Sunday, August 11, 2019

Unity vs. Uniformity

மிழ் நாட்டுக்கு இங்கே இருக்கற காவேரியே வராது காஷ்மீர் பிரச்சனையா வந்திட போகுது. ஆனாலும் நம்ம ஆளுங்க அடுச்சு விடறாங்க, போன வாரம் வேலையின் போது வேலை ஏதும் செய்யாம article 370 நீக்குனது செம அது இதுனு  ஐநா சபை அதிபர் மாறி பேசுனாங்க. காஸ்மீர்ல இதுவரைக்கும் பாக்கிஸ்தான் நியூஸ் மட்டும் தான் வருமாம் அதுனால தான் இவ்ளோ பிரச்சனையாம் இனி அப்படி இருக்காதாம்.

ஏதோ தனியாக கிடந்த காஷ்மீரை இன்று இந்தியாவோடு இணைத்து பாஜக போல தான் பேச்சுகள் பரவுகிறது ஆனால் உண்மை, இந்திய சுதந்திரத்தின் போது தனி தனி மாகாணங்களை தனி நாடாகலாம், இல்லை இந்தியா அல்லது பாகிஸ்தானோடு இணையலாம்மென இங்கிலாந்து சொன்னது அப்போது அவசரப்பட பாகிஸ்தான் காஷ்மீரை பிடிக்க  கொரில்லா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவத்தின் உதவியோடு பாகிஸ்தானை எதிர்த்தது காஷ்மீர். பின்னர் இந்தியாவோடு இனைய  சலுகைகள் அளிக்கப்பட்டது அது ராணுவம், வெளியுறவு துறை, தகவல்தொடர்பு  மூன்றை மட்டுமே இந்திய அரசு காஷ்மீரில் நிர்வகிக்க முடியும் மற்ற துறை, அது சார்ந்த சட்டங்கள் காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளால்  இயற்றிக்கொள்ளப்படும். இது தான் அந்த article 370. இதில் பல ஆண்டுகளாகவே மாற்றங்கள் செய்யப்பட்ட வந்திருக்கிறது.

இப்போ யோகியின் பாஜக அந்த 370'ஐ தான் நீக்கிருக்காங்க. அதுவும் அந்த ஊரில் இருக்கிற மொத்த தொலை தொடர்பையும் நிறுத்திவிட்டு. மொபைல் மட்டுமில்லை லேண்ட் லைன் கூட கிடையாது. ஒட்டு மொத்த மக்களையும் அடக்கி வீட்டில் பூட்டிவிட்டு இதை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? இப்படி மொத்த காஷ்மீரையும் சில நாட்களில் தன் கட்டுப்பாடில் கொண்டு வர முடிகின்ற அரசால் புல்வாமாவில் வந்த வெடி குண்டை ஏன் கோட்டை விட்டது?

இப்போதும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்று மட்டுமே சொல்லி வருகிறது ஆளும் பாஜக, சு.சாமி உட்பட. எம்.ஜி.ஆர் தலையை போல இருந்த காஷ்மீர் பல ஆண்டுகளாக ஸ்பைக் வைத்தது போல் மாறிவிட்டது. ஒரு புறம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு மறுபுறம் சீனா ஆக்ரமிப்பு. மீட்பது எனில் இரண்டையும் மீட்க வேண்டும் ஆனால் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெடை வீட இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெடில்  தான் நம் தேச பற்று அதிகம் பீறிட்டு வெளிவரும். அந்த காரணமோ என்னவோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை மட்டுமே பேசி வருகிறார் 56" பிரதமர்.

மொத்த இந்தியாவுக்கும் ஒரே ரேசன் அட்டை என்பது போல் ஒரே மொழி, கல்வி, மதம், தலைவன் என மாற்றவே இது நடப்பதாக தெரிகிறது. இந்த போக்கு சர்ச்சிலின் வார்த்தையை உண்மையாக்கிவிடும்.  இதை இந்திய அரசியல் அமைப்பு 42ம் திருத்தமான மதசார்பற்ற நாடு என்பதை முதலில் மாற்றிவிட்டு மற்ற அரபு நாடுகள் போல இதை இந்து நாடு என அறிவித்துவிட்டு செய்யலாம், பொருத்தமாகவும் இருக்கும், அப்போது கேள்விக்கு இடமிருக்காது. Unity is different from uniform ...