Thursday, January 2, 2014

மார்கழித் திங்கள்

ன் பேர் எழுதின அரிசி விளையும் நிலம்
நீ வகுடு எடுத்து வாரும் உன் தலை  நேரடி
உன் உச்சந்தலை தாண்டி
அந்த வகுடு வழி வலிஞ்சு
உன் கூர் மூக்கின் நுனியில்
தாண்டவம் ஆடும் ஒரு பொட்டுத் துளி
அந்த துளி போதும் என் ஜென்மத்தின் தாகம் தனிக்க
அதுவும் தர மறுத்து சினுங்கி
உயிர் இருக்கும் நாள் வரை
நான் கிடந்தது உறங்கிட ஏங்கும் உன் இதழ் தொடுமாயின்
அந்த துளியாய் நான் மாற மாறும் என் தாகம்
காற்று வந்ததால் கொடி அசையுதோ
இல்ல கொடி அசைவதால் காற்று வந்ததான்னு
குழம்பி கிடக்கும் யாருக்கும்
உன் மூச்சு காத்தில் என் ஜீவன் வாழ்வது தெரிந்தால் என்னவாகுமோ?
கள்ளி நீ நீயா வந்து சிரிச்சாலு
பேயா மாறி வந்து பகை சொன்னாலு என் கண்ணுல காதல் குறையாது
இந்த சப்பாத்தி கள்ளி வாழ மும்மாரி கேட்காது
இந்த மார்கழி பனிகூட தந்ததில்லை
என் மார்பின் ஓரம் நீ சாய்ந்து படுத்து
உன் இதழின் ஈரம் படுகையில் என் உடலில் பரவும் சிலிர்ப்பை
இம்மாதம் வரும் நல்ல நாளும் கெட்ட நாளும்
எல்லா நாட்களும் பரமனவனுக்கே என்று
ஏது காரியமும் தைக்கு ஒத்தி போடுவர்
நீ அங்கு உறங்கிக் கிடக்கையில்
என் இமையா ஓய்ந்திடும்
இந்த உறக்கத்தை நானும் ஒத்திவைப்பேன்
நானும் எதையும் மறந்து ஆந்தை என விழித்திருந்து
உன் உறக்கத்தை ரசிப்பேன்
பாதியில் நீ சிறு பார்வை திறந்து
என்னவென்று கேட்டு என்னை உறங்கிட சொல்வாய் பாதி கண்ணால்...
என் கரம் பரவி கிடக்கும் உன் கேசம்
என் இரவென நானும்
என் கனவே என் மார்பில் கிடந்திட
இனி என் தூக்கத்தில் என்ன வருமோ என கண் அசர்வேன்
நானும் அரசனாவேன் என் அரசியென உன்னை பார்ப்பதால்!


No comments:

Post a Comment