Thursday, June 14, 2018

சிகரெட் அரசியலும் மக்கள் நீதி மைய்யமும்


டம் பார்க்க போனா கூட யாருனே தெரியாத  முகேஷ்ல இருந்து நம்ம ராகுல் டிராவிட் வரைக்கும் எல்லாரும் புகை பழக்கத நிறுத்த சொல்றாங்க. நம்ம அரசாங்கம் ஆண்டு தோறும் நிதிநிலை அறிக்கை (என்னமோன்னு நினைக்க வேண்டாம் பட்ஜெட் தான் தமிழ்ல சொல்லிருக்கு) தாக்கல் செஞ்சா விலை கூடிட்டே தான் போகுது  ஆனாலும் புகை பழக்கம் மட்டும் குறைந்த பாடில்லை. புகை பழக்கத நிறுத்த வைக்க விலையை கூடக்கூடாது குறைக்கனும்.

புரியலையா? வரியை குறைக்காமல் சிகரெட் விலையை அரசாங்கம் தீர்மானித்தால், அதாவது திரையரங்கு கட்டணம் 120னு சொல்லிட்டு கேளிக்கை வரியை மாட்டும் உயர்துனான்களே அப்படி (ஆனா அந்த மிச்ச காச பாப்கார்ன்லயும், பார்கிங் டிக்கெட்லயும் வாங்கிடாங்க). இதை செஞ்சா வரியை சிகரெட் தயாரிப்பு நிறுவனம் செலுத்த வேண்டிய நிலை வரும் அவங்களே தயாரிப்ப நிறுத்திடுவாங்க.

இப்படி நிறுவனங்களை மூடினா அங்க வேலை செய்யற தொழிலார்கள் கதி என்னவாகும்னு இப்போ துத்துக்குடி ஸ்டேர்லைட் ஆலைக்கு கவலைபட்ட மாறி சில பக்தாள் கேட்கலாம், அங்கேயே மொத்தம் 1500 பேர் தான் வேலை செஞ்சாங்க. சிகரெட் எல்லா கைல சுத்தி பஞ்சு வெச்சு அடச்சு போட்டில  போட்டு விக்கற கதை இல்லை, எல்லாம் இயந்திர மையம். அப்படியே அங்கே வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வேறு உதவிகள் செய்யலாம், அது காச நோயிக்கும், புற்றுநோயிர்க்கும் அரசாங்க மருத்துவமனையில் தரும் சிகுச்சை செலவிலும் குறைவாகவே வரும்.

இதுக்கு தான் மக்கள் நீதி மைய்யம் அரம்பிச்சிருக்காரு நம்மவர்னு சொல்ற நம்மவர் பக்தாளுக்கும் முன்னாடி சொன்ன சிகரெட் கணக்கே தான். கேளிக்கை வரி அதிகம்னு போராட்டம் செஞ்சு 120 ருபாய்ல இருந்து இப்போ 165.78 ஆக்கி மக்கள் தலைல போட்ட கூடத்துல இந்த நம்மவரும், அந்த தலைவரும் ஒருத்தர் தான்.

இதற்க்கு பதிலா இந்த கதாநாயகன், நாயகி சம்பளத்தை குறைச்சிருந்தாவே படத்தோட மொத்த செலவு குறைந்து வரி குறைந்து (ஏன்னா வரி என்பது சதவீதம் தான்) விநியோகம் செய்யும் விலையும் குறைந்து, திரையரங்குக்கு வரும் போது 120 ரூபாயில் (இல்லை அதற்கும் குறைவாகவே கூட) மக்களுக்கும் திரையரங்க உரிமையாளருக்கும் லாபவம் கிடைத்திருக்கும்.

அதையேல்லா விட்டுட்டு சாட்டிலைட் உரிமை, Netflix, Amazon prime அப்படின்னு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் இன்றைய அரசியல்வாதிகளை போலவே தாரை வார்த்தனர். நடிக்கும் போதே இவர்களை வாழவைக்கும் ரசிகனை பற்றிய சித்தனை இல்லாதவன் இப்போ நமக்கு என்னத்த செஞ்சிட போறாரு?

ஆமா இவனுகளும் இப்படி தான் நாம தான் காசு வாங்காம ஓட்டு போடணும், மாற்றம் நம்ம கிட்ட இருந்து ஆரம்பிக்கணும்னு சொல்ற ஆளுங்களுக்கு ஒன்னு இருக்கு, அவங்க பணம் கொடுக்கறது அவங்களுக்கு ஓட்டு போடணும்னு மட்டும் இல்லை நாம ஓட்டுன்னு ஒன்னு போட்டவே போதும் அவங்க பிழைச்சுப்பாங்க.

ஏன்னா இது அப்படி ஒரு தொழில். வேலைக்கு போனாலும் இல்லை தொழில் செய்தாலும் அதை சரியா செய்யலைன்னா வேலை போய்டும், போட்ட பணம் போய்டும். ஆனா இந்த அரசியல் தொழில் அப்படி இல்லை.

