நீயின்றி வாழ்வது இவ்வளவு கடினம் என்று உணர்ந்திருந்தால்
அன்றே இராவணனாய் உன்னை கடத்தி கொண்டுவந்திருப்பேன்...
மிகவும் நல்லவனாய் உன்னை போ என்று சொல்லிவிட்டு
இன்று உன்னை நினைத்து
உன்னையே சாடுகிறேன்!
இன்னும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே
முதல் முறை பயத்தில் –
காதல் சொல்வதற்கு முன்பே கடத்தி கொண்டுபோய்விடுவேன்!
என் சூரியன் மறையும் வழி
நீ கிழித்த உச்சந்தலை வகுடு வழி –
உன் மூக்கின் நுனியில் வியர்வை வடியும் தருணம்
என் உயிர் விட்டு விலகுமடி
காது மடல் எல்லாம் தொட்டு சிலிர்க்கும் நேரம்
என் வாழ்நாள் சாபம் விலகுமடி
கண்கள் சாய
கைகள் இரண்டும் தலைக்கு வைத்து உறங்க முற்படும் நேரம்
நீ என் மார்மோடு அணைத்து
அதில் தலை வைத்து உறங்கும் உஷ்ணம் தரும் உறக்கம் –
மரணனித்து இறப்பை வென்று வரும் என் கர்மம!
விடியும் பொழுது எல்லாம் பொய்யென்று உணரும் நேரம்
மீண்டும் ராவனண்ணாக துடிக்கிறேன்!