Sunday, July 7, 2019

தக்கன பிழைத்து வாழ்தல்

புறநானுறில் இருந்து சில வார்த்தைகள் இப்போ மொத்த பட்ஜெட்டும் அழகா தெரியுது. ஓட்டு வாங்காமா அமைச்சர் ஆனதுக்கு என்ன செய்யமுடியுமா செமயா செஞ்சுட்டமா. தமிழகத்தில் தாமரை மலர என்ன செய்யனுமோ அதை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எங்க பார்த்தாலும் wow, செம, தமிழ் வாழ்க தான்..

ஆனா உண்மை, 2014ல கச்சா எண்ணெய் $80 - $90 அப்போ இங்கே பெட்ரோல் 70-₹80 .. இப்போ கச்சா எண்ணெய் $40 - $ 50 பெட்ரோல் அதே 70 - ₹80 சில நாள் அதுக்கு மேல. 2014 வரைக்கும் மானியம் தந்து பெட்ரோல் விலைய கட்டுப்பாடுல வெச்சிருந்தாங்க. மோடி வந்ததுல இருந்து அது தேவையில்லாம இருந்துது. இப்போ இத்தனை வரிகளும் போதாதுன்னு மேல 1 ஏத்திருக்காங்க.


கடந்த ஐந்தாண்டுகளில் பெட்ரோல் விலை மாற்றத்தால் விலைவாசி ஏறவில்லைனு கூப்பாடு போடறாங்க. ஆனா உண்மை ஏறின விலைவாசியை பத்தி எந்த ஊடகமும் பேசவில்லை அதனால விலைவாசி ஏறலைன்னு அர்த்தமில்லை. உதாரணம் கார் விற்பனை சரிவு. பொதுவாக மாதாந்திர செலவுகள், சொந்த வீடு என எல்லாம் நிறைவுறும் போது மக்கள் சிந்திக்கும் செலவு கார். இதன் விற்பனை சரிவை மொத்த விலை வாசி ஏற்றத்தை பிரதிபலிப்பதை காட்டுகிறது.


அடுத்து, அந்நிய முதலீடு இதை தான் அதிகமா பேசினாங்க மோடி ஒவ்வொரு முறை விமானம் ஏறும்போதும். இப்போதும் சில்லறை வர்த்தகத்தில் தாராளம் காட்டியுள்ளது. இப்படி அந்நிய முதலீடு என்ன செய்யும்னு தெரியணும்னா Thums up குடிக்கணும். 1977ல் Coke இந்தியாவை விட்டு வெளியேறியது. அந்த காரணமும் சுவாரசியமானது. அப்போதைய சட்டம் coke தயாரிப்பு முறையை கோரியது மேலும் அதனின் 60% பங்கை இந்திய நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்றும் சொன்னது. அதனால் இந்தியாவை விட்டு வெளியேறியது Coke.


1977ல் Thums Up அறிமுகமானது. அப்போது Gold Spot, Limca,  Campa Cola, Double Seven, Dukes போன்றவையும் இருந்தன. 1991ல் உலகமயம், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் கதவுகள் திறக்கப்பட்டது Pepsi வந்தது. அதை தொடர்ந்து வந்த Coke அன்றைய 77% சந்தையை கையில் வைத்திருந்த Thums Up'ஐ மொத்தமாக வாங்கி விழுக்கியது. இருந்தும் Thums Up வாங்குபவர்கள் Pepsi பக்கம் போய்விட கூடாது என்பதற்காக மீண்டும் அதை சந்தைப்  படுத்தியது. 


Start Up - புது தொழில் முனைவு.. இதற்கு சில திட்டங்களை சொல்லிவிட்டு சில்லறை வர்தகத்தில் அந்நிய முதலீட்டை தாராளம் செய்தால் 77% சந்தையை கொண்ட Thums Up'ஐ வாங்கி விழுங்கியவர்களுக்கு Start Up எம்மாத்திரம். மொத்தமாக இந்தியர்கள் வெளி நாட்டு முதலாளிக்கு வேலை செய்ய வேண்டும் அதற்க்கு பெரும் ஊதியத்தில் அதே வெளி நாட்டுகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டும்.



'தக்கன பிழைத்து வாழ்தல்' இது சட்டுனு புரியாது இதையே தான் 'survival of the fittest'னு புரியற மாறி சொல்லுவாங்க. இந்த அந்நிய முதலீடுகளுக்கு முட்டு கொடுக்க இதை சொல்லலாம். அப்படி எடுத்துக்கொண்டால் தெருவில் தாலி ஆறுப்பவன், வீடு புகுந்து கொள்ளை அடிப்பவன் இப்படி எல்லாவற்றையும் குறை சொல்லி கைது செய்யக்கூடாது. They are the Fittest.

சீக்கிரம் படிச்சு பட்டம் வாங்கிடணும், சீக்கிரம் நிறைய சாம்பாதிக்கணும், சீக்கிரம் செத்தர்னும். ரெண்டு மணிநேரதுக்கு 10,000 கோடி சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை. இந்த காசுல எத்தனை ஏரி, குலங்களை தூர் வாரியிருக்கலாம்? கடல் நீரை குடி நீராக்க பயன் படுத்தலாம். தண்ணீர், உணவு இதை அடுத்து தான் எந்த வளர்ச்சியும்.


நேரடி வரி, மறைமுக வரி: இந்த நேரடி வரியை அதிகப்படுத்தி மறைமுக வரியை குறைக்க வேண்டும் அது தான் வளர்ச்சி. தனி நபர் நேரடி வரியை குறைக்க வில்லை ஆனால் பெருநிறுவனங்களுக்கு வரியை குறைந்திருக்கிறது. 250 கோடி வரை விற்றுமுதல் (Turnover) செய்யும் நிறுவனம் 30% அல்லாது 25% வரி செலுத்தினால் போதும் என்பதை 400 கோடியாக உயர்த்தி உள்ளது. இதனால் 99.3% நிறுவனங்கள் பயனடையும்.  அதாவது 0.7% தான் டாடா, அம்பானி, அதானி போன்ற பெரிய முதலைகள்.


மறைமுக வரி என்பது GST. கூலி தொழிலாளியும், அந்த 0.7% உள்ள பெரு முதலைகள் இந்த GST கட்டியே ஆக வேண்டும். உதாரணம் இப்போது பெட்ரோலுக்கான ₹1 வரி இது TVS 50 வைத்திருப்பவருக்கும், Maserati வைத்திருப்பவரும் கட்டியே தீரவேண்டும். இதை குறைத்து பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பயனடைய கோடிகளில் லாபம் ஈட்டும் நபர்களிடம் அதிக நேரடி வரி வாங்கி சமம் செய்ய வேண்டும்.

இந்த வகை வரி விதிப்புகள் ஏதும் இல்லாததனால் இதுவும் வழக்கமான கார்பொரேட் பட்ஜெட் தான்.


No comments:

Post a Comment