அனைத்தையும் தொட்டணைக்க வந்துக்கொண்டிருக்கும் மழையின்
அறைகூவலாய்
அனைத்தையும் சுழலவைதுக் கொண்டி ருந்தது காற்று!
வருகிறேன் என சொன்னதுதான் தாமதம் என்பது போல்,
விருட்டென வந்து கொட்டியது..
இந்த மழை..
எங்கோ சென்றுக்கொண்டிருந்த ஜோடி யை,
அந்த பாலத்தின் அடியில் ஒதுங்க வைத்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது!
பேருந்தில் சன்னால் ஓரம் தூங்கிகொண்டிருந்தவரை
சடாரென எழுப்பி விட்டு சிரித் தது மேகக் கூட்டம்!
வேகமாய் தன் கடையை பூட்டிக்
கிளம்பியவரை,
அதனினும் வேகமாய் திறக்கவைத்து,
சாலையோரம் சென்றுக்கொண்டிருந் தவரை தஞ்சம் அடையவைத்து,
அவர் மேல் சாரல் புன்னகை
விசிக்கொண்டிருந்தது!
ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டும் வாழும்-
அற்ப ஜீவனாய் ரோட்டோராதில் உறங்கிக்கொண்டிருந்தவரை,
உதற வைத்து இரக்கமின்றி அவரிடத் தை
ஈரமாக்கி விட்டிருந்தது-
தான் மண் மீது கொண்ட உரிமை பத் திரம் காட்டி!
கொஞ்சம் பயந்தார் போல் தான் வே கமாய் ஓடியது,
அவரிடத்தில் விழுந்த நீர் உரிமை நிலைநாட்டி இருப்பினும்!
சிலருக்கு அனந்த கண்ணீராக!
சிலருக்கு கொதி நீராக!
உலகிற்கு சம மழை என பெய்த போதும்,
பாகுபாடுகள் பல உண்டு இங்கு!
இரவோடு வந்ததால் இன்னமும் நெருக்கம் உண்டு
கொஞ்சம் வெறுப்போடு!
காலையும் கேட்கலாம் ஈரம் காய்தாலும்,
இந்த திடீர் மழையை பற்றி
பலவாறான பேச்சுக்களை!
பார்த்ததை காட்டிலும் கொஞ்சம் அதிகமாய்!