Friday, May 8, 2015

மௌனமான நேரம்

நான் பேசி ஒரு நாள் முடியபோகிறது.

யாரோடு பேசி?

யவரோடும்.

அலுவலகத்தில் நான் பார்த்து கொண்டிருந்த வேலையை வேறு இடத்துக்கு மாத்தம் செய்கின்றனர். என்னோடு சேர்த்து குறைந்தது ஒரு நூறு பேருக்கு இனி மூன்று மாதம் இருக்கும் நிறுவனதிலேயே வேலை தேடும் வேலை. ஒரு வேலை இந்த கால கட்டத்திற்குள் வேலை கிடைக்கவில்லை எனில் அடுத்த மூன்று மாதம் வெளியில் வேறு இடம் தேட வேண்டும்.

இந்த சோகத்தில் ஏதும் யாரோடும் பேசாமல் கழிகிறதோ நாட்கள்?

இல்லை, இதுவரை சுமார் இரண்டு ஆண்டு காலம் தனியாக தான் வசிக்கிறேன். தனிமை, நல்ல பரிச்சியமான வார்த்தையாகவே இருந்தது. கடந்த இருபத்தி எட்டு ஆண்டு வாழ்கையில் இன்றும் தோள் உரசி பேசும் தோழன் ஒருவன் மட்டுமே உடன் நடந்து வருகிறான். அவனுக்கு கல்யாணம் நிச்சியமாகிவிட்டது. இனி தோனியவுடன் அழைக்கும் ஒரு எண் ஒரே அலைபேசி எண் இனி சற்று யோசித்து தான் அழைக்க வேண்டும். எழுந்தவுடன் அவன் வீட்டு கதவை நானே திறந்து படுத்திருக்கும் அவனை எழுப்பி இருக்கிறேன். இனி கதவுகள் திறந்திருந்தாலும் தட்டி பதில் வந்த பிறகு தான் உள் நுழைய வேண்டும்.

தனிமை சிரிக்கிறது...

இது தான் இப்போதையே மௌன விரதத்திற்கு காரணமா?

இல்லை, கடந்த வெள்ளி அன்று நடந்த விபத்து. சிறு விபத்து தான், காலில் சின்ன சிராய்ப்பு, சனியும் ஞாயிரும் வெகு வேலை (தள்ளி போட்டிருக்கலாம், இருந்தும்) சற்று அமரவில்லை. இதனால் அடி பட்ட இடம் வீக்கம் கண்டது. இப்போது ஒரு வாரம் மட்டம்.


வேலை இல்லை என சொன்னவரிடத்து என்ன பெரிய வேலை. நேற்று வெளியே சென்று உண்ண பொருள் அனைத்தும் வாங்கி அடுக்கியாயிற்று யாரோடு பேச என்ன இருக்கிறது. காலை நீட்டி (மருத்துவர் சொன்னார் தொங்க விட்டு உட்கார கூடாதென்று) தெமே என கடந்தது மௌனமான நாள்.

No comments:

Post a Comment