Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, May 5, 2019

இயற்கை!

ருட்டிலேயே இருந்து விட்டால் - வெளிச்சம்

போய் வந்தால் கவலை இல்லையே!

இறக்கும் வரை இருந்து விட்டால் - அதுவே

ஒரு சரித்திரம் என்று யாரும் உணர வில்லையே!

பல கோடிகளை கொன்று விட்டு வந்து சேர்ந்தது நீயும் நானும்

இன்னும் இங்கே எதை சேர இத்தனை ஓட்டம்?

சிந்தனை என்பதை நிறுத்திவிட்டால் காடே வீடுதானடி

நாம் அங்கு இருந்தவரையிலே எந்த புலியும் சாகவில்லையே

புலி பசிக்கு மான் தான்

எந்த புலியும் மானின் வம்சம் அழித்ததில்லையே

என்னை உன்னை சாகடிக்கும் ஏதும் இன்று இல்லையே

நானும் நீயும் தின்று ருசிக்கும் கோழி நம்மை வீட கூடவே

நம்மை அழிக்கும் எந்த உயிரும் அத்தனை இன்று இல்லையே

இனி நீயும் நானும் அடித்து கொண்டால் - மீதி

அந்த கடவுள் மட்டுமே!



Monday, November 7, 2016

சீவகாருண்யர்கள்

விருந்திற்கு தான் அழைத்தனர்
சீவகாருண்யர்கள் என்று தான் சொல்லிக்கொண்டனர்
கீரையும் கூட்டும் தான் என்றனர்
அவர் இல் சென்ற போது அவர்கள் சைவம் என்று உணர்த்தியது - வீட்டு வாசலில்
குருதி தேய இணை இணையாய் கிடந்தத மாடுகள்
கல்லூரிக்கு ஓடிய மூத்த மகன் முதுகில் பொதிகள் நிரம்பிய
 கழுத்தறுக்கப்பட்ட குரும்பாடு
அடுத்து வந்த இளைய மகள் இதழில் வழிந்த குரங்கின் கண்ணீர்
அவர் மனைவியின் தோள்லில் தொங்கிய – எழுவது ஆண்டுகள்
என்ற சராசரியை கொண்ட இரண்டே வயதில் கழுத்தறுபட்ட முதலை
அவர் இடையில் நெளிந்த நடு உடலில் கத்தியால் கீறி கிழிக்கப்பட அரவம்
சமணர்களை கழுவேற்றிய சைவத்தினரிடம் யாது காருண்யம் கண்டிட முடியும்!!?



Thursday, July 7, 2016

ஒழுங்கீனம்!

அவள் பொதுவாழ்வில் இல்லை
பொது சொத்துக்களை களவாடவில்லை
பொது இடத்தில் கொலை செய்யப்பட்டதால்
அவளை தீக்குளித்துக் காட்டச்சொல்ல – இங்கு
ராமன் எவனும் இல்லை!
ஓங்கி ஒரு கல் எரிய துப்பில்லாதவன்
துப்பு தரவும் துப்பில்லாதவன்
அதற்க்கு ஓராயிரம் காரணங்கள்
இவனுடன் நடக்க எவரும் வருவரோ
உடன் வருவோர் தடுக்கி விழுந்தாலே
ஐயோ என இவன் அலறி ஒதுங்குவான்
இனியும் எத்தனை காலம் காரணம் தேடுவோம்
தைரியம் இல்லை என்பதை மறைக்க!

Wednesday, February 24, 2016

சின்னஞ்சிறு ரகசியமே!

என் பதியே என்னில் பாதியையா தந்தேன்
என்னோடு நீ கலந்ததில் தானே நானே முழுமையானேன்
உன் பாதை தேடி ஓடிவர - மோதிரம் தந்து
அனுமனை அனுப்பிவைக்க உன்னை தீக்குளிக்க வைக்கும் ராமனல்லவே நான்
பொழுதொன்று போனதும் களையும் ஆசையா கொண்டேன்
யார் விதைத்ததுவோ என்னுள் வளர்ந்தொங்கிய,
ஒவ்வொரு தேவையாய் கொன்ற பின்னும்
மிச்சமாய் நீயே நிற்கிறாய்!


