Showing posts with label Pain of Love. Show all posts
Showing posts with label Pain of Love. Show all posts

Sunday, August 25, 2013

ஒரு பெண்ணாக

நான் மறந்துவிட்டேன்
உன் கரத்தில் புதைந்த என் கரத்தை
சாலை ஓரம் நடக்கையில்
யாரும் இல்லா இடம் வரும் போது
உன் கரம் தேடி பிடித்த என் சந்தோசம்
நான் மறந்துவிட்டேன்
யாரோடு நீ பேசினாலும்
யாது வேலை எனக்கு இருந்த போதும்
கண்கொட்டாமல் உன்னை பார்த்த நொடிகள்
நான் மறந்துவிட்டேன்
ஊரே கேட்க
உன்னை நான் கேலி செய்து சிரித்த சிரிப்புகள்
நான் மறந்துவிட்டேன்
உன் குறுஞ்செய்தியின் வருகைக்கு காத்திருந்து
கடந்து போன நொடிகளை ஏமாற்றி மீண்டும்
காத்துக்கிடந்த காலங்கள் யாவையும்
நான் மறந்துவிட்டேன்
எனக்காக நீ அழுத அழகை யாவையும்
உன் அழகான பொய்கள் கேட்க நான் பூண்ட பொய் கோபம் யாவையும்
என் சோகம் தீர்க்க நீ சொன்னா வார்த்தைகள் யாவையும்
உன் கண்ணில் என்னை நான் கண்டு வெட்கப்பட்ட நேரம் யாவையும்
என் முகம் எங்கும் பரவிய உன் மூச்சு காற்றையும்
நான் மறந்துவிட்டேன்
என் தந்தைக்கு மகளாய்!
என்றைக்கும் சுமையென சுகமான உன் நினைவுகள்
கண்ணீரால் சூடாக்கும் என் தலையனையை...
ஒரு பெண்ணாக அது வழிந்திட வழி கொடுப்பேன்!







Friday, May 4, 2012

உன்னோடு நான்!!!

ன் அலாதி அன்பில் நினைந்து
நானும் ஒரு துளி என்று ஆனேன்
உன் மழையில் இன்னும் எத்துனையோ உறவுகள்
தாய் என்று தந்தை என்று
தமக்கை என்று தமையன் என்று
ஒவ்வொரு துளியும் நம் உறவின் தூரம் அதிகரிக்க காரணம்
நீ ஆதரிக்காத துளி என்று நம் உறவு இன்று
யாரும் கேட்காத சந்தம்
உறவில்லா உறவோடு நான் கொண்ட பந்தம்!
உன்னோடு நகரும் என் நாளுக்கு தெரியாது 
நீ என்னோடு இல்லை என்று!
நீ இல்லாமல் உன்னோடு நான்!!!








Monday, April 16, 2012

இராவணன் என வருவேன்

நீயின்றி வாழ்வது இவ்வளவு கடினம் என்று உணர்ந்திருந்தால்
அன்றே இராவணனாய் உன்னை கடத்தி கொண்டுவந்திருப்பேன்...
மிகவும் நல்லவனாய் உன்னை போ என்று சொல்லிவிட்டு
இன்று உன்னை நினைத்து
உன்னையே சாடுகிறேன்!
இன்னும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே
முதல் முறை பயத்தில்
காதல் சொல்வதற்கு முன்பே கடத்தி கொண்டுபோய்விடுவேன்!
என் சூரியன் மறையும் வழி
நீ கிழித்த உச்சந்தலை வகுடு வழி
உன் மூக்கின் நுனியில் வியர்வை வடியும் தருணம்
என் உயிர் விட்டு விலகுமடி
காது மடல் எல்லாம் தொட்டு சிலிர்க்கும் நேரம்
என் வாழ்நாள் சாபம் விலகுமடி
கண்கள் சாய
கைகள் இரண்டும் தலைக்கு வைத்து உறங்க முற்படும் நேரம்
நீ என் மார்மோடு அணைத்து
அதில் தலை வைத்து உறங்கும் உஷ்ணம் தரும் உறக்கம்
மரணனித்து இறப்பை வென்று வரும் என் கர்மம!
விடியும் பொழுது எல்லாம் பொய்யென்று உணரும் நேரம்
மீண்டும் ராவனண்ணாக துடிக்கிறேன்!




