அந்தி
கடந்து வந்த இருள்
அடிவானத்தில் மின்னல்
காலின் கீழ் கடல் அலை
தலை எல்லாம் மழை தூறல்
அங்கு கனம் கூடாது என
என் காதுமடல் கண் மூக்கு வழி
வழிந்தோடி ஒலியலை செய்யும் கடலோடு கலக்கும் நொடி
ஊரெல்லாம் என் உடன் இருப்பினும்
யாரெல்லாமோ என்னுடன் நடப்பினும்
ஆண் என்ற கர்வம் தலையில் இருப்பினும்
என் கரம் நீ பற்றி நடக்கையில்
என் எல்லா கர்வமும் உருகி
நான் இருந்த உலகம் என் பார்வையில் இருந்து விலகி
உன் விழியில் நம் உலகம் பார்த்த தருணம் மீண்டும்
கண்டேன்
இன்னும் மீளவில்லை என்பதனை இன்றும் உணர்ந்தேன்!
No comments:
Post a Comment