இந்த புது ரூபாய் மாற்றமானது
அம்பானி, மல்லையாவை குறிவைத்து அல்ல அவர்கள் பணம் இந்தியாவில் அவர்கள் படுக்கையின்
கீழ், கழிவறையில் பதுக்கி வைக்கப்படவில்லை. அது வெளிநாடுகளிலும், நம் நாட்டிலும்
என்றோ வெள்ளை பணமாக உலா வந்துக்கொண்டு தான் இருக்கிறது.
இந்தியாவில்
வெளிநாட்டு முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலில் நிர்ப்பது மொரிசியச்,
அமெரிக்க டாலர் மதிப்பில் 900
கோடி அவர்கள் இந்தியாவில் 2015ல் மட்டும்
செய்த முதலீடு. அதாவது 2040 கிமீ மொத்த பரப்பளவு கொண்ட சிறு
தீவு 3,287,263 கிமீ பரப்பளவு கொண்ட இந்தியாவில் செய்துள்ள
தொகை இந்திய மதிப்பில் ரூ58,500 கோடி. அதற்க்கு காரணம் DTAA
(Double Taxation Avoidance Agreement ) அதாவது அங்கிருந்து
செய்யப்படும் முதலீட்டுக்கோ, அதனால் பெறும் லாபதிற்க்கோ இந்திய அரசாங்கம் எந்த ஒரு
வரியையும் விதிக்காது. மேலும் ஏதொரு மொரிசியசின் குடிமகன் இந்திய நிறுவனத்தை
கையகப்படுதினாலும் வரி இல்லை என்ற ஒப்பந்தம் இரு நாட்டிற்க்கு இடைய உள்ளது. இங்கு
மறைக்கப்படு வரி செலுத்தாமல் அந்த தீவுக்கு கருப்பாக சென்று வரி ஏதும் இல்லாமல்
இங்கேயே வந்து மீண்டும் வரி இல்லாமல் குட்டியும் போடுகிறது (ஆனால் சமீபத்தில் இந்த ஒப்பந்தத்திலும் சில மாற்றங்கள் செய்யாப்பட்டு உள்ளது).
மொரிசியசு - Mauritius |
இது
பெரும் முதலைகள் போகும் வழி. சிறு நரிகளுக்கான பொறி தான் இந்த 500, 1000 மாற்றம்.
நேற்று என் வீட்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்றிருந்தேன், அந்த கடைக்கு பால்
விநியோகம் செய்யும் நபரிடம் வாக்கு வாதத்தில் இருந்தார் கடைக்காரர். இவர்
இருக்கும் பழைய ஆயரம் ருபாய் தாளை பெற்று கணக்கை முடிக்கச் சொல்கிறார். அதை வாங்க
மறுத்து அந்த நபர் சொன்னது ‘உங்க கிட்ட வாங்கி அவங்க பேங்ல போட்ட, டாக்ஸ் அவர்
கட்டனும். இந்த ஒரு தடவ வாங்கிக்க சொல்றார். அடுத்த வாரம் புது நோட்டுன்னா தான்’.
யாரும் தான் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில் போடுவது இல்லை. வங்கியில்
செலுத்தினால் வருமானத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். அந்த வருமானத்திற்கு வரி கட்ட
வேண்டும்.
இப்படி
அடகு கடைக்காரர், மள்ளிகை கடைக்காரர் என தினம் தினம் போகும் கடைக்காரர்கள்
வீட்டில் தூங்குகிறது இந்த கருப்பு பணம். வக்கீல்கள், வைத்தியர்கள் என நீளும்
இந்த பட்டியல். இவர்கள் வீடுகளில் அவ்வளவா இருந்து விடும் என்ற கேள்விக்கு நீங்கள்
உங்கள் தெருவை தாண்டி, தாலுக்கவை, நகரத்தை, மாவட்டத்தை, மாநிலத்தை தாண்டி மொத்தம்
இருக்கும் இந்திய மாநிலங்களோடு இவர்களின் எண்ணிக்கையை பெருக்கிப் பார்த்தல் தெரியும்
இந்த மாற்றம் அவசியமா இல்லையா என்று. பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களில் (MNC) வேலை
செய்யும் நாம் வீட்டு வாடகை (rent
receipt) என்று பொய்யாக போட்டு வரி எய்ப்பு செய்வது போல இங்கு
வணிகம் செய்வோர் பலர் சேர்த்து வைத்திருக்கும் தொகைகளை வெளியே எடுக்கும் முயற்சி
தான் இது.
இலவசமாக
(திமுக)/ விலை இல்லா (அதிமுக) தரும் டிவி, மிக்சி, பேன்க்கு இவர்கள் எல்லா
கடைகளிலும் இந்த swipe machine கொடுத்திட்டு, அதை பயன்படுத்துவதற்க்கான வரி/கட்டணத்தை
அரசு ஏற்றுக்கொண்டு இதன் பயன்பாட்டை கட்டாயம் ஆகினால் போதும். இந்த நிலை மாற.
வங்கியிலும், ATM மையங்களிலும்
கூட்டம் அலைமோதக் காரணம் நமக்கு யோசிக்கும் திறம் இல்லை என்பதே. ATM கார்டு
வைத்திருப்பவர்கள் தினசரி பொருட்களை பல்பொருள் அங்காடியில் (departmental
store) வாங்கலாம். அங்கேயே, கருவேப்பிள்ளை கொத்தமல்லி, பச்சை
மிளகாய் உட்பட சகலமும் கிடைக்கிறது. மருந்து வாங்க பல கடைகளில் ATM கார்டுகள் பயன்படுத்தலாம்
(MedPlus, Apollo). ஒரு வாரம் மட்டுமே இந்த நிலைமை என்பது
உணர்ந்தால் பதட்டம் இல்லாமல் இந்த நாட்களை கடக்கலாம். ராகுல் காந்தி ரூ.4000 வாங்க வங்கி வாசலில் நிர்ப்பது எவ்வளவு அபத்தமோ அப்படி தான் debit/credit
card வைத்திருப்போர் நிற்பதும்.
நம்
பதற்றத்திலும் இந்த மாற்றத்திலும் மாட்டித் தவிப்பது என்னவோ அன்றாடம் கூலி வேலை
செய்வோர் தான். கூலி வேலை செய்து சேர்த்த ஆயிரங்கள் செல்லாது என சொன்ன பதற்றத்தை
பயன்படுத்தி பலர் ஆயிரம் தாளுக்கு 800
ரூபாய் எனவும், 500ரூபாய் தாளுக்கு 400 ரூபாய் எனவும் ஏமாற்றப்படுகின்றனர். ஏமாற்றுபவர்கள் அம்பானியோ, மல்லையவோ
இல்லை அதே தெருவில் ஆட்டோ ஓட்டுபவர், கடை வைத்திருப்பவர்கள் தான். மாற்றம் நம்மில்
இருந்து துவங்க வேண்டும்.
நம்
பதற்றத்தையும் இந்த அன்றாடம் காட்சிகள் படும் பயத்தையும் தான் இப்போது எதிர்
கட்சிகளும், மாநில கட்சிகளும் பேசி பேசி இந்த மாற்றத்தால் பயன் இல்லை என்று கூப்பாடு போடுகிறது. அடுத்த
முறையேனும் இவர்கள் வெற்றி பெற வழி தேடுகிறார்களே ஒழிய வேறு கூற்று இல்லை இவர்கள்
பேச்சில்.