Sunday, November 22, 2015

மழைத்துளி

ஒத்தத் துளியா மொத்தமா நினைசுடும்
கொட்டி தீர்த்த மழையா தொடாத இடமெல்லா நெளிஞ்சே போறே
உடுத்தின துணியா இன்னும் இருக்கமா என் மேல இருக்கே
உடம்பெல்லா ஊறி போன பின்னு
இன்னு உள்ளே சூடவே இருக்கேன்
நேரம் என்னனு ரெண்டு பேரும் கேட்கல
பொழியற மழை நேரங்காலமா பார்க்கும்
ஓடுற வெள்ளம் காடும் மலைய பார்த்தா நிக்கும்
கண்ணோட கண்ண வெச்சுகிட்டு
கையோடு கை வெச்சு அழுத்தி
காதோட மூச்சு காத்து அடிக்க சொன்னது
அடிவயிதுல எதிரொலிக்குது!

Saturday, September 19, 2015

இன்னு என்ன சொல்ல..

ந்த நெத்தியில நீ தீட்டும் பொட்டுக்குள்ள
நீண்டு கிடக்குறேன்.. எழுந்து தான் நீட்டி படுக்கறேன்..
திட்டு உன் கோவத்துல தீ மூட்டி குளிக்கறேன்..
உன் நினைப்பு சத்தியம்தானு காட்ட கருகி கிடக்கிறேன்..
காதோரமா சுருட்டி வைக்கும் அந்த கேசம் போதுமே,
நான் தூங்க அந்த நீண்ட சடை கூட வேண்டாமே..
கண்ண குத்துமுன்னா சாமிக்கு பொங்க வெச்சேன்,
நீ வந்து நின்னா போதுமுன்னு தானே
கோவில் வாசலிலே குத்தவெச்சேன்..
இன்னு சும்மாவே சுழட்டி பார்க்காதே,
அப்போ பார்த்த பார்வைக்கே வீடு தெரு மறந்து நிக்குறேன்..
இன்னு எங்கே போறே நானே இங்கே என்னை விதைச்சு வைச்சிருக்கையிலே
வாய துறந்து சொல்ல வாக்கு ஒன்னுமில்ல
நீ என்னை கடக்கு முன்னமே சிணுங்கி எனக்கு சொல்லும்
உன் வலவிக்கு தெரியும் நீ கேளு அதுவே சொல்லும்!

Monday, June 29, 2015

அன்னையவள் சொன்னது


ண்டென்று உளமார உணர்ந்துவிடின்
அதெதுவென ஆயிரம் ஆராய்தலென்ன
ஊராருக்கு உளமார உணர்த்த
ஊனில்லை அத்தெனதுமில்லை உனதுமில்லைவேறென்ன
வெள்ளமது வேகுண்டு வேகமெடுக்க
ஊரென்ன உழவனேன்ன
ஏரேன்ன ஏரிளுக்கும் எருதென்ன
வேந்தனென்ன வேட்டையாடும் வேங்கைதான்னென்ன
புவியனைத்தும் புரட்டி புரண்டோட
மீனதுவும் குஞ்சும் எதிர்த்து ஏகாந்தமாய்
நீந்தும் - நிர்காமல் நிலமது
புரளும் பொழுது – அது ஏனோ
மீனது உணர்ந்தது நீரது மட்டுமே
நீக்கமற தன்னை ரட்சிகுமென்று...
சாரதா அன்னையவள் தன் பிள்ளைக்கு சொன்னது தானே!

Sunday, April 26, 2015

உன் விருப்பம் போல் ..

