படை திரட்டி போரிட்ட முகமது நபியின் அந்த ஒரு சித்தாந்தத்தை மட்டுமே தவறாக புரிந்து கொண்டு இன்று சில குழுக்கள் அல்லாவின் பெயரை சொல்லி செய்யும் கொடுமைகள் இன்று அனைத்து முசுலிம்களையும் பயங்கரவாதிகளாய் பார்க்க வைக்கிறது.

இங்கு இனம், மொழி, நாடு என்று சொல்லி தினம் பல கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் தனியாக அடையாளப்படுதப்படுவதில்லை. குல்லாவும் தாடியும் வைதிருப்பாதால் இவர்களும் பயங்கரவாதிகள் என சொல்வது நம்மிடையே பகுத்தறிவு குறைவதையே நிருபிக்கிறது.


ஜெர்மனியில் தான் யூதன் என்றால் உடனே விசாரணைக்கு எடுத்து சென்று விடுவர், தான் ஜெர்மானியன் என்றால் தானில்லாது முன்னர் வாழ்த்த மூன்று தலைமுறையினரும் ஜெர்மானியர்கள் தான் என நிருபிக்க வேண்டும் தவறினால் விசாரணை கைதி தான், இது ஹிட்லர் கால நடை முறை. இன்று நாமும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் ஹிட்லரை மட்டும் மனித மிருகம் என திட்டி தீர்த்து கொண்டு.


Saturday, May 31, 2014

யவன் பாடுவான் இனி கீதம்

வனோ என் தெய்வம்
எவன் துஷ்டன் அவனை கண்டு பொருக்காமல்
அவன் தலை கொய்வானோ அவனென்று ஆகாதோ
தவறுகள் கண்டு துடித்து எழுந்து
முடிந்தவரை முட்டி நான் மாண்டால்
என் பின் எவன் எழுந்து தவறுகள் களைய வருவானோ
அவன் என் குல சாமி ஆகானோ
பலனுக்கென்று பாராமல்
யாவருக்கும் தான் கொண்டது கணக்கிடாது
ஈய்து வாழ்பவன் அன்றோ
பின் இறக்காமல் இருந்துகொண்டே இருப்பவனா இறைவன்
இருக்கும் காலம் தொட்டு
வந்ததின் காரணம் உணர்ந்து கடமை முடிப்பவன் வேறு யாரோ
காணும் உயிரெல்லாம் நானே என்று
களத்தில் காண்டிபம் ஏந்தியவனுக்கு
பாடிய கீதம் தானே நான் மேல் சொன்ன தெய்வம் யாவும்
சொன்னது உணராது சொன்னவன் நாமம் சொல்லி மட்டும் இட்டு
இனம் கண்டு குணம் மறந்து
ஈனமாய் வாழும் இவர் மதி உரைக்க
இனி யார் பாடுவர் எந்த கீதம்?



Saturday, January 25, 2014

இனபடுகொலை

ர் இன மக்களை பூண்டோடு அழிப்பது மட்டும் இனபடுகொலை என்றாகாது. இனத்தின் மொழி, சடங்குகள், பழக்கவழக்கங்கள் என அவ்வினத்தின் அடையாளங்கள், அவ்வினம் இவ்வுலகிற்கு ஈட்டித்தந்த கண்டுப்பிடுப்புகள் என ஒட்டுமொத்தத்தையும் ஏதும் இன்றி செய்து அவ்வின மக்களை உயிரோடு விடுவதும் இனபடுகொலையே.

பதினெட்டாம் நுற்றாண்டுற்கு முன்பு இந்தியாவில் எங்கும் பல்கலைக்கழகங்கள் உண்டோ? அதற்க்கு முன்பு இந்த படிப்பறிவு இல்லாமல் தான் வானவியல் சாத்திரங்கள் வந்தது, இரும்பு கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது (இப்போது இருப்பது போன்று இல்லாது இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருந்தது).

