ஒருத்தியாக
தானே வந்து நின்றாய்
ஏன்
எனக்கு நவராத்திரி நாயகியாக தெரிந்தாய்
என்னோடு
தோள் உரச நடந்து தோழனானாய்
தலையில்
தட்டி தவறுகள் திருத்தினாய்
எனை
சேயாக்கி தாயாகி
ஏனோ
என்கையில் நீயே சேயானாய்
இன்னும்
என்னென்னவாகி எனை என்னவாக்கா போகிறாய்?
எங்கோ
கிடந்தது பார்த்திடும் மேகமா தாகம் தீர்க்கும்
நீ
சீவி முடித்து வரும் கேசம் தீண்டினால் தீராதா?
பார்வை
இருப்பதால் தானே
பார்த்துமட்டுமே
தாகம் எடுக்க எட்டி நிற்கிறேன்
இல்லாமல்
இருந்திருந்தால்
உனை
தொட்டு பார்த்திருப்பேன்!
தினமும்
உன்னால் அழகாக தெரியும் ஆகாயத்தையும் பூலோகத்தையும்
உன்
பார்வையால் இன்னும் அழகாக கண்டிருப்பேன்!