Monday, December 16, 2013

கண்ணில் நீர் மல்க மகிழ்வேன்

ள்ளி செல்ல பிள்ளைகள் அழுவதும்
உற்றவர் மாண்டதும் பெற்றவர் அழுவதும்
படிப்பின் பயன் பின் நாளில் என்னவென்று தெரியாது பிள்ளைக்கு
மாண்டபின் என்னவென்று உணராது மூட மதியும்
கடந்த நிலை கனவுகளை ஆளும் பொழுது
இருக்கும் நிலையே நினைவில் இல்லாது போகும்
இன்று வந்ததே நாளை வரவே
நாளை வரப்போவதே எப்போதும் கலைந்து போகும் கனவே
பிறக்கும் வரை பிண்டம்
இருக்கும் வரை பெயர்
விட்ட மூச்சை இழுக்க மறந்து விட்டால் கூடு
இதில் நான் எங்கு வந்தேன்
என்னுடையது என்று எதை நான் எங்கு எடுத்து வைப்பேன்
எடுத்தே வைத்தாலும் – வைத்ததை
கூடு கூடு என கூடிக் கழித்து விழும் கூட்டில் எங்கு சுமப்பேன்
மகிழ்ச்சியை காசு கொண்டு கணக்கிட்டு
சிரிப்பினை கொண்டு மகிழ்ச்சியை இடைபோட்டு
கூடு விழும் நாள் வரை நாடு பல தேடி
உன்னை உணராது இழுக்க மறந்துபோவேனோ
பரம்பொருள் உன்னை கண்ட பின் சிரிப்புக்கு மட்டும் இடம் ஏது
வாழ்க்கையே வெறும் புல்லி என்று ஆனா பின் மரணமா வலித்திடும்!
காலமெனும் சிலந்தி எம் தோல் எல்லாம் வலை பின்னி
மயிர் சாயம் வெளுத்து
வானம் பார்த்த பூமியென தலையாகி
உறவுகள் என்ற இச்சையோடு இணங்கி
போகும் நாள் வரை பிடித்திருந்தால்
காலன் அவன் இழுக்கையில் எங்ஙனம் உணர்ந்து செல்ல
பெற்றதை எல்லாம் தந்து
கொண்டதை எல்லாம் கொடுத்து தீர்த்து
உண்டதை எல்லாம் சீரணித்து
போகும் வழி பார்த்து இருப்பின்
நீ அழைக்கையில் தானே எழுந்து
பின்னே ஒட்டிய மண்னைகூட துடைத்து வந்து
உன் பாதம் பற்றி அமர்வேன்
அமரனாவேன்!



No comments:

Post a Comment