னக்காக எதையும் உதறி விட்டு
வந்தவள் அல்லவே நீ..
தான் கொண்ட ஆசைகளை
துடைத்தவளில்லை நீ..
நான் இறுக்கும் போது
வடியும் வியர்வையிலும்
தன் விருப்பும் வெறுப்பும்
அழியாமல் என்னை அனைத்தவள்..
நான் பதித்த எச்சி துடைக்கும் போதும்
உன் வண்ணம் அழியா வண்ணம் துடைத்தவளன்றோ..
பசியில் நான் பற்கள் பதித்த போது
வளர்த்து வைத்திருந்த நகத்தால்
என் புறத்தை கீரியவள்..
நின்னையா தேடினேன்
நீ விரல் கோர்த்த பின்னரே
தேடலின் உன்னதம் உணர்தேன்
உன் மனம் நீ கொண்ட பாதை
என் விரல் விட்டு நடந்தாய்..
சின்னஞ்சிறு ரகியமா நீ
இனி எல்லாமுமாய் – உன்னையும்
செரிக்கும் ஒருத்தி மடிசாய காத்திருக்கிறேன்!

Sunday, March 22, 2015

யாதெனக் கொள்வேன்

கொண்டது யாவும் – யாரும்
கொள் கொள் என தந்தது இல்லை
தா தா என யாசித்து பெற்றதும் இல்லை
கேட்டு பெற வரமொன்றும் இல்லை
இது வாழ்கை!
துச்சாதனன் என துகில் உரிய முற்படும் நேரம்
மறு முனையில் கண்ணன் என்றே வந்து துகில் தருவேன்
இரணியன் என்று ஆர்பரிக்கும் பொருட்டு
பொறுக்காமல் தூண் உடைத்து நரசிமம் பூண்டு
என் அகந்தையை நானே கீறி உருவி உண்டு செரிப்பேன்
தன்னை தானே கொன்று உண்ணும்
நான் என்னை யாதெனக் கொள்வேன்?
நண்பன் அவன் பின் நான் அமர்ந்து
சிரித்து நீண்ட பாதையில் மகிழ்ந்து – உந்தி
வந்த ஊர்தி முன் சென்றதன் பின் மோத
நீத்தான் நண்பன், மீண்டு வந்தேன் நான்
எனக்கு உயிர் தர அவன் முன் அமர்ந்து சென்றானோ
அவனை கொல்ல நான் பின் அமர்ந்து எழுந்து வந்தேனோ
யாதெனக் கொள்வேன்?
சொல்லாதீர் பாவம் வந்து சேரும்
உமக்கு!

Sunday, March 15, 2015

உம்மூச்சுக் காத்து

வாழ்க்கை தரவனில்ல கடவுள்
வாழ கத்துத்தரவன் தான் கடவுள்
வாழ்க்கை எவனு
ஒரு நிமிச சந்தோசத்துக்கு தந்துட்டு போய்டலா
வெறு இருட்டுல...
எந்த கத்திரிக்காய்க்கோ இல்ல வெறு காமதுக்கோ
வாழ்க்கை தர முடியு..
பொறந்தது பொட்ட புள்ளைனு
பார்க்க வராதவன்
வளர வளர பக்கத்து வீட்டுக்கார.. எதுத்த வீட்டுக்கார
கூடவே வராத சொந்தக்காரனுக்கு பயந்து போய்
அத வழத்து கட்டிக் கொடுக்கும் போது மட்டு கண்ணீர் விடறவன் இல்ல..
வாழ கத்துத் தர உன் கூட விழுந்து
நீ அழும் போது அழுது..
அழ வெச்சவ கழுத்த எப்டி அறுக்கனுன்னு
கூடவே இருந்து கத்து எவன் தரானோ
அவன்தா சாமி
கடவுள்... உம்மூச்சுக் காத்து எல்லா..





Thursday, January 15, 2015

மிருக வதை!

