நாதன்
அவன் நடராஜன் ஆடலை கண்டோ
உமையவள்
அவள் வந்தாள்
எந்த
காளையின் தாளத்திற்கு
நான்
எந்த காலையேயினும் உயர்த்தினேன் நீ வர
தலைவி
நீ வரவே நான் தலைவனென்று ஆனேன்
உன்
விழி இடறியதில்
தலைகீழாக
வீழ்ந்ததை யாரறிவார் - நீ இன்றி
யார்
இடறிட துணிவார்
தூணாக
நீ இருக்கையில் உருளும் புவியே சமமாக இருப்பின்
என்னை
இடர்வதேது!