Monday, March 19, 2012

நீ கனவல்ல

ன் கரம் பிடித்து ஆரம்பித்த கடலில்
இன்று நான் மட்டும் தன்னந்தனியாக
நால் கரைகளும் இருளானதே
என் கண்கள் ஏதும் காண மறுக்கிறதே
ஆழம் போய் முத்தெடுத்து 
ஒளியில் உன் முகம் கண்டேன் வழிநெடுகில்
உன் மதி முகம் என் மதி மயக்கி நான் விழவில்லை
நிகழ்திடக் கூடும் என எதிர்பார்க்கும் வேளைக்கும்
நடந்து விட்டதை உணரும் தருணத்திற்கும்
இடையில் நாம் விழுந்து கிடந்ததை உணர்தோம்
மற்ற உணர்வுகள் எலும்பும் முன்
நீ எழுந்து சென்றது தெரியாமல் இன்றும் அதே உணர்வோடு  நான்
மதியில் உன் முகம் கண்டு சிரிக்கிறேன் மூழ்குவது அறிந்தும்
நீ என்னோடு இருப்பது கனவல்ல

கனவுகள் தான் என் வாழ்க்கை!




Saturday, January 28, 2012

என்னைத் தடுக்கும் நாள்!

ழுவது கோழைத்தனம் என்றவன் அறிஞன்..
துடைத்து விட கைகள் இருக்கும்போது
அழுவது கூட சுகம் தான் என்றவன் கவிஞன்
அந்த கைகள் இல்லாமல் போனதால் தான் அழுகிறேன் நான்..!
தனிமை எனக்குப் பிடித்த நண்பன் தான்,
அவனை பல முறை பலரிடம் இருந்து பிடித்து இழுத்து வந்திருக்கிறேன்..
இன்று அவனை என்னிடமே தேடுகிறேன்..!
என் உடல் கூட சுமை என ஆகிறது
நான்கு பேர் தூக்கிச் சென்றால் தேவலை என்றிருக்கிறது..!
அழுது அலுத்துவிட்டேன்
கண்ணீர் வரத்து குறையவில்லை..!
இதோ சிரித்துவிடுகிறேன் என்றே
என்னை நானே ஏமாற்றி நாட்களை கடத்துகிறேன்..!
எவரிடமும் புலம்ப முடியாது,
எனக்கும் அது பிடிக்காது..!
அவளால் சிரிக்க முடிகிறது
என்னால் ஏனோ முடியவில்லை..
அவளால் நடிக்கவாவது முடிகிறது
என்னால் மறந்தும் சிரிக்க முடியவில்லை..!
எங்கெங்கோ வலிகளை உணர்கிறேன்
வாழ்க்கை நெடும் பயணமாக தெரிகிறது
தனியாய் பயணிக்கவே பயம் வந்து பற்றிக்கொள்கிறது..!
என்னுடன் தான் வருவேன் என்றாள்
இப்போது என்னுடன் நடக்க மறுக்கிறாள்
ஏதேதோ சொல்கிறாள்
அந்த ஒரு நாள் வாழ்கையே போதும் என்கிறாள்
அந்த ஒரு நாள் வாழ்க்கை தான்
மீத நாட்களை நான் கடக்க என்னை தடுக்கிறது..!







Saturday, December 17, 2011

என் கண்ணில்...

ரே செய்தி ஒரு பக்கம் மரணம் தரும் ரணமும்,
மறுபக்கம் வாழ்நாள் ஆனந்தமும் தரும் எனில்
என் கண்கள் வழி வழியும் நீர்
ஆனந்த கண்ணீரோ அல்ல என்னை எரிக்கும் வெண்ணீரோ??
அது எதுவாயினும்
என்னை தலை குப்பற செய்யும் செய்தி
உன்னை பற்றியது என்பது மட்டும் புரிகிறது, என் வாழ்வே!
உனக்கு எதுவும் கேட்க வேண்டாம் எனவே
வாய் மூடி சிரித்தவாறே அழுகிறேன் நானே அறியாது!






Monday, December 12, 2011

தெரியல!