லஞ்சம் ஊழல் பத்தி எல்லா வேண்டாம், ஒரு நாலு ஆண்டுகள் தமிழகம் எல்லாம் சென்னைய தவிற எட்டு மணி நேரத்துக்கும் குறைவான மின்சாரமே இருந்தது, இதற்கும் மின் துறைக்குன்னு ஒரு அமைச்சர் இருந்தார் அவருக்கும், அவர்  சார்ந்த கட்சியும் என்ன நடந்தது 98 உருப்பினர்களோடு எதிர் கட்சியாக தான் இருக்கிறது இன்றும். அவர்கள் வருமானம் குறையவில்லை.

புரியற மாறி சொல்லனும்னா ஸ்டேர்லைட் போன்று இன்னும் எத்தனையோ நிறுவனம் இங்கே மட்டும் இல்லை உலக முழுவதிலும் இருக்கு. அப்படி அந்த மண்ணை மலடாக்கி, நீரையும் காற்றையும் நச்சாக்கும் நிறுவனம் வரும்போது அதற்க்கு பல கெடுபிடி சட்டங்களை  வளைத்து உள்ளே விட ஆளும் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் ‘நன்கொடை’ தரப்படும். அதனால தான் அதிமுக இது திமுக கொண்டு வந்துதுன்னும் பாஜக காங்கிரஸ் கொண்டுவந்ததுன்னு இப்போ மக்கள் எழுச்சிக்கு அப்பறம் அவங்கள கைய காட்டி இவங்க நழுவராங்க, அப்பவும் இவங்க உயிரோட ஆட்சில தானே இருந்தாங்க ஏன் வர்ற விட்டாங்க?

புது ரூபாய்களை கூட தயார் செய்யாது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கைகளில் இருந்த பணத்தை எல்லாம் மொத்தமாக செல்லாது என ஒரு சில நொடிகளில் சொல்லி திண்டாட விட்டுட்டு, ஆண்டுகள் இரண்டாகியும் கிடைத்த கருப்புப்பணம் எவ்வுளவு என ஒரு விவரமும் சொல்லாமல் அது ஒரு பெரிய சாதனையை போலவே சித்தரிக்கும் இவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடமோ, நீதித்துறை இடமோ ஏன் மக்களிடமோ கூட இல்லை. அப்படியும் மீறி கேள்வி கேட்க ஒன்று கூடினால் காவல் துறை அடிக்கும், சுடும், சமூக விரோதிகள் என சொல்லி கைது செய்வார்கள்.

இவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை செய்யாததற்கு தண்டனையை வீட கேள்வி கூட கேட்க முடியாது நம்மால் அப்புறம் என்ன இதுக்கு இந்த உரிமை?
சரி யாருமே வாக்கே செலுத்தவில்லை என்றால் என்னவாகும்? (சங்கர் படம் போல் ஒன்றுமில்லாத பிரம்மாண்டம் போல தான் இருக்கும் இனி வருவது) ஜனாதிபதியின் கீழ் ஆளுநரின்  ஆட்சி வரும். அவர்களும் மத்திய அரசு ஆட்கள் தானே என்றால். இது இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் எல்லாம் நடந்தால், உலக பார்வையில் வரும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க்கும் ஒரு துறையும், அதற்க்கான சட்டங்களும் இயற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாத கட்சிகள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். கட்சியின் தலைவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றால் கட்சியே கலைக்கப்படும் சட்டம் வேண்டும்.

இப்படி நடந்தால் இனி மக்களின் பணத்தில் தெர்மாகோல் விடும், கோடிக்கணக்கில் சமோசாவும், டீயும் குடிக்கும்  அமைச்சர்கள் வரமாட்டார்கள். தாயின் முந்தானையை பிடித்தே வளர்த்த எந்த பிள்ளையும் பிரதமராகும் ஆசையில் வாய் திறக்காது. வெளி நாட்டுடன் நல் உறவுக்கும், வெளிநாட்டு மூதலீட்டை கொண்டுவர மாதந்தோறும் மக்கள் பணத்தில் பறக்கும் பிரதமர்கள் இருக்கமாட்டார்கள். வாக்களித்தால் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15லட்சம் போடப்படும் என்ற பொய் வாக்குறிதியோடு யாரும் வரமாட்டார்கள்.

அறுவது வயது வரை சம்பாதித்துவிட்டு காலம் போன காலத்தில் நாட்டை திருத்தும் நம்மவர்கள் வரமாட்டார்கள். கடவுள் மறுப்பாளர் பெரியாரை அன்று தலைவனாகவும் இன்று முருகனின், உத்திர பிரதேசத்தில் பிறந்த கண்ணனின் கொள்ளு பேரன்களும் வர மாட்டார்கள்.

(‘தலைவர’ சொல்லவே இல்லைன்னு யாரும் கோவப்பட வேண்டாம் இன்னு கட்சிக்கு பேர் கூட வைக்கலை, எப்படியும் வர மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த பட்டியலில் அவர் இடம்பெறவில்லை)