உண்டென்று
உளமார உணர்ந்துவிடின்
அதெதுவென
ஆயிரம் ஆராய்தலென்ன
ஊராருக்கு
உளமார உணர்த்த
ஊனில்லை
அத்தெனதுமில்லை உனதுமில்லை
– வேறென்ன
வெள்ளமது
வேகுண்டு வேகமெடுக்க
ஊரென்ன
உழவனேன்ன
ஏரேன்ன
ஏரிளுக்கும் எருதென்ன
வேந்தனென்ன
வேட்டையாடும் வேங்கைதான்னென்ன
புவியனைத்தும்
புரட்டி புரண்டோட
மீனதுவும்
குஞ்சும் எதிர்த்து ஏகாந்தமாய்
நீந்தும் - நிர்காமல் நிலமது
புரளும் பொழுது – அது ஏனோ
புரளும் பொழுது – அது ஏனோ
மீனது
உணர்ந்தது நீரது மட்டுமே
நீக்கமற
தன்னை ரட்சிகுமென்று...
சாரதா
அன்னையவள் தன் பிள்ளைக்கு சொன்னது தானே!