வெளுத்திருந்த
வானம் எங்கும் முகில் வந்தது
சேர்த்த
முகில் அனைத்தும் உடைந்தது
உடைந்த
முகில் நீராய் பொழிந்தது
பொழியும்
நீராய் நீயே வந்தாய் என்றே ஓடினேன்
நான்
வேகம் கூட்டுவதற்குள் ஏன் நின்றாய்??
ஒரு
துளியும் நினையாமல்
உன்
நினைவில் நான் நின்றேன் மீண்டும் வெளுத்த வானடியில்
மீண்டும்
வருவாய் என்று இன்னும் நிற்கிறேன்
நீ
பொழிந்தால் போகும் என் மீது நான் பூசிய கரையாவும்
போகும்
போனது போனபின்னர் நான் மீண்டும் பிறப்பேன்
பிறந்த
என்னை கையில் ஏந்த நீயே வா
நீ
வருவாய் என்றே சிரித்துகொண்டு நானும் பிறப்பேன்!
உன்
கரத்தில் நான் விளையாடிட
என்
கண்ணின் விழியில் நீ உன்னை தேடிட
உன்னை
கிள்ளி
உன்
கரத்தில் இருந்து நான் கிளம்பிட
நீ
துரத்தி வா என்னை
இந்த
விளையாட்டு விளையாடிட
என்னை
நினைக்க வா
இன்னும்
நிற்கிறேன் வா அடியே
என்னை
கலைத்து விட்டு போன நீயே – வா
என்
மீது பொழிந்திட!