எவனோ
என் தெய்வம்
எவன்
துஷ்டன் அவனை கண்டு பொருக்காமல்
அவன்
தலை கொய்வானோ அவனென்று ஆகாதோ
தவறுகள்
கண்டு துடித்து எழுந்து
முடிந்தவரை
முட்டி நான் மாண்டால்
என்
பின் எவன் எழுந்து தவறுகள் களைய வருவானோ
அவன்
என் குல சாமி ஆகானோ
பலனுக்கென்று
பாராமல்
யாவருக்கும்
தான் கொண்டது கணக்கிடாது
ஈய்து
வாழ்பவன் அன்றோ
பின்
இறக்காமல் இருந்துகொண்டே இருப்பவனா இறைவன்
இருக்கும்
காலம் தொட்டு
வந்ததின்
காரணம் உணர்ந்து கடமை முடிப்பவன் வேறு யாரோ
காணும்
உயிரெல்லாம் நானே என்று
களத்தில்
காண்டிபம் ஏந்தியவனுக்கு
பாடிய
கீதம் தானே நான் மேல் சொன்ன தெய்வம் யாவும்
சொன்னது
உணராது சொன்னவன் நாமம் சொல்லி மட்டும் இட்டு
இனம்
கண்டு குணம் மறந்து
ஈனமாய்
வாழும் இவர் மதி உரைக்க
இனி
யார் பாடுவர் எந்த கீதம்?
No comments:
Post a Comment