நீ
திட்ட திட்ட திகடுதடி
திட்டித்
தீர்த்தப் பின்னு
நாக்கிலே
சப்பு கொட்டி கேட்க துடிக்குதடி..
உன்
கோவத்தையும்
திருவிழாவா
கொண்டாடி ரசிக்கிறனே..
கோவத்தில்
நீ விடும் பெருமுச்சிக்குள் வசிக்கிறேனே..
அந்த
கருவிழி உருள உருள
ஓடி
களச்சு
ஒரு
சோம்பு பச்சை தண்ணிகுடிச்சதா அடிவயிறு குளிருதடி..
திட்டி
திட்டி எம்மேல உன் உரிமைய காட்டி
என்
உயிரயே உலுக்கரியே..
இன்னு
என்ன பண்ணி தொலைப்பியோ
நீ
சிரிச்சு என் நெஞ்சோட சாஞ்சா
நா
எப்படி சாவேனோ!
No comments:
Post a Comment