எல்லா வணிகமும் நல்ல முறையில் நடந்து செழிப்பாக இருந்த அந்த காலக்கட்டத்தில் இங்கு இருந்தவர்களுக்கு முக்கியமாக இன்று இன்றியமையாததாக கருதப்படும் ஆங்கிலம் என்ற மொழி தெரிந்திருக்கவில்லை.

சீனாவின் மிக சிறந்த அறிஞர் லின் யுதங் தன் நூலான தி விஸ்டம் ஆப் சீனா அண்ட் இந்தியாவில் (The Wisdom of China and India) கணித குறியீடு, கணித சமன்பாடுகள் இலக்கணம் புராதன கதைகள், சதுரங்கம் ஆகியவற்றை, இந்தியாவிடம் இருந்து தான் இந்த உலகம் கற்றுக் கொண்டது என்கிறார்.

இங்கே கலை, கணிதம், அறிவியல், வானவியல், வரலாறு, மொழி என இப்போது பிள்ளைகள் தனித்தனியே படிப்பது எல்லாம் ஆன்மிகம் என்ற ஒன்றில் தான் இருந்தது. கோவில்கள் அன்றைய தினத்தில் வழிப்பாட்டு தளங்காலக மட்டும் இல்லாமால் அறிவை போதிக்கும் பாடசாலைகளாகவும் இருந்தது.

உதாரணம், வழிப்பாடு தளங்களில் உள்ள நவ கிரகங்கள் (9 planets), இவற்றை கண்டறிந்தது யார் என கேட்டால் இப்போது உள்ள பிள்ளைகள் சொல்லும் பெயர் கலிலியோ, பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பின் வாழ்தவர். இந்த நவகிரக வழிபாடு என்பது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு இருந்து வந்துள்ளது. ஆனால் அறிவியலின் தந்தை என அழைக்கபடும், இதை உரைத்தவரான கலிலியோ பிறந்தது ஆறு நூற்றாண்டிற்கு முன்.

பகுத்தறிவு என்பது அறிவுக்கும் அடுத்த நிலை. நடக்கும் ஒன்று நல்லதாயினும் தீயதாயினும் அவற்றில் உள்ள நன்மை தீமைகளை பகுத்து அறிந்து நல்லதை மட்டும் எடுத்து வாழ்வாதாரத்தின் மேன்பாட்டுக்கு பயன்தருமாறு இருத்தல்.

ஆனால் இங்கு பகுத்தறிவாளிகள் என கூறிக் கொள்வோர் கடவுள் இல்லை என்ற பேச்சால் ஆன்மிகம் சார்த்து இருந்த எல்லா வாழ்வாதார மேன்பாட்டு சடங்குகளையும் தீயிட்டு கொளுத்தினர் செய்வோர் அனைவரையும் மதிகெட்டோர் என்றனர்.

பல நூற்றாண்டாக மாட்டின் சாணம் கொண்டு வாசல் தெளித்து கோலம் இட்டவர்களை கழிவில் இறைவி லட்சுமியா என இழித்து பேசியவர்கள். இன்று அறுவியல் சாணத்தில் கிருமி நாசினிகள் உண்டு என சொன்னா போது ஏதும் பேசவில்லை. இன்னமும் வளராத அறுவியல் சொல்வதை நம்பும் இவர்கள்,  நூற்றாண்டுகளாக வந்த பழக்கங்களை அதின் ஆள் அர்த்தத்தை அறியாதவர்கள், பகுக்க தெரியாதவர்கள் பகுத்தறிவாளிகள்.

நேர்மாறான கூற்று இடாலியில் (பைசா) நடந்தது, கலிலியோ தான் எழுதிய "டையலாக் கண்செர்நிங் தெ டூ சீப் வேர்ல்ட் சிஸ்டம்சில்" என்ற நூல்லில் சூரியன் உலகை சுற்றவில்லை உலகம் தான் சூரியனை சுற்றுகிறது என்ற தன் சூரியமைய கொள்கைக்கு நிறைய ஆதாரங்கள் அளித்தார் . ஆனால் அது போப் அர்பன் VIIIஐ தாக்குவது போல் தோன்றியதால், அவர் புலன் விசாரிக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். இது வேறு கதை.