து வதை
உண்ண உட்காரும்போது
தள்ளி விடுவதும் வதையே..
நாம் குடிக்கும்
பாலும், தயிரும்..
கண்ணனவன் உண்ணும்
வெண்ணையும் மிருக வதையே!
 தன் கன்றுக்கு சுரக்கும் பாலை
திருடும் கள்ளர்கள் தானே நாம்..
நமக்கு கடவுளுக்கு
பின் காசுக்கும் விற்கும் நமக்கு
என்ன வதை பற்றி பேச வக்கு??
தன் மனம் போல் இல்லாது
அடக்கி தானே இங்கு உளவுக்கே பழக்கினோம்..
அப்படி பார்க்கையில் விவசாயமும் வதையல்லவோ?
தவறுகளை களைவது தானே முறை
பேருந்தில் கற்பழிக்கப்பட்டால்
பேருந்து ஓட்டத்தையே நிறுத்துதல் நியாயமாகுமோ?
முறை செய்வோம்... தழுவுதல் தொடர்வோம்!




Wednesday, November 19, 2014

என்னை நானாக்கியவளன்றோ!

நாதன் அவன் நடராஜன் ஆடலை கண்டோ
உமையவள் அவள் வந்தாள்
எந்த காளையின் தாளத்திற்கு
நான் எந்த காலையேயினும் உயர்த்தினேன் நீ வர
தலைவி நீ வரவே நான் தலைவனென்று ஆனேன்
உன் விழி இடறியதில்
தலைகீழாக வீழ்ந்ததை யாரறிவார் - நீ இன்றி
யார் இடறிட துணிவார்
தூணாக நீ இருக்கையில் உருளும் புவியே சமமாக இருப்பின்
என்னை இடர்வதேது!

Thursday, September 11, 2014

கோவத்தில் பிரியத்தை தெளிப்பவளே

நீ திட்ட திட்ட திகடுதடி
திட்டித் தீர்த்தப் பின்னு
நாக்கிலே சப்பு கொட்டி கேட்க துடிக்குதடி..
உன் கோவத்தையும்
திருவிழாவா கொண்டாடி ரசிக்கிறனே..
கோவத்தில் நீ விடும் பெருமுச்சிக்குள் வசிக்கிறேனே..
அந்த கருவிழி உருள உருள
ஓடி களச்சு
ஒரு சோம்பு பச்சை தண்ணிகுடிச்சதா அடிவயிறு குளிருதடி..
திட்டி திட்டி எம்மேல உன் உரிமைய காட்டி
என் உயிரயே உலுக்கரியே..
இன்னு என்ன பண்ணி தொலைப்பியோ
நீ சிரிச்சு என் நெஞ்சோட சாஞ்சா
நா எப்படி சாவேனோ!

Friday, August 29, 2014

சுதந்திரப் போராட்டம்

போட்ட சோற்றிற்கு வாலாட்டும்
காட்டிய இனையுடன் கட்டாய கல்யாணம்
பிறந்து ஈரம் உளறும் முன் விற்று காசு பார்ப்போம்...
நாம் பெற்றது வயதுக்கு வந்ததும்
திருமணம் செய்து வைப்போம்
வாங்கி வந்தவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வோம்...
யாருக்கும் யாரும் சுதந்திரம் தரத்தேவையில்லை
இருப்பதை பறித்து
பறப்பதைப் பிடித்து சிறு கூட்டில் அடைத்து
பறக்க விடாது வீசிய உணவை உண்ணச் சொல்வோம்
பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும்...
குலத்தில் குளித்து கொட்டிய மழையில் ஆற்றில் மிதந்து
முடிந்த தூரம் நீந்தி விளையாடியவர்களை
இரண்டடி கண்ணாடி பெட்டியில் அடைத்து
யாரென்றே அறியாதவர்களோடு நீந்தி விளையாட சொல்வோம்
ஆனால் நாம் நம் சமயம் தாண்டி பெண் எடுக்க மாட்டோம்...
சேர்க்கைக்கு வழி விடாது
வீட்டிற்குள் தொட்டி வைத்து வளர்ப்போம்
இவர்கள் புணர்ச்சியையும் அழிப்போம் - உணர்சிகள் அற்று
யாரோ நான்கு பேருக்காக வாழும் வித்தையை
ஒவ்வொரு உயிருக்கும் கட்டாய வகுப்பெடுபோம்...
நேசிக்கிறோம் என்று சொல்லும் சர்வாதிகாரிகள் நாம்
இவர்களுக்கு போராட சொல்லித்தர யாருமில்லையோ?
இவர்கள் போராடினால் பேசாக  நானே போஸாக
ராணுவ படை  செய்வேன்!



