உன் கண்கள் கலங்கி
நீ நிற்க எதுவும்
காரணமாக இருக்கட்டும்,
அந்த உதட்டின் ஓரம்
வரும் சிறு புன்னகையாயினும் – அதற்க்கு
நான் மட்டுமே காரணமாக
இருக்க வேண்டும் –
என்ற
என் பிடிவாதத்திற்கு யார்
என்ன பெயர் வைத்து அழைத்தாலும்,
நீ அதை நான் உன் மேல் கொண்ட காதலின் அடையாளமாக கொள்ளவேண்டும்..!
No comments:
Post a Comment