என்
பதியே என்னில் பாதியையா தந்தேன்
என்னோடு
நீ கலந்ததில் தானே நானே முழுமையானேன்
உன்
பாதை தேடி ஓடிவர - மோதிரம் தந்து
அனுமனை
அனுப்பிவைக்க உன்னை தீக்குளிக்க வைக்கும் ராமனல்லவே நான்
பொழுதொன்று
போனதும் களையும் ஆசையா கொண்டேன்
யார்
விதைத்ததுவோ என்னுள் வளர்ந்தொங்கிய,
ஒவ்வொரு
தேவையாய் கொன்ற பின்னும்
மிச்சமாய்
நீயே நிற்கிறாய்!