Wednesday, August 20, 2014

மௌனம் களையவிடு

ல்லா உறவுக்கும் பெயர் யார் சொல்ல
என் சிந்தை திருடும் உறவு இது
நான் எப்போது உன்னிடம் சொல்ல
கல்லுக்கடியில் காயாத ஈரத்தில்
துயிலும் சிறு வண்டு போல
உன்னோடு பேசிய
மங்காத நினைவுகளோடு பேசி பேசி
தினம் தினம் நான்
நீ இல்லாத நொடிகளை கொல்கிறேன்
நித்தம் யாவருடனும்
நான் பேசுவதே
உன்னை பற்றி என் சித்தம் குளிர
ஏதும் சொல்வார் என்றே
மறுமுறை பார்கையில்
உதட்டை சுளிக்காதே
காதோரம் சுருண்ட முடியை ஒதுக்காதே
நான் சொல்ல வந்ததை சொல்ல விடு!

Friday, August 8, 2014

தீண்டத் தொலைந்தேன்!

தீண்டின அடுப்புமேல வெச்ச பாலா பொங்குது எம்மனசு
நீ போன அப்பறம் தீஞ்சு போன வாசம் உன் நாசி எட்டியிருக்காது
நெடுந்தொலவு நானு கடக்கையில்
உன் நினப்புல தான் தொலச்சேன்
தொலைச்சது ஏதுன்னு தெரியல தேடிப்பார்க்க
போன இடம் போன பின்ன தெரிஞ்சது
வந்து சேர வேண்டிய இடத்ததா நானு தொலைச்சது
நீ உருட்டு அந்த கருவிழியில தானே என் பாதை நீளுது
சோகமோ இல்ல சிரிப்போ
எதுவோ ரகசியமா வெச்சா கூட
ஒடச்சு எட்டி பார்க்கற..
காரணம் கேட்டு சிரிக்கற
அப்புறம் காணாம போய்டற
எல்லோரு சுத்தி இருந்து
யாரும் இல்லாத இந்த பௌர்ணமி நிலவு கிட்ட நானு புலம்பி தவிக்கறே..
என் புலம்பல் கேட்டு கேட்டு அதுவும் இப்போ தேயுது!



Thursday, July 17, 2014

வர்த்தகம் மட்டுமே!

நான் கண்டது குருவை அல்ல விற்ப்பனையாளரை!
நான் பெற்றது கல்வி அல்ல சரக்குகளை!
நான் தேர்ச்சி பெற்றது வாழ அல்ல விற்ப்பனைக்கு!
நான் இருப்பது கோவிலில் அல்ல சந்தையில்!
புத்தகத்தில் இருந்ததை தலையில் ஏற்றி
நுணுக்கம் செய்து என் ஆற்றலை தரையில் கூறுகட்டி வைத்திருக்கிறேன்
என் கனவுகளை எல்லாம் புதைத்து
அதன் மீதமர்ந்து வியாபாரம் பேசுக்கிறேன்!
பள்ளிக்கூடம் மொத்தவிற்பனை நிலையம்!
மாணவர்கள் சில்லறை வர்த்தகர்கள்!
நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள்!
இதில் எங்கும் நடப்பது வர்த்தகம் மட்டுமே!




