இன்று சமூக வலைதளங்களில் ஒரு படம் பகிரபட்டு வருகிறது.
அது அமெரிக்கா இந்தியாவை பார்த்து இங்கு இடஒதுக்கீடு இருக்கும் வரை தங்கள் நாடு
வளம்பெருமாம். அதாவது ஒதுக்கீடால் ‘அறிவாளிகள்(!??)’ இங்கு வேலை செய்யாமல் கடல்
தாண்டி அங்கு செல்வதாக ஒரு கூற்று பரப்பப்பட்டு வருகிறது. அப்படி பார்த்தல் கல்வியில்
இட ஒதுக்கீட்டால் மேல் குடியினர் (forward/general
caste) கல்வி கற்க முடியாமல் போகிறது என்ற கூற்று பொய். இது போக எதோ
பிற்படுத்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் (SC/ST - Scheduled Castes & Scheduled Tribes) மட்டும் தான் இந்த
ஒதுக்கீடு இருப்பது போல் ஒரு தோற்றம் கொண்டு வரப்படுகிறது.
இந்திய
அளவில் கல்வியில் 1954ல் கல்வி அமைச்சகம் 20% இட ஒதிக்கீட்டை பிற்படுத்தப்பட்டோருக்கும்
பழங்குடியினருக்கும் (SC/ST) வழங்கியது. அதை தொடர்ந்து 1982ல் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள
இடங்களில் 7.5% (அ) 15% இவர்களுக்கு
ஒதுக்க உத்தரவிட்டது.
இதன்படி
இவர்களுக்கு கல்விக் கதவுகள் திறந்தே
60 ஆண்டுகள் தான் ஆகிறது ஆனால் அதற்குள் ஐநூறு ஆண்டுகளாக ஏதோ
இவர்கள் பரம்பரையே எளிதாக படித்துக்கொண்டு இருப்பது போல் ஒரு கூற்று காட்ட
முயல்கின்றனர். இதனால் முன்னேறிய வகுப்பினர் (forward caste) எல்லாம் பின்தங்கி
போய்விட்டது போலும் ஒரு பிம்பம் காட்டப்படுகிறது. அவர்கள் அப்படி பின்தங்கி
எங்கும் மலம் அள்ளவோ, செருப்பு தெய்க்கவோ, சவரம் செய்யவோ, தெரு தெருவாக குப்பை
பொறுக்கவோ இல்லை. வேதம் சொன்னதற்கு ஒரு பிராயாசித்தம் செய்துவிட்டு கடல் கடந்து
மாட்டுக் கறியை விரும்பி உண்ணும் நாடுகளில் சம்பாதித்துக் கொண்டு தான்
இருக்கின்றனர்.
“ஆழி மழைக்
கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந்தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.”
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந்தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.”
இது ஆண்டாளின் நான்காவது திருப்பாவை இதில் மழையானது
எப்படி பொழிகிறது என்றும் அதை பெருமாளோடு ஒப்பிட்டும் பாடப்படுகிறது. இப்படி பல்வேறு பாடல்களில் இன்று காணும் அறிவியல், மருத்துவம் என எல்லாம் இருக்கிறது.
ஒரு
கையில் ஆராத்தி எடுப்பதும் இன்னொரு கையில் மணி அடிப்பது அந்தணர்கள் அன்றாடம் செய்யும்
செயல். இப்படி இரு கரங்களில் இரு வேறு செயல்கள் செய்வது மூளையை ஒருங்கிணைந்து செயல்பட உதவும். இன்று மூளையின் செயல் திறன் அதிகரிக்க இப்படி சில வழிமுறைகள்
சொல்லித்தறப்படுகிறது.
இவற்றை எல்லாம் ஒரு சமூகத்தினரே வைத்துக்கொண்டு மற்றவர்கள்
கற்க விடவில்லை. ரிக் வேதத்தில் உள்ள வர்ண கோட்பாடை காட்டி வர்ணம் மாறுதல் தவறு
என்ற பிம்பத்தை உண்டாக்கி, சவரம் செய்பவனை, செருப்பு தெய்பவனை, மலம் அள்ளுபவனையும்
அவன் பரம்பரையையும் அப்படியே இருக்க வைத்தனர்.