ன் கால் மேலே ஏறி நின்னுருக்கா,
முத்தொ கொடுத்தா,
அவ உதட்ட கடுச்சுறுக்கெ,
கட்டி புடுச்சிருக்கோ,
ஒன்னா  அழுதிருக்கோ,
ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிருக்கோம்,
என்னென்னமோ பேசிருக்கொ,
கைய புடுச்சுகிட்டு நடந்திருக்கொ,
இப்போ, ஒன்னு இல்ல,
எதுவும் வேண்டான்னு சொன்னா..?
செத்து கீழ விழுந்திட்ட மாதிரி இருந்தது,
என்னமோ..
அவ எப்பவு என் கூடதா இருப்பானு இருந்தது
அவ அப்படிதா நினைக்க வெச்சா..
ஆனா நா எதோ விட்டுட்டேன் போல,
அவளுக்கு ஏனோ நம்பிக்கை இருந்தது
எப்படியும் அவ போனப்புறம்
வேற ஒருத்தியோட என் வாழ்க்கை நல்ல இருக்கும்னு!
தெரியல!




Saturday, November 12, 2011

நிஜத்தில் பொய்யாக

நினைவுகளோடு உறவாடி,
கனவுகளோடு சிரித்து,
நிஜத்தில் பொய்யாக புன்னகைத்து,
நடந்ததை மறந்து,
எனக்கு நானே உண்மையை மறைத்து,
வாழ தயாராகிறேன் தினம் தினம்!




Saturday, November 5, 2011

அவள் பெயர்!


தாவது நினைக்கும் போது வரும் அழுகைகும்
அழும்போதெல்லாம் வரும் நினைவுக்கும் -
இடையில் இருக்கும் அவள் பெயர்!
நீண்ட மௌனத்தை கலைத்து,
என்ன என்ற கேள்விக்கு
பதிலாய் வரும் ஒன்றுமில்லை -
என்பதில் இருக்கும் அவள் பெயர்!
காலை கண்கள் உறக்கத்தை உதறும் போதும்
இரவில் கண்கள் உறக்கத்தை அணைக்கும் போதும்
சட்டென வரும் நினைவு போல் அல்லாமல்,
சலனம் ஏதும் இன்றி எப்போதும்
என் மனதின் முனுமுனுப்பில் இருக்கும்
அவள் பெயர்!
அதுவாவது எனக்கானதாய் இருக்கட்டும்
எனக்கான எனக்கு மட்டும்மான
அவள் பெயர்!

--சித்ரன்

Monday, May 30, 2011

சந்திப்பு!

தும் நடந்திராது போல் தான் கேட்டு விட்டாய்..
'ஹே! எப்படி இருக்க?' என்று,
நானும் உண்மையை மறைத்து தான் சொல்லிவிட்டேன்,
'ம்.. நல்லா இருக்கே' என்று!
எதிர்பார்த்திருப்பாய் நானும் கேட்பேன் என,
அல்லது முறைக்காவது நான் கேட்டிருக்க வேண்டும்
நீ? எனவாவுது சின்னதாக ஒரு கேள்வி!
நீ எது பதிலாக சொன்னாலும் வலித்திடும் என்றே - உன்
அடுத்த கேள்வி வரை மௌன மொழி கொட்டித்தீர்தேன்!
'ம்' என சொன்னாலும் சரி,
'இல்ல டா' என நின்றிருந்தாலும்!
பிரிந்துசென்ற போது ஏற்பட்ட ரணத்தில் இயம் வார்தற்போல் எரிந்திருப்பேன்!
நானும் வழி கண்டுபிடித்து திரும்பி நடந்திருப்பேன்,
பார்த்ததும் தடுக்கிடும் கயல்விழி என இருந்திருந்தால்..
அந்த சின்னக் கண்ணில் நான் விழுந்தது எப்படி எனவே அறியாத போதே..
ஆராய்ச்சியில் நான் கிடந்த போதே ஏனோ சென்றுவிட்டாய்!
இன்னமும் கேட்கிறது கடைசியாக..
என் கரம் பிடித்து உன் கரத்தை அதில் புதைத்து நீ சொன்னது..
'பத்திரமா தானே இருக்கு... அப்படியே இருந்திட கூடாதானு தோணுது' - என
முடிக்கும் முன்னரே தழுதழுத்த உன் குரல்!



--சித்ரன்