நீண்ட இரயில் பயணம்,
சற்றுத் தள்ளி சன்னல் பக்கம் அவள்.
சிறிது தூரம் வரை
மோதிக்கொல்லத்தான்வில்லை,
எங்கள் இரு விழிகள்!
யாரோ ஏதோ சொல்லக் கேட்டு நானும்
சிரிக்க,
அவளும் என்னோடு கண் கலக்க,
இருவரும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்க,
தொடர்ந்தது பயணம் மோதிக்கொண்டு!
கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நின்றேன்,
கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நின்றேன்,
நண்பர்கள் அரட்டையில் இருந்து!
அவளும் கொஞ்சம் சிரிப்புமாய்,
கொஞ்சும் பார்வையுமாய்,
தோழிகளையும் என்னையும் பார்த்துக்
கொண்டாள்,
அவை அடக்கமாக!
பேச்சுக்கள் வெட்டி வெட்டி
போடப்பட்டன,
காற்றில் கலையாத முடியை
எனோ கைகள் சரி செய்து கொண்டே
இருந்தன!
பேச்சிலே சேராத அவள், தூங்குவோம் என்றதும்,
இன்னும் கொஞ்சம் பேசுவோம் என்ன
கெஞ்சினாள்!
ஒவ்வொரு முறை அவள் பார்வை என் மீது
போர்த்தும் போதும்,
ஏதோ என்னிடமே தேடிப்பார்த்துக்
கொண்டேன்!
கொஞ்ச நேரம் சன்னல் பக்கம் பார்வை
போயினும்,
எதோ தொலைத்தவன் போல் பதறிப் போய்
அவள் பக்கம் தேடினேன்!
தோழிகளின் தோள்களுக்கு இடையே
இருந்து,
நடக்கும் வழியில் விழியால் நடந்து,
என் கண் வீடு அடைவாள் ஒவ்வொரு
முறையும்!
வருவது தான் தொலைவு போல,
போவது சட்டென போய் சேர்த்து
விடுவாள்,
யாரேனும் அவள் பேர் சொன்னாள்!
வந்து வந்து போய்கொண்டு இருந்ததில்,
நேரம் என்ன நொண்டியா..?
வேகமாக ஓடியது,
உறங்க போனோம் ஒன்றாக,
இரு குழுவும் தனித்தனியாக,
வேகமாக ஓடிய நேரம் எனோ நொண்டித்தான்
நகர்ந்தது!
விடுந்தும் விடியாமலும் எழுந்து
கதவோரம் காற்று வாங்கும் சாக்கில்
நகர்ந்தால்
அங்கும் வரும் அசட்டு நண்பர்கள்!
தலை கொஞ்சம் மறைந்ததும்,
மறு கதவோரும் வந்து நின்று பார்வை
போர்துவாள்...
என நான் நிற்க,
முடுச்சுகளோடு புடை சூழ இறங்கி
நடந்தாள்,
அவள் பயணம் முடித்து!
இதுவும் காதல் தானே,
அவள் கடந்து போனதும்,
அவள் கொலுசு சத்தம் போல்
கனமில்லாமல் காற்றில் கசிந்து
கரைந்து மறைந்து போனது,
அவள் பெயர் கூட நினைவில்
நிற்க்காமல்!
No comments:
Post a Comment