கல்வி கற்பிப்பவன் அந்தணன்,
அவன் கற்பித்தது கோவில்களில், அங்கு எல்லோருக்கும் இடம் கிடையாது. ஒரு சில வகுப்பினர்
மட்டுமே செல்ல முடியும் அவர்களிடம் கல்வி கற்க்கவும் முடியும்.இந்த நிலை மாற யாரும் எதுவும் கற்க வழி செய்யவே
கொண்டுவரப்பட்டது ஒதுக்கீடு. இந்த தொழில் செய்பவர்கள் இன்ன குலம் இன்ன குலத்தோர்
எல்லாம் இன்ன சாதி. இந்த சாதியில் பிறந்தவர்கள் அதே தொழில் தான் செய்ய வேண்டும்
என்ற முறையில் தாழ்த்தப்பட்டோராக, தீண்டத்தகாதவராக பல சமூகங்கள் ஒதிக்கி வைக்கப்படுவதை
தடுக்கவே ஒதுக்கீடு தேவைப்பட்டது.
சுதந்திரம் அடைந்து எழுவது ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில்
இன்னும் எதற்கு இந்த ஒதுக்கீடு என்ற கூப்பாடு கேட்கத்துவங்கிவிட்டது.
படிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் சாதியம் சார்த்த ஒதிக்கீடு தவறு என்ற
சத்தம் வலுப்பெறுகிறது. அன்று சாதியின் பெயரால் பல சமூகத்திற்கு கல்வி
மறுக்கப்பட்டது. இன்று அந்த சமூகத்திற்கு வழி செய்தால் சாதியம் வழியில் எதுவும்
வழங்கப்படக் கூடாது என மீண்டும் தடுக்கப்படுகிறது. உண்மையில் இன்னமும் நீதித்துறையில்,
மத்திய மாநிலங்களில் அதிகாரம் கொண்ட அரசு துறைகளில் இன்னமும் முன்னேறிய
வகுப்பினர் (forward caste) தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ISROவில்
இருக்கும் விஞ்ஞானிகளின் பெயர்களே சொல்லும் அவர்கள் எந்த குடி என்று.
மேலும் இப்படி ‘எளிதாக’ இடம் கிடைத்து படிப்பவர்கலால்
தரம் குறையத்துவங்கி உள்ளதாக ஒரு பேச்சும் பரவுகிறது. முதலில் எளிதாக எதுவும்
வழங்கப்படவில்லை, ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து அதில் படிக்கும் மாணவர்களை மற்ற
குடி மாணவர்கள் பார்க்கும் விதம் போதும், நரி குரவர் இனத்தை சேர்ந்த முதல்
பட்டதாரியான ஒரு பெண்னின் வார்த்தைகள் சொல்லும் அந்த ‘எளிதான’ என்ற வார்த்தைக்கு
பொருள். தரம் குறைய காரணம் யாதெனில்,1948ல் ராணுவதிற்க்காக சீப் (Jeep) வாங்கியதில் நெறிமுறைகளை மீறி செயல் பட்டார் வி.கே. கிருஷ்ணா மேனன் - இந்தியன் பிரிடன் உயர் ஆணையாளர் (மேனன் என்பது நாயர்
வகுப்பின் உட்பிரிவு – நாயர் என்பது சத்திரிய குலம் பிராமணர்களாகிய நம்பூதிரிகளுக்கு
அடுத்தது). இவர் எந்த ‘எளிய’ முறையில் இடம் கிடைத்து படித்தவர் அல்லவே. இவர் மீது நடந்த வழக்கில் அரசு நாட்டம் காட்டாததால் தள்ளுபடி செய்து இவரை விடுவித்தது நீதி மன்றம் –
குற்றமற்றவர் என்று விடுதலை ஆகவில்லை. அவரே நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத்
துறை மந்திரியானார். தரம் குறைய காரணம் இத்தகைய நெறிமுறை தவறுதலும், அவரே மீண்டும்
ஆட்சி அதிகாரம் பெறுதலும் மட்டுமே அன்றி ஒதுக்கீடு இல்லை.