Saturday, May 31, 2014

யவன் பாடுவான் இனி கீதம்

வனோ என் தெய்வம்
எவன் துஷ்டன் அவனை கண்டு பொருக்காமல்
அவன் தலை கொய்வானோ அவனென்று ஆகாதோ
தவறுகள் கண்டு துடித்து எழுந்து
முடிந்தவரை முட்டி நான் மாண்டால்
என் பின் எவன் எழுந்து தவறுகள் களைய வருவானோ
அவன் என் குல சாமி ஆகானோ
பலனுக்கென்று பாராமல்
யாவருக்கும் தான் கொண்டது கணக்கிடாது
ஈய்து வாழ்பவன் அன்றோ
பின் இறக்காமல் இருந்துகொண்டே இருப்பவனா இறைவன்
இருக்கும் காலம் தொட்டு
வந்ததின் காரணம் உணர்ந்து கடமை முடிப்பவன் வேறு யாரோ
காணும் உயிரெல்லாம் நானே என்று
களத்தில் காண்டிபம் ஏந்தியவனுக்கு
பாடிய கீதம் தானே நான் மேல் சொன்ன தெய்வம் யாவும்
சொன்னது உணராது சொன்னவன் நாமம் சொல்லி மட்டும் இட்டு
இனம் கண்டு குணம் மறந்து
ஈனமாய் வாழும் இவர் மதி உரைக்க
இனி யார் பாடுவர் எந்த கீதம்?



Sunday, April 27, 2014

இல்லாமல் இருந்திருந்தால்

ருத்தியாக தானே வந்து நின்றாய்
ஏன் எனக்கு நவராத்திரி நாயகியாக தெரிந்தாய்
என்னோடு தோள் உரச நடந்து தோழனானாய்
தலையில் தட்டி தவறுகள் திருத்தினாய்
எனை சேயாக்கி தாயாகி
ஏனோ என்கையில் நீயே சேயானாய்
இன்னும் என்னென்னவாகி எனை என்னவாக்கா போகிறாய்?
எங்கோ கிடந்தது பார்த்திடும் மேகமா தாகம் தீர்க்கும்
நீ சீவி முடித்து வரும் கேசம் தீண்டினால் தீராதா?
பார்வை இருப்பதால் தானே
பார்த்துமட்டுமே தாகம் எடுக்க எட்டி நிற்கிறேன்
இல்லாமல் இருந்திருந்தால்
உனை தொட்டு பார்த்திருப்பேன்!
தினமும் உன்னால் அழகாக தெரியும் ஆகாயத்தையும் பூலோகத்தையும்
உன் பார்வையால் இன்னும் அழகாக கண்டிருப்பேன்!

Sunday, March 30, 2014

கோர்க்க நீயா வா!

ரையிர பேய் கூட
ஒத்த மரத்துல தூங்க போயாச்சு
ராத்திரி பொழுதெல்லா
தொலைச்ச தூக்கத்த தேடியே காணாம போகுது
என்னத்த தேடனு எத தொலச்சேனு
தேடும் போதே மறந்து போகுது
தூக்கம் கலஞ்சு கண்ணு தெறக்கும் போது தெரியுது
அதுவர நீ என் கூட பேசினத நினச்சுதா நேரம் போனது
பொண்ணுக்கு காதல் வந்தா
யாருக்கு தெரியாது
செரிக்காத சோரா
அவ நெஞ்சு கூட்டில கிடந்தது வாட்டி எடுக்கு
என் பொழப்பு இங்க வேற
காதல் வந்து வாட்றது எனக்கே தெரியாது
என்னைய வாட்றது அதுனே தெரியாம
என் மலே நானே வெறுப்பாகி கிடந்தே
எவனையும் கூட்டுல சேக்காம தனியாவே திரிஞ்சே
எல்லா புரிஞ்சு சொல்ல வரதுக்குள்ள
நீ போய்டே
நீ போ இப்போ நீயாவே
நா தொலச்சத தேடயில கிடச்சுது ஒ தூக்கோ
நீயாவே தேடிட்டு வா
நீ நானுங்கரத கொர்த்து நாமுனு ஆக்க
ஆயுசு இன்னு இருக்கு காத்துகிடக்க
நா கிடக்கே உனக்காக!