ஏதோ ஒரு கூட்டத்தில்
யாரோ ஒருத்தன் செருப்பு எரிஞ்சா, அந்த செருப்பு தயாரித்த நாள் முதல், நிறுவனம் வரை
போய் விலாவரியா அலசும் ஊடகங்கள் தூத்துக்குடி Sterlite நிறுவனம் என மட்டுமே
மேம்போக்காக பேசிவிட்டு வேதாந்தா என்ற பெயரை கூட சொல்லாது ஒதுங்கிக்கொள்வதற்க்கு அவர்களின் பங்கு விலை சரிய
கூடாது என்ற அக்கறையோ? இவர்களுக்கு ஏன் அந்த அக்கறை?
x
வேலை வாய்ப்பு என்ற பெயரில் உள்ளே வந்த வேதாந்தா
நான்கு லட்சம் மக்கள் வாழும் துத்துக்குடியில் 1500 பேர், குடுபத்திற்கு நான்கு என்றாலும் 0.015% பேர் பலனடையே 1993ல் காங்கிரஸ் ஆட்சியில் நரசிமராவ் அடிக்கல் நாட்டி துவங்கியது.
2013
வரையில் 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுதாக
தமிழக அரசு (ஜெயலலிதா) குற்றம் சாட்டி சென்னை உயர் நீதி மன்றம் இதனை மூட உத்தரவிட்டது. அதே ஆண்டில் உச்ச நீதி மன்றம் அக்குற்றங்களுக்காக மூடுவது என்பது பொதுநலனுக்கு
உகந்தது அல்ல என்று கூறி 100
கோடி அபராதம் விதித்து மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது.

இப்படி ஒவ்வொரு கட்சியும் இவர்களுக்கு குடை பிடிக்க இப்போது 144 தடை உத்தரவை ஒரு தனியார் நிறுவனம் நீதிமன்றத்திடம் கேட்டு பெற்று தூத்துக்குடியில் ஒரு வெறியாட்டத்தை
நடத்தி முடித்திருக்கிறது.
அப்படிபட்ட வேதாந்த குழுமம் யார் என தேடினால் Sterlite
Tech என்ற நிறுவனம் வந்து நிற்கிறது, இது தூத்துக்குடியை உலுக்கும் sterlite Copper நிறுவனம் அல்ல ஆனால் இதுவும் அதே அனில் அகர்வால் நிறுவனமே. இது பக்தாள் எல்லாம் பெருமையாக பேசும் ஸ்மார்ட்
சிட்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற அரசு சார் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவில் காப்புரிமைகள் மீறல் வழக்கு, இந்தியாவில் 2002ல் சுங்க வரி எய்ப்பு வழக்கு என பல குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தோடு
தான் இன்றைய பிரதமர் மோடியும் கூட்டு வைத்து smart சிட்டி, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கப்போகிறார். இப்படிபட்ட அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தை பற்றி எந்த ஊடகம் விவாதிக்கும்? 144 மட்டுமென்ன அவசர காலம் பிரகடனம் செய்துகூட இந்த ஆலை தொடரந்தாலும் ஆச்சர்யமில்லை.
இங்கு நடக்கும் எந்த தீங்கிற்கும் அந்த கட்சி இந்த கட்சி என பாகுபாடே பார்க்க தேவையில்லை மத்திய மாநில கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்த்தே நமக்கு குழி பரித்திருப்பர். இனியேனும் பக்தாள் யாரும் இது திமுக துவங்கியது, காங்கிரஸ் அடிக்கல் நாட்டியது என பிரித்து பேச வேண்டாம்.
2017 ல் உச்ச நீதிமன்றமே வெளி நாட்டு நச்சு கழிவுகளை
இங்கு கொண்டு வந்து கொட்டுவதற்கு இந்தியா குப்பை தொட்டி அல்ல. இந்த கழிவுகளால் வருமானம்
இருந்தாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இதை நிறுத்த உத்தரவிட்டது. எனவே முற்போக்கு
கழகங்களோ, காங்கிரசோ, பாஜகாவோ மொத்த இந்தியாவையும் கூருபோட்டோ குப்பையாக்கியோ விற்கவே
இருக்கிறார்கள்.
இதனை எல்லாம் எதிர்த்து போராடினால் அந்நிய கைக்கூலியாகவும், தேச துரோகியாகவுமே
நாம் சித்தரிக்கப்படுவோம்.
No comments:
Post a Comment