Wednesday, June 19, 2013

வேண்டும்!!!

கால்கள் தோய காடு மலை கடந்து நடக்க வேண்டும்
கையில் ஏந்தாது அப்படியே ஆற்றில் நீர் அருந்த வேண்டும்
அருவியின் மடியில் நான் என்பதும் எந்த நாள் என்பதும் மறந்து கிடக்க வேண்டும்
கடந்து போகும் மேகம் எல்லாம் கலைத்து புது படம் வரைந்து விளையாட வேண்டும்
இன்னும் ஒரு மனித மணம் இல்லாத இடம் தேடி
இமைகள் சேர்ந்தோ பிரிந்தோ இருப்பது தெரியா வண்ணம் - இருட்டில் 
கிடந்தது உறங்க வேண்டும்
தண்ணீர் தண்ணீர் என்று தாகம் எடுக்க வெயில் அடியில் நடக்க வேண்டும்
நிழல் கூட விழாத இடத்தில் வெயில் தேடியும் நடக்க வேண்டும்
உயிர்கள் காண கண்கள் விரிய
பயம் போக காணும் உயிர்கள் இடத்திலெல்லாம் ஓடி விளையாடிட வேண்டும்
பசிக்க பசிக்க நாவு தழு தழுக்க உணவு தேடியும் ஓடிட வேண்டும்
மணல் மணல் என காணும் இடமெல்லாம் அலை மணல் என வனம் கடந்திட வேண்டும்
ஒரு பனை மர நிழல் தேடி அலைந்திட வேண்டும்
இரத்த நாளம் உறைய வெள்ளை பனியில் கிடந்தது வெயிலுக்கும் அழுதிட வேண்டும்
உயிரையும் உறயவைக்கும் பனிக்காற்றில் மூக்கின் துவாரம் வழி ரத்தம் கசிந்த போதும்
இன்னும் வேண்டுமென்பேன்
வெயிலால் கால்கள் கந்தி நடுக்கி, வீங்கி வெடித்திடும் போதும் 
இன்னும் வேண்டுமென்பேன்
பசியால் வயிறு ஒட்டி
கண்கள் காட்சிகளை காண மறுக்கும் போதும்
நா வறண்டு குரல்வளை எச்சில் விழுங்க முடியாத போதும்
நெஞ்சு அடைத்து இதயம் வெடித்திடும் நிலை வந்த போதும்
தலை எல்லாம் சூடேறிய போதும்
இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டுமென்பேன்!



Friday, June 14, 2013

:)

நிலவொளியில்
உன் நினைவில்
சிறு சிரிப்போடு நான்!