சுவர் இல்லா அறையின் கதவுகளை
தாளிட்டு – உன்னை
கதவை திறப்பது போல் உன் சிறு
விழிகள் நம்
இடையேயான இடைவெளியை அளக்கும்!
அருகில் வந்து உன்னை தீண்டும் முன்பே
போக விடு என பொய் சொல்லும் உன்
சிவந்த உதடு!
கரம் பற்றியவுடன் மார்பில் சாய்ந்து
தொல்லை செய்யாதே என முத்தம்
கேட்க்கும்
என் மேல் நீ கொண்ட நான் காணாத காதல்!
முத்தம் தீர்ந்தவுடன் –
‘எச்சி பன்னிட்ட’ என சட்டையோடு
என்னை தள்ளிவிட்டு –
மார்போடு சாய்ந்துக்கொள்ளும் தருணம்
நீ கேட்டுணர்வாய்
உன்னோடு நான் கொண்ட காதல்!
No comments:
Post a Comment