யார் எதற்கு என்று தெரியாதோர்,
தேர்தெடுக்கும் திலகம் வந்து
தலை மேல் அமரும்!
ஒவ்வொரு பைசாவாக சேர்த்துக் கொடுத்து,
ஏதேனும் செய் என்றால், அவனவன்
வீட்டிற்கு கட்டி கொண்டு போவான்-
தன் மானத் தலைவன்!
தாய் மொழி, பேய் மொழி
என பாகம் பிரித்து,
மக்களை கோபத் தீயிலே நிற்க
வைத்துவிட்டு,
ஓடிப் போய் இவன் மட்டும்
ஒட்டிக்கொள்ளும்-
அஞ்ச நெஞ்சரும் இந்த 234-ல் உண்டு!
ஊழல் என்ற சொல் கேட்கும்
போது மட்டும்,
ஈழம் சென்று திரும்பும் கண்
கொண்ட-
மறவர்கள் இந்த 234-ல் உண்டு!
தான் செய்தது ஏதும் சொல்ல
இல்லை என்றே,
அடுத்தவர் குறை மட்டும்
கூறிடும்-
நெடு நாள் குமரிகளும் இந்த 234-ல் உண்டு!
தனியாக நிற்க துணிவில்லாமல்,
யாரோடும் சாய்ந்தே நிற்கும்-
சிவப்புத் துணி ஏந்திய
சிங்கங்களும் இந்த 234-ல் உண்டு!
சாதிகள் இல்லை என்ன
சத்தமிட்டுக் கொண்டே,
சாதி பெயரை மாட்டும் வைத்து
வயிறு வளர்க்கும்
வைத்தியர்களிடம் கை
கோர்த்திடும்-
சில்லறை பொறுக்கிகள் அதிகம்
இந்த 234-ல்!
இவர்கள் வளர்வதற்கே தாய்
மொழியும், தெய்வமும் தேவைப்பட்டது!
ஒன்றை தலையில் தூக்கி
வைத்துக் கொண்டனர்,
மற்றதை காரணம் ஏதும் பார்க்காமல் தூக்கி எரிந்து மிதித்தனர்!
இனாம் இனாம் என இடுப்பில்-
கோவணமும் பறிப்பதை மறந்து கை
நீட்டப் பழக்கிவர்
தன்மானத் தலைவர்
என்பது தகுமோ!
மாறி மாறி பொத்தான்
அழுத்தியவன்,
அலுத்துப்போய் 49 'ஒ' கேட்டானேயாயின்..
அதுவும் இல்லை இருப்பதில்
குத்திவிட்டு போ என்பர்,
என் மக்கள் கண்ட ஜனநாயகம்
இதுதானே!
No comments:
Post a Comment