உன் அலாதி அன்பில் நினைந்து
நானும் ஒரு துளி என்று ஆனேன்
உன் மழையில் இன்னும் எத்துனையோ
உறவுகள்
தாய் என்று தந்தை என்று
தமக்கை என்று தமையன் என்று
ஒவ்வொரு துளியும் நம் உறவின் தூரம்
அதிகரிக்க காரணம்
நீ ஆதரிக்காத துளி என்று நம் உறவு
இன்று
யாரும் கேட்காத சந்தம்
உறவில்லா உறவோடு நான் கொண்ட பந்தம்!
உன்னோடு நகரும் என் நாளுக்கு
தெரியாது –
நீ என்னோடு இல்லை என்று!
நீ இல்லாமல் உன்னோடு நான்!!!
No comments:
Post a Comment