Friday, August 29, 2014

சுதந்திரப் போராட்டம்

போட்ட சோற்றிற்கு வாலாட்டும்
காட்டிய இனையுடன் கட்டாய கல்யாணம்
பிறந்து ஈரம் உளறும் முன் விற்று காசு பார்ப்போம்...
நாம் பெற்றது வயதுக்கு வந்ததும்
திருமணம் செய்து வைப்போம்
வாங்கி வந்தவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வோம்...
யாருக்கும் யாரும் சுதந்திரம் தரத்தேவையில்லை
இருப்பதை பறித்து
பறப்பதைப் பிடித்து சிறு கூட்டில் அடைத்து
பறக்க விடாது வீசிய உணவை உண்ணச் சொல்வோம்
பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும்...
குலத்தில் குளித்து கொட்டிய மழையில் ஆற்றில் மிதந்து
முடிந்த தூரம் நீந்தி விளையாடியவர்களை
இரண்டடி கண்ணாடி பெட்டியில் அடைத்து
யாரென்றே அறியாதவர்களோடு நீந்தி விளையாட சொல்வோம்
ஆனால் நாம் நம் சமயம் தாண்டி பெண் எடுக்க மாட்டோம்...
சேர்க்கைக்கு வழி விடாது
வீட்டிற்குள் தொட்டி வைத்து வளர்ப்போம்
இவர்கள் புணர்ச்சியையும் அழிப்போம் - உணர்சிகள் அற்று
யாரோ நான்கு பேருக்காக வாழும் வித்தையை
ஒவ்வொரு உயிருக்கும் கட்டாய வகுப்பெடுபோம்...
நேசிக்கிறோம் என்று சொல்லும் சர்வாதிகாரிகள் நாம்
இவர்களுக்கு போராட சொல்லித்தர யாருமில்லையோ?
இவர்கள் போராடினால் பேசாக  நானே போஸாக
ராணுவ படை  செய்வேன்!



No comments:

Post a Comment