Saturday, December 29, 2012

காதல் போல்

னவுகள் எல்லாம் தாண்டி
காலை கண்கள் விழித்தெழுந்து
கதிரவன் அவன் கதிர்கள் தேடி வான் நோக்கின்
கார் மேகம் சூழ்ந்த வானில் இருந்து அசைந்தாடி
காற்றோடு கை கோர்த்து மனதோடு வரும்
காதல் போல் விழுகிறதா என்ற ஐயம் எழுப்பி விழும் துளிகள்
கனம் தாங்கிய மனதின் பாரம் குறைக்கிறது!





Thursday, December 20, 2012

நோக்கெதிர் நோக்குதல்

ரு மாதம் முன்னர், ஒரு வாரக்கடைசியில் நானும் என் நண்பனும்  தி-நகர் சென்று கொண்டிருந்தோம், வழக்கம் போல தலை கவசம் இல்லை. ஒரு காவல் அதிகாரி வண்டியை  நிறுத்தி அவர்கள் வழக்கத்தை  கேட்டார்,

“வா வா இப்டி ஓரமா போடு வா... ஹெல்மெட் இல்ல.. வண்டி நம்பர் ப்ளேட் வேற உங்க இஷ்டத்துக்கு இருக்கு. ஹ்ம்ம்”

friend ஓட வண்டி சார்”

“ஆனா நீ தானே ஒட்டு வந்தே... ஹெல்மெட்க்கு இருநூறு, நம்பர் ப்ளேட்கு நூறு.. சரி தானே”

“சார் எல்லாத்தையும் பார்த்தா எப்டி.. கொஞ்சோ பாத்து சொல்லுங்க”

“சனிக்கிழம நீங்க சரக்கு அடிக்க போவீங்க நாங்க என்ன செய்யறது?” னு ஒரு கேள்வி கேட்டுட்டு கலகலனு ஒரு சிரிப்பு வேற

“இல்ல சார்.. சரகெள்ளா அடிக்கரதில்ல”

“அஹ! சரக்கு இல்லையா..?” என ஆச்சர்ய பட்டவர் வேற ஒரு நல்ல கொக்கி போட்டாரு..

“உங்கள மாறி கொஞ்சோ கலர இருந்தா பரவால.. எதாவது மடியும்.. என்ன பாரு.. எதாவது வாங்கி பூசனும்ல அப்போ தான் உங்க அளவு இல்லைனாலும் எனக்கும் எதாவது மடங்கும்”

“நீங்க வேற.. அதுவே பெரும் குழப்பத்துல இருக்கு” என சொல்லி ஒரு நூறு ரூபாயை கட்டி விட்டு நகர்தோம்.

சரி... அவர் சொன்னது பற்றிய யோசனை தொடங்கியது போய் வரும் வழி நெடுகிலும்,

ஒரு ஆணுக்கு ஒரு விஷயம் இருந்தால் அவன் தன் வாழ்கையின் அடுத்த தேவைகளை நோக்கி வேகமாய் ஓடாத் துவங்குவான். அந்த விஷயம் தான் பெண். தன்னை பற்றி தன்னை காட்டிலும் அதிகம் சிந்திக்கும் ஒருத்தி. சதா தன்னை சுற்றியே வரும் ஒருத்தி. எங்கே யாரிடம் நின்று பேசினாலும் ஒரு பார்வையில் தன் அருகே இழுக்கும் ஒருத்தி. அவள் ஒருத்தி தான் வேண்டும்.

இவனுக்கு காதல் எப்படி வரும் எனில்,

காணும் பெண் இடத்திலெல்லாம் வந்திடாது காதல்.
யவர் கண் நோக்கும் கால் - தன் கண்
விழித்திருப்பது மறந்து - அவள் விழி
இவன் வயிறு வரை பாய்கிறதோ – அதுவே
காதல் என கொள்வான் அவன்!

அந்த ஒருத்திக்கு என்ன வேண்டும். அவள் தன்னை நோக்க இவன் என்ன செய்ய வேண்டும்? மிருக இனத்தை பொறுத்தமட்டில் தன் ஆண்மை பலம் நிரூபித்தால் போதும். ஆதியில் மனிதனும் அப்படி ஆரம்பித்தது தான். பலம் பொருந்தியவன் தான் காட்டில் பிற மிருகங்களிடமிருந்து தன்னை காத்து, வேட்டையாடி தனக்கும் தன் சந்திதியினருக்கும் உணவளிக்க முடியும் என நம்பினாள் அவள்.

அனால் இன்று கதை வேறு... நிறம் முக்கியமா? அவள் நிறம் பார்த்தா  காதல் வயப்படுகிறாள்?

முத்தம் தரும்பொழுதிலே ஆண் அவள் கண்கள் நோக்கி அவளை நோக்கி இருப்பான், அவளோ அதை கண்கள் முடியே உணர்வாள். அவள் உணர்வுகளால் ரசிக்கத் தெரிந்தவள். நிறம் கண்டு போபவள் அல்ல.

அவள் கனவுகளை மதிக்க வேண்டும் அதன் பின்னரே அவள் அவனின் சொற்களுக்கு செவி சாய்ப்பால். அதே கனவிற்கு சரியாக வண்ணமிட்டு அழகு படுத்தி அவள் முன் நிறுத்தினால் போதும் அவள் அவனை நம்பி வந்து அவன் மார்போடு தலை சாய்ப்பால்.
எந்த ஒரு தருணத்திலும் ஏது ஒரு செய்கையும் அவள் அல்லாது ஒரு உலகம் தன்னை மகிழ்விக்கும் என ஆண் இருந்தால் பின் அவளோடு கொண்ட பந்தம் விட்டுப்போக அவளே வழி செய்வாள். காரணம் அவளுக்கு அவன் மட்டுமே உலகம் என்று ஆகி இருக்கும். இருவர் வாழ அவள் ஓர் உலகம் செய்வாள், அவளை மதித்தால் போதும், அவள் சொல்லுக்கு மதிப்பளிதால் போதும்.

வள்ளுவர் சொல்வது இதனை விட பெரியது,

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு1311

பெண்ணாக பிறந்த எல்லோரையும் பொதுவாக எண்ணி கண்களால் உண்பதால் கற்ப்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பை பாவை நான் தழுவ மாட்டேன் என கொபம்கொல்லுவாள். பார்தவே இப்படி ஆகும் என்கிறார் வள்ளுவர்.

Thursday, December 6, 2012

காதலின் அடையாளம்

ன் கண்கள் கலங்கி
நீ நிற்க எதுவும் காரணமாக இருக்கட்டும்,
அந்த உதட்டின் ஓரம் வரும் சிறு புன்னகையாயினும் அதற்க்கு
நான் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்ற
என் பிடிவாதத்திற்கு யார் என்ன பெயர் வைத்து அழைத்தாலும்,
நீ அதை  நான் உன் மேல் கொண்ட காதலின் அடையாளமாக கொள்ளவேண்டும்..!