இங்கு பகுத்தறிவாளிகள் செய்திருக்க வேண்டியது, அன்று சில வகுப்பினர் மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆதலால் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்களும் கோவிலினுள் சென்று பயில வழி செய்திருக்க வேண்டும். கோவில்களில் உள்ள கல் வெட்டுக்கள் தெரியா வண்ணம் கற்பூரம் ஏற்றுபவர்களை தடுத்தல். அவர்களுக்கு கோவிலின் உண்மையான அர்த்தத்தை புரியவெய்தல் இது எல்லாம் செய்திருந்தால் பகுத்தறிவாளிகள்.

ஆள்பவர்கள் கையாண்டது இரண்டு வழிகளை. முதல் வழி ஆங்கிலயேர் கையாண்ட வழி பிரித்து ஆளுதல் (Divide & Rule) மொழியின் பெயரால் மக்களாட்சி வந்த நேரத்தில் தேசிய மொழியயை எதிர்த்து ஏதோ தமிழுக்கு பங்கம் வருவதாய் காட்டி ஓட்டு சேர்த்தனர். ஒட்டு மொத்த மக்களையும் தேசிய மொழியாக இருக்கும் இந்தி மொழிக்கு எதிராக நிறுத்தினர்.
பல குறுநில மன்னர்கள் ராஜியங்கலாக, வேறுபட்ட பழக்கவழக்கங்களை கொண்டு, வெவ்வேறு மொழிகள் பேசி இருந்த சிறு நிலங்களை ஒரு நாடாக இனைத்து அதற்க்கான ஒரு பொது தேசிய  மொழியாக இந்தி அருவிக்கப்பட்டது. அதனை கற்க விடாமல் தமிழ் மக்களை தனிமைபட செய்து. மத்திய அரசாங்கம், பிற மாநில மக்களுடன் நல் உறவு இல்லாமல் போனதருக்கு காரணமாய் இருந்தது இந்தி எதிர்ப்பு போராட்டம்.

இப்போது அன்று இருந்த தமிழும் இல்லை, தேசிய மொழியும் இல்லை இங்கு. அந்நிய மொழியாம் ஆங்கிலம் தெரிந்தவர்களே அறிவாளியாக சித்தரிக்க படுகிறார்கள்.
இந்தி ஆதிக்கம் செய்யாமல் தடுத்து, தமிழையும் கல்வி மொழியாக தந்திருந்தால் பகுத்து அறிந்து செயல் பட்ட பகுதரிவாளிகளாய் கொண்டாடலாம். இந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தை பள்ளிகளில் மேலோங்க விட்டது எதனால்.

வெளிநாட்டவரின் யோசனைகளை கண்டு வியக்கும் இவர்கள், வேதம் எல்லாம் பொய் என பொதுவாய் தூக்கி எறிந்த இவர்களுக்கு தெரியுமோ இனி வரும் சமுதாயத்திற்கு தெரியுமோ இல்லையோ, அணுகுண்டு எனப்படும் மிக மோசமான கண்டுபிடுப்பு, வெடித்த நாளில் இருந்து பல நுற்றாண்டு காலம் வெடித்த சுற்றளவில் உயிரினம் வாழ விடாது செய்யும் மிக கொடியதும் சக்திவாய்ந்ததுமான இவற்றின் தந்தை என அறியப்படும் ஜெ. ராபர்ட் ஒப்பென்ஐமர் (J Robert Oppenheimer) ஜப்பானில் இரு குண்டுகள் வெடித்த பின் சொன்னா வார்த்தைகள்,

In battle, in the forest, at the precipice in the mountains,
On the dark great sea, in the midst of javelins and arrows,
In sleep, in confusion, in the depths of shame,
The good deeds a man has done before defend him

பகவத் கீதையில் இருந்து.

மற்றொரு வழி, நம் நீண்ட நாள் நம்பிக்கையை பொய் என உரைப்பின், அதற்க்கு நம்பத்தகும் சான்றுகள் கேட்குமிடத்தில் கவனம் குவியும். அப்படி கடவுள் இல்லை என்ற கோசம் உயர்த்தப்பட்டது.


