Saturday, April 9, 2016

இந்திய பிரதமரின் பயணக்கட்டுரை

அமெரிக்க டாலருக்கு நிகராக அந்நாட்டின் பண மதிப்பு 20 லட்சத்தை தாண்டி சென்றது. அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக கட்சி துவங்கி போர் படையும் திரட்டி போரிட்டான் அந்நாட்டின் குடிமகன். அதில் தோற்று கைதானாவனுக்கு ஐந்தாண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது அதுவும் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யவும் வாய்ப்பு தரப்பட்டு வெறும் இரண்டு ஆண்டுகளில் விடுதலை அடைந்தான். அந்த இரண்டு ஆண்டுகளில் அவன் எழுதிய சுயசரிதை எனது யுத்தம்’ என்ற தலைப்பில் வெளியானது. அதிலிருந்து அந்நாட்டு மக்களின் புரட்சி தலைவனென்றானான். அடுத்த ஒன்பது ஆண்டுகளில் 240,000 பிரதிகள் விற்பனையானது அவனது கட்சி மாபெரும் வெற்றியும் பெற்றது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் அண்டை நாட்டை கைப்பற்றும் எண்ணத்துடன் போர் புரிய துவங்கினான். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் உலக யுத்தர்திற்கு காரணமானான். இருந்தும் அவன் பதவி ஏற்ற நாளில் இருந்து ஒரு வருடதிர்குள்ளாக வேலை இல்லாதோர் எண்ணிக்கை ஆறு மடங்கு குறைந்தது. பொருளாதாரம் வலுபெற்றது.

ஒரு இனத்தை கொன்றது, உலக அமைதிக்கு ஊரு விளைவித்தது போன்ற பல குற்றச்சாட்டுகள் இருந்த போதும் பொருளாதரத்தில் தத்தளித்த தன் நாட்டை அதன் வளம் கொண்டே மீட்டவன் அவன், அடால்ஃப் இட்லர்.

அவன் எந்த நாட்டுக்கும் பயணிக்கவில்லை, வெளி நாட்டு முதலீடுகள் கொண்டு வரவில்லை. உள்நாட்டின் திறம் மேன்படுதப்பட்து நீர் அணைகள், போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள் (உள்ளூர் தொழிற்சாலைகள்) நிறுவப்பட்டன. வேலை நேரம் நீடிக்கப்பட்டது. ஆனால் நாம் இன்றும் வெளிநாட்டு முதலீட்டுக்காக காத்திருக்கிறோம்.

வெளிநாட்டு வியாபாரிகள் இங்கு இந்தியாவில் கடை போடவும் தொழிற்சாலைகள் அமைக்கவும் வரி விலக்கு தரப்படுகிறது. இதில் அரசாங்க வருமானம் போகும். ஆனால் வேலை வாய்ப்பு கிட்டும் என சொல்லப்படுகிறது. மேலும் தடை இல்லா மின்சாரம் வழங்கப்படுகிறது இதில் மின் உற்பத்தியில் எந்த முன்னேர்படும் செய்யப்படுவதில்லை. எனவே பிற மாவட்டங்களில் மின் தடை செய்யப்பட்டு இவர்களுக்கு தடை இல்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் உள்ளூர் தொழிற்சாலைகள், சிறு வியாபாரிகள், நெசவு தொழில், அச்சு தொழில் என பல்வேறு தொழில்கள் முடங்கி சுய தொழில் செய்வோர் வேலை இழக்கின்றனர். மொத்தத்தில் சுய தொழில் செய்வோர் வேலை இழந்து தான் நாம் இன்று வெளி நாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறோம். எனவே வேலை வாய்ப்பு என்பதும் ஒரு போலித்தனமான பிம்பம்.

இது மட்டும் அல்ல நல்லுறவு மேன்படுகிறது என்றும் ஒரு பிம்பம் உருவாக்குகின்றனர். அப்படி எனில் இலங்கை ராணுவம் இந்திய மீனார்கள் (தேசிய ஊடக மொழியில் தமிழக மீனவர்கள்) மீதான தாக்குதல் நின்றிருக்க வேண்டும் அது இன்றும் தொடர் கதையாகவே உள்ளது. சீனாவின் தரமில்லா சந்தைகள் சங்கடம் இல்லாமல் இன்னும் கடை விரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

பசி என்று கதறுபவனுக்கு தாளிக்கும் வாசம் வந்திருந்தாலும் பொருத்திருப்பான். நம் பிரதமர் மளிகை சாமான்கள் வாங்கி வருவதாக சொல்லி தெரு முனையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

அன்றாடம் வாங்கும் காய் கறிகள், பால், பருப்பு போன்றவற்றின் விலை நிர்ணயத்தில் கணிசமான பங்கு போக்குவரத்துக்கு உண்டு. கச்சா எண்ணையின் விலை பாதாளத்தில் சென்ற போதும் சிறு ஆட்டம் காணாத நம் உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் மாதம் இருமுறை ஏற்றம் காண்கிறது. அதில் அக்கறை காட்டவில்லை வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர்.

source: http://www.mycarhelpline.com/
கருப்பு பணம் மொத்தமும் வரும் வரி இருக்காது என ஓட்டு கேட்டவர் இன்று நாட்டை தூய்மை படுத்த ஒரு புது வரி (Swachh Bharat cess at the rate of 0.5% on all taxable services on November 6 to be effective from November 15). கச்சா எண்ணை விலை குறைந்ததில்  சுமத்த பட்ட வரிகளில் இருந்து எடுத்திருக்கலாமே?

மாட்டிறைச்சி காரணம் சொல்லி ஒரு முதியவரை அவ்வூராரே அடித்து கொன்ற போதும், தலித் சிறுவகள் கொல்ல பட்டபோதும், ஒரு பல்கலைக்கழகம் தீவிரவாதிகள் கூடாரமாக சித்தரிக்க பட்டு கேலிக்கூத்தான போதும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவர்களுக்கு எதிராக பேசியவர்களின் தலைகளுக்கு விலை வைத்த போதும் மௌனமே காத்தார் வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர். ஏதோ ஒரு மாநிலத்தில் நடக்கும் சில தவறுகளுக்கு எல்லாம் பிரதமர் பேச முடியாது எனில் யாரோ பதினோரு பேர் கொண்ட குழு மட்டையில் பந்தை அடித்து வெற்றி பெற்றதற்கு மாட்டும் வாழ்த்து சொல்ல நேரம் இருக்கிறதே வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர்க்கு.

அவர் நல்ல சூத்திரதாரி வாய் திறந்தால் தான் அது ஒரு செய்தியாகும் இவர் ஏதும் சொல்லாத போது இந்த ஊடகங்கள் அதை பற்றி பேசபோவது இல்லை. இவர்கள் பேசாத போது மக்கள் அதை பற்றி சிந்திக்க போவதும் இல்லை. எனவே வாருங்கள் அமைதியாய் கண்களை மூடி வெளி நாட்டு முதலீடு வருவதை உணர்வோம் எல்லோரும் யோகா தினம் கொண்டாடுவோம்.


(குறிப்பு: இதனால் இதற்க்கு முந்தைய காங்கிரச் ஆட்சி தேவலாம் என்று பொருள் கொள்ள வேண்டாம்.)

No comments:

Post a Comment