Friday, May 6, 2016

ஓட்டு சரியா தவறா


ஓட்டு என்பது தமிழா? இதற்கு ஆம் என்ற தவறான பதிலோ இல்லை என்ற சரியான பதிலோ யோசிக்கும் நேரம் பசியோடு யாரேனும் ஒருவர் ஒரு வாய் உணவுக்காக காத்திருக்கலாம். ஏதோ ஒரு கிரகம் மாறுவதால் யாரோ ஒருவர் உங்களை ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு தானம் செய்ய சொல்லி அது முடியாமல் போகுமேயானால் அன்று உண்மையான மக்கள் ஆட்சி நடைபெற்றதற்கான சான்றாக இருக்கும்.

வாக்குப் பதிவு செய்தல் நம் உரிமை என்றும் நூறு சதவீத  வாக்கு பதிவிற்கு கமல், சூர்யா என நடிகர்கள் கதறுவதையும் கேட்க்கும் போது எங்கள் உரிமைகளை நினைவூட்டுவதை விட்டுவிட்டு நடிப்பதை மாட்டும் பாருங்கள் என சொல்லத் தோன்றுகிறது.
இந்த நினைவூடலில் மக்களாட்சி என்பது என்ன என நினைவுக்கு வந்தது. மக்களால் மக்களுக்காக மக்களிலில் இருந்து என இருக்க வேண்டும்.

மக்களில் இருந்து

இது என்றோ வழக்கொழிந்து போய் விட்டது. ஒருமுறை ஒருவர் தலைவரானால் அவர் பிள்ளை, மருமகன், மாமன், மச்சான், இவர் ஏதேனும் புகரில் சிறை சென்றால் அவர் துணைவியார் என யார் யாரோ பதவிவகிக்கலாம் ஆனால் அவர் பரம்பரையாக இருக்க வேண்டும்.

மக்களுக்காக...

அப்படி ஒரு ஆட்சி சுதந்திரம் அடைந்ததில் இருந்து... இல்லை இந்தியா என்ற ஒரு தேசம் ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து நடந்திருந்தால் நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவதிற்காக சேர்த்த நூறு பலுக்கல் (KG) தங்கத்தில் வெறும் பதினோரு மட்டும் டெல்லி தேசிய அருங்காட்சியகதில் இருக்காது மற்றும் அது சம்மந்தமான ஆவணங்கள் வெளியிடக்கூடாது என்ற குறிப்போடு பிரதமர் அலுவலகத்தில் பத்திரப்படுத்தி இன்றுவரை உறங்கிக்கொண்டே இருக்காது. அந்த தங்கங்களை எடுத்தவர்கலாவது யார் என்று எ.கே.டார் (A.K.Dar) டோக்யோ தூதர் 1956ல் எழுதிய கடிதத்துக்கும் பதில் போகாமல் இருந்திருக்காது.

நேதாஜியின் தனிப்பட்ட சொத்து அல்ல அது இந்திய தேசிய ராணுவம் அமைய இந்தியாவில் வாழ்வோர் மட்டுமல்லாது மலேசிய, பர்மா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்திய விடுதலைக்காக கொடுத்தது.

ஆக இன்று நாம் காடும் வரி பணம் மட்டும் அல்ல அன்று விடுதலைக்கு கொடுத்த பணத்திற்கும் கணக்கு காட்டவில்லை எனபது நிதர்சனம்.

மக்களுக்காக நடக்கும் ஆட்சி எனில் 1948ல் ராணுவதிற்க்காக சீப் (Jeep) வாங்கியதில் நெறிமுறைகளை மீறி செயல் பட்ட வி.கே. கிருஷ்ணா மேனன் (இந்தியன் பிரிடன் உயர் ஆணையாளர்) மீதான விசாரணையை, ‘இந்திய அரசாங்கமே இந்த வழக்கை கைவிட என்னும் போது இதை தொடர்ந்து விசாரிப்பதில் பயனில்லை, இதை எதிர் தரப்பு ஏற்க்காவிட்டால் தேர்தல் பிரச்சனையாக கையாளலாம்’ என சொல்லி அனந்தசயனம் ஐய்யங்கார் நிருதியிருக்க மாட்டார். வி.கே. கிருஷ்ணா மேனன் நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியாகி இருக்க மாட்டார்.

மக்களால் ...

விதைக்க மட்டுமே உரிமை எனில் அறுக்க ஐந்தாண்டுகள் பொறுத்தே ஆகவேண்டும் என்பது என்ன தூரமான ஒரு உரிமை. வாக்களிபவர்கள் அளித்த வாக்கை திரும்பப்பெறும் நிலை வருமே எனில் அதுவே முழு உரிமை. இது வர பல அடுக்கு கேள்விகள், ஆராய்சிகள் தாண்ட வேண்டும்.

நேரு... கிருஷ்ணா மேனன்
இது இல்லாவிடினும் அவர் சொல்லும் வாய் சவடால்களை நம்பி எம்முரிமைக் கொண்டு ஒருவரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி அவர் சொன்னதேதும் செய்யாமல் போனாலும் மீண்டும் வேறு சவடால் விட்டு எம்மிடத்தே வருவது யாதொரு முறையாகும்.

அதுவே தேர்தல் அறிக்கைகளைக் கொண்டு அவர் ஆட்சி செய்த திறத்தை அளவிட்டு அடுத்த தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் என்ன? அவை நடைமுறை படுத்திய விதம், பயனீட்டாளர்களின் விகிதம், துறை சார்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் எல்லாம் ஆராய்ந்தே அடுத்த தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை தேர்தல் ஆணையம் ஏற்று நடத்த வேண்டும். இது சார்ந்த விளக்கம் எல்லா ஊடகங்களிலும் வர வேண்டும். இதில் பொய்யோ பித்தலாடமோ நடந்தால் அந்த ஆணையர் மற்றும் அவரின் இரத்த பந்தங்கள் எல்லோருக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு நிலை இருந்தால் அந்த கிருஷ்ணா மேனனோ இல்லை தமிழகம் நான்கு ஆண்டுகளாக இருளில் இருக்க காரணமான தி.மு.க இன்று நம் தெருவில் வந்து முடியட்டும் விடியட்டும் என்று சொல்ல முடியுமா இல்லை இரண்டு லட்சத்தி பதினோரு ஆயிரத்தி நானூத்தி எம்பதி மூன்று கோடி கடனை தலையில் வைத்துவிட்டு ஒளிரும் நிகழ்காலம் மிளிரும் வருங்காலம்னு இந்தம்மா தான் வாய்திறக்க முடியுமா?


சரியா தவறா.. வாக்கு!

No comments:

Post a Comment