இதனால் திருமூலரின் திரு மந்திரம் (தமிழ் நூல்) பல விஞ்ஞான மெய்ஞான கூற்றுகள் நிறைந்த நூல் ஒதுக்கப்பட்டது.

“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே
"


இன்று அணுவின் கூறுகளை அன்றே சிவன் மேல் பாடாலாய் பாடியிருந்தார் திருமூலர்.  இவர் வாழ்த்த காலம் ஐந்து முதல் எட்டாம் நுற்றாண்டு முடிய மூவாயிரம் வருடங்கள் வாழ்ந்தவர். தொலைநோக்கி நுண்ணோக்கி போன்றவை வராத காலம், இவை இரண்டும் வந்தது பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னரே. இந்த கூற்றை பகுத்து அறிய முடியாத பகுத்தறிவாளிகள் சொன்னது தான் கடவுள் இல்லை என்ற கூற்று.

Monday, December 16, 2013

கண்ணில் நீர் மல்க மகிழ்வேன்

ள்ளி செல்ல பிள்ளைகள் அழுவதும்
உற்றவர் மாண்டதும் பெற்றவர் அழுவதும்
படிப்பின் பயன் பின் நாளில் என்னவென்று தெரியாது பிள்ளைக்கு
மாண்டபின் என்னவென்று உணராது மூட மதியும்
கடந்த நிலை கனவுகளை ஆளும் பொழுது
இருக்கும் நிலையே நினைவில் இல்லாது போகும்
இன்று வந்ததே நாளை வரவே
நாளை வரப்போவதே எப்போதும் கலைந்து போகும் கனவே
பிறக்கும் வரை பிண்டம்
இருக்கும் வரை பெயர்
விட்ட மூச்சை இழுக்க மறந்து விட்டால் கூடு
இதில் நான் எங்கு வந்தேன்
என்னுடையது என்று எதை நான் எங்கு எடுத்து வைப்பேன்
எடுத்தே வைத்தாலும் – வைத்ததை
கூடு கூடு என கூடிக் கழித்து விழும் கூட்டில் எங்கு சுமப்பேன்
மகிழ்ச்சியை காசு கொண்டு கணக்கிட்டு
சிரிப்பினை கொண்டு மகிழ்ச்சியை இடைபோட்டு
கூடு விழும் நாள் வரை நாடு பல தேடி
உன்னை உணராது இழுக்க மறந்துபோவேனோ
பரம்பொருள் உன்னை கண்ட பின் சிரிப்புக்கு மட்டும் இடம் ஏது
வாழ்க்கையே வெறும் புல்லி என்று ஆனா பின் மரணமா வலித்திடும்!
காலமெனும் சிலந்தி எம் தோல் எல்லாம் வலை பின்னி
மயிர் சாயம் வெளுத்து
வானம் பார்த்த பூமியென தலையாகி
உறவுகள் என்ற இச்சையோடு இணங்கி
போகும் நாள் வரை பிடித்திருந்தால்
காலன் அவன் இழுக்கையில் எங்ஙனம் உணர்ந்து செல்ல
பெற்றதை எல்லாம் தந்து
கொண்டதை எல்லாம் கொடுத்து தீர்த்து
உண்டதை எல்லாம் சீரணித்து
போகும் வழி பார்த்து இருப்பின்
நீ அழைக்கையில் தானே எழுந்து
பின்னே ஒட்டிய மண்னைகூட துடைத்து வந்து
உன் பாதம் பற்றி அமர்வேன்
அமரனாவேன்!



