என்
பள்ளி பருவத்தில் எங்கள் ஊரில் இருந்தது ஐந்து திரையரங்குகள். அதில் பேருந்து நிலையத்தின்
அருகில் அமைந்திருந்த ஒன்றில் தான் ரஜினி படம் வெளியாகும். அடுத்த இரண்டில் வேறு
புது படங்கள் வெளியாகும். மற்ற இரண்டில் எப்போதும் பழைய படமும் ‘A’ படம் மட்டுமே
வெளியாகும்.
அந்த ‘A’ பட சுவரொட்டிகள் ஒட்டப்படிருக்கும் பக்கம் பார்ப்பதே ஏதோ பெரியா குற்றம் என்பது போலவே கடந்து போவேன். என் அப்பா Speed , MIB போன்ற படங்களுக்கு என்னை அழைத்து போவார் அப்படி தான் ஒரு நாள் Titanic போவோம் என்றார். பின்னர் பள்ளி நண்பர்கள் மூலம் அந்த படத்தில் கதாநாயகியின் நிர்வாண காட்சி மட்டுமே சுமார் பதினைந்து நிமிடங்கள் வருவதாக அறிந்து என் அப்பாவின் அறியாமையை கடிந்து கொண்ட காலமும் உண்டு.
ஆனால்
இன்று அதை வீட ‘நல்ல’ படங்கள் கைகளில் ஓடுகிறது. ‘எனக்கு போன் வாங்கி தரலைனா அடுத்த
எக்சாம்ல பெயில் ஆகிடுவேன்’ என மிரட்டி கைபேசி வாங்குகின்றனர்
பள்ளி மாணவர்கள்.
அப்பாவுக்கு புகை பழக்கம் இருந்தது ஆனால் அந்த சிகரெட்டே பாக்கெடை
எப்போதும் என் கைக்கு எட்டதா இடத்தில் தான் வைப்பார். வெளியே சென்று வீடு
திரும்பியதும் சட்டை பையிலிருந்து எடுத்து எட்டாத இடத்தில் வைத்து விடுவார். அதுவும்
நான் இன்று புகைக்காததர்க்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அதே
போல் அன்று மது கடைகள் ஊருக்கு அப்பால் இறைச்சி வெட்டும் இடங்களுக்கு அருகில்
இருந்தது ஆனால் இன்று ஊர் எல்லையிலேயே வரவேற்கிறது முதல் கடை. தெருவுக்கு ஒன்றாய்
கடை விரித்து விட்டு ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என திரைப்படத்தில்
மட்டும் கட்டாயமாக எழுத்து போடுவது என்ன மக்கள் நலனோ?
சுமார்
பத்து வருடங்களுக்கு முன்னரை காட்டிலும் இன்று பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்க
மேல் சொன்ன இரண்டும் முக்கிய காரணங்களாக கருதுகிறேன். யாரும் எந்த நேரத்திலும் எதுவும்
பார்த்திட உதவும் கை பேசி, அதில் வக்கிர படங்களை பார்க்கும் ஒருவர் கிடைக்கும்
யாரிடமும் அந்த இச்சைய தனிக்க முற்படுவதே இந்தகைய குற்றங்கள் அதிகரிக்க காரணம். சென்னையில் முகலிவாக்கத்தில் நடந்த ஒரு சிறுமியும் படுகொலை ஒரு உதாரணம். பெரும்பான்மையாக
இத்தகைய குற்றத்தில் பிடிபடுவோர் யாரும் இதே குற்ற பின்னணியோ அல்லது வேறு எந்த தவறுக்கான
பின்புலம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். இப்படி வக்கிர படங்களை பார்த்து வெறி ஏறினவர்கள் தனிமையில் பார்க்கும் பெண்களிடத்திலோ,
குழந்தைகள் இடத்திலோ தங்கள் இச்சையை தீர்க்க பார்ப்பது தான் இத்தகைய குற்றத்திற்கான
காரணம்.
இது
மட்டுமின்றி இப்படியான தவறுகளின் போது அரசியல் தலைவர்கள் பெண்கள் உடுத்தும் உடைகள்
மீதே அந்த குற்றத்தை சுமத்தும் போது அடுத்து தவறு செய்வோருக்கு அது ஒரு நியாயம்
கற்பித்துவிடுகிறது.
இதில்
இன்னமும் எண்ணை விடுவது போல் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மது வந்து சேரும்
சேவையை துவங்கி இருக்கின்றனர். மது கடைக்கு செல்ல கூச்சப்படுவோருக்கும் விடும்
அழைப்பே இது. மது அருந்தியவர்கள் வெட்கமும் மானமும் மறந்து குருட்டு தைரியத்தில்
கத்துவது போல் இனி குற்றங்களும் அதிகரிக்கும்.
இதில்
இன்னுமொரு உளவியல் சார்த்த ஒரு அணுகுமுறை குறைபாடு உள்ளது. அது ஆண்களுக்கான அறிவுரையில்லாது
போனது. பெண் வயதுக்கு வந்தவுடன் அம்மா, சித்தி, அத்தை, பக்கத்து வீட்டு பெரியம்மா
என அனைவரும் பல அறிவுரைகள் சொல்லியே வளர்க்கின்றனர். ஆனால் ஒரு ஆண் வயதுக்கு வந்ததே
அவனுக்கு மட்டுமே தெரிகிறது. உணர்சிகளை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். இனி எப்படியான
மனோரீதியான மாற்றங்கள் நிகழும் அதற்க்கு எப்போது எப்படி நடந்து கொள்வது என்று
சொல்லும் பழக்கம் எங்கேயோ தொலைத்து விட்டோம்.
விரதம்
அனுசரிப்பது, அதிகாலையில் குளிர் நீரில் குளிப்பது, சில காலங்களில் சில உணவுகளை
கட்டாயம் தவிர்ப்பது போன்றவற்றை மொத்தமும் ஒதுக்கி ஆத்திகம் பேசியதும் சற்று தடம்
மாற்றி விட்டது. உண்மையில் இதகையே நடைமுறையும் கூட ஒரு வகுப்பினருக்கு மட்டுமே
சார்த்து சாதி பேதம் பார்த்தே வழக்கமாக வைத்து இன்னொரு பிரிவினரை குற்றம்
பரம்பரையாகவே இருக்க வைத்திருக்க வேண்டும்.
இப்படி
உளவியல் ரீதியாக அணுக வேண்டியவற்றை வெறும் சட்டம் கொண்டு மட்டும் கொரூர தண்டனைகள்
மூலம் தீர்வு காண முடியாது.