Saturday, July 21, 2012

எதையும் நம்பிடேன்


வனே இல்லை எனில் என் தமிழ் வளர்ந்தது எவ்வண்ணம்
அவனை பரிகாசம் செய்யின்.,
திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் ஏற்றிய பாடல் கூற்று என்ன?
திருமூலர் சொன்னா திருமந்திரம் பொய்யென கொள்வேனோ?
இவன் பேச்சில் பெரிய புராணம் புதைந்துவிடின் என் தமிழ் என்னவாவது?
இன்னமும் கரம் பிடித்து தடுமாறி நடக்கும் – அறுவியல்
சொல்லும் நாள் வரை அவனை எண்ணாது இருக்குமோ என் மனம்
எல்லாம் அவன் என்றும்
அவன் என்னுள்ளும் என்ற பின்
இன்னும் தெருவில் தேடுவேனோ?
ஆனால் கையில் விதை இருக்க நிழல் கிட்டிடுமோ?
எடுத்து எரிந்து விட்டால் வளர்திடுமோ?
மூலவர் அவர் மந்திரமும்  இதுவன்றோ
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
எம் பசுவும் பால் சொரியும்
வெறி ஐந்தும் அடக்கிட முடியும்
என்னை நான் மேய்ப்பேன்!
என்னை என்னுள் கண்ட பிறகு தெரியும் அவன் யார் என்பது
அதுவரை நம்பிடேன் யவர் கூற்றும்!
சொல்லும் சொல் வண்ணமே கேட்கையில் சிலிர்த்திடும் என் மனமே
நம்பிடாதே நம்பி நின்றிடாதே
கேட்கையில் கிட்டிடும் சிலிர்ப்பை காட்டிலும் பெரியது காண்போம்
மெய்யாய் நாம் உணரும் போது!
அதனால் நம்பிடேன் யவர் கூற்றும்!





--சித்ரன்

Saturday, March 3, 2012

கர்மம்

ரணம் வருதல் யாரும் அறிவதும் இல்லை,
போபவன் அறியாவண்ணம் அது வந்து கடந்து போவதும் இல்லை
மூச்சை விட்டபின் யாது நிகழ்வென்று அறியா போது
அதை சாபம் என்று கூறுதல் பகுத்தறிவில்லை!
போகின்ற காலம் நெருங்கும் போது 
யாவையில் இருந்தும் விலகி வாழ்வது நன்று
காலன் அவன் இழுக்கும் தருணம் 
அங்கத்தில் உயிர் சிக்கிட சிதைந்திட கூடும்!
நம் தாகம் தீர்க்க செய்த செயல் தந்த பலன்கள் யாவைகும் 
வழி செய்து தருதல் கடன் என்று ஆகும்.
இந்த கடனும் கர்மமென்றாகும்..!
நம் வழி பயணம் துடங்க துணை ஒன்று தேடுதல்
இணை என்று கொண்ட பின் 
இணங்கி நடத்தல் முறையென்று கொள்க!
இந்த முறையும் கர்மமென்றாகும்..!
மனம் கொண்டதில் சென்று
தொழில் செய்து பணம் பார்த்தல்..
கற்றது கொண்டு செயல் செய்து வாழ்தல்..
பதின் காலம் எல்லாம் கலைகள் செய்தல்..
நட்பு பாராட்டி சிரித்து அழுது
அடித்து சேர்ந்து ஒழுகுதல்
தாயும் தந்தையையும் மதித்து நடத்தல் கடமை என்னும் கர்மம்!
வெளிவரும் வழி தடங்கள் இன்றி இருத்தலும்
தண்ணீர் குடத்தில் மிதக்கும் தருணம் வளரும் யாவையும்
குடம் நோக்கியே பயணம் முதல் தொடங்கும்  கர்மம்
எங்கிருந்து ஒட்டி வருகிறது என்று அறிந்து யாது செய்ய?

இனி செய்யும் கர்மம் ஏதோ பார்த்து செய்க..



Friday, March 2, 2012

நம்பப்படவேண்டியவர்

டவுள்,
யாருக்கும் நிரூபிக்க படவேண்டியவர் அல்ல,
நம்பப்படவேண்டியவர்
அவர் இனி தருவதற்கு ஏதும் இல்லை என!
நம்முள் இருக்கும் நம்பிக்கை என்னும் விதை
அது ஒன்று போதாதா?
இன்னும் அவர் மேல் நம்பிக்கை இல்லாமல்
அவர் பால் கோவிலுக்கு சென்று கேட்பது வேண்டாம்!