Sunday, May 22, 2016

எதிநியன் சனநாயகம்

மூன்று பக்கமும் நீர் சூழ்ந்த ஒரு சிறு நகரம் அதில் அடிக்கடி களவு நடக்க இதற்கென்று ஒரு காவல் ஆள் நியமிக்க முடிவு செய்யப்படுகிறது. அவருக்கு சாப்பாடு தங்கும் இடம் என எல்லா சௌகரியங்களும் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான வசதிகள் செய்ய அந்நகர மக்களிடம் மாதம் இன்ன தொகை வசூலிக்கவும் முடிவு எடுத்தனர்.

இப்படி அந்நகர மக்களின் பணம் கொண்டு செய்யப்படுவதால் இந்த வேலைக்கு பலர் முன்வந்தால் அதில் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் மக்களின் பங்கும் அவசியம் என கருதி வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர்.

எண்ணியது போலவே போட்டியிட பலர் முன் வந்தனர். இறுதியில் மூன்று பேர் மட்டுமே அதிக வாக்குகள் பெற்றனர். முதலில் அந்நகரில் கூத்தாடுபவன் அடுத்து அதில் அந்த நகரத்தில் இருக்கும் பெரும்பான்மையான சமூகத்தை சேர்த்தவன், மூன்றாவதாக மிக யோகியன் என்று பெயரெடுத்தவன். கூத்துக்காரன் பதவி ஏற்ற நாளில் இருந்து களவு குறையத்துவங்கியது. பாராட்டுக்கள் குவிந்தன.

தடீரென யோகியன் ஊர் கூட்டத்தை கூட்டினான். கூத்துக்காரன் பதவி ஏற்ற நாளில் இருந்து களவு என்னவோ குறைந்து தான் இருக்கிறது ஆனால் களவு போன பொருட்களின் மதிப்பு என்னவோ கூடி இருக்கிறதே என்று குற்றம் சாட்டினான். அந்நகரத்தின் ஒரு பிரிவினர் இவன் பொறாமையால் பேசுகிறான் என்றனர். மற்றவர் களவு போன கணக்கு சொல்வது போல் அதிகமாகவே இருக்கிறதே என்றனர். கூதுக்கரனால் சரி வர காரணம் ஏதும் சொல்ல முடியவில்லை. புதியதாய் ஒருவரை தேர்ந்தெடுக்க மீண்டும் வாக்கெடுப்பு நடந்தது.

அதில் திரும்பவும் கூத்துக்காரனும் நின்றான். இம்முறை பெரும்பான்மையான  சமூகத்தை சேர்த்த சாதியக்காரன் வென்றான் பதவியேற்றான். நாட்கள் கடந்தது களவும் குறைவாக தொடர்ந்தது. காவல் ஆளுக்காக வசூலிக்கப்படும் தொகையும் கூடிகொண்டே போனது. மக்கள் கேள்வி எழுப்பத் துவங்கினர் களவு ஏன் இன்னும் தொடர்கிறது என்று. இந்த கேள்விகள் தொகை கூடியதால் வந்தது என கருதினர் இருப்பினும் கேள்வி சரியே என்பதால் இது குற்றச்சாட்டாக கருதி பதிலளிக்க சாதியக்காரனை அழைத்தனர்.

கூட்டத்தில் பெரும் வாக்கு வாதம் நடந்தது அவன் சாதிக்காரர்கள் அவனுக்கு இணக்கமாக பேச மற்றவர்கள் எதிர்க்கவும் வாக்கு வாதம் சூடேறியது. இப்படி குற்றம் சாட்டுபவர்களே ஏன் வந்து இரவு எல்லாம் கண் விழித்து காவல் காக்கக் கூடாது என்றான் சாதியக்காரன். சலசலப்பு ஓய்ந்தது சத்தமே வரவில்லை.

“அந்த வக்கு எங்களுக்கு இல்லாததை உணர்ந்ததால் தான் நாங்கள் வாக்கு மட்டும் செலுத்துகிறோம். அது இருக்கு என்று முன் வந்து எங்கள் பணத்தில் நீ உண்பதால் தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்” என்றான் ஒருவன். இம்முறை சாதியக்காரனிடம் பதில் இல்லை.

கூட்டம் இந்த தனி ஒருவன் சொல்வது சரி என இவன் பக்கம் சாயத்துவங்கினர். அந்த ஒருவன் தொடர்ந்தான், “நாம் எப்படி வாக்களித்தோம்? இந்த வேலைக்கு தகுதியானவன் ஒரு வலியவன். அப்படி ஒருவனை அடையலாம் கண்டா வாக்களித்தோம். கூத்துக்கரனை நகரம் முழுவதும் தெரியும் அதனால் அவன் முதல் முறை அதிக வாக்குகள் பெற்று வென்றான். அடுத்து வென்றவனின் சமூகம் இங்கு அதிகம் போக கூதுக்காரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சடால் கூடுதல் வாக்குகள் பெற்றான். யார் சரியானவன் என்பதை விடுத்து யார் தெரிந்தவன் என்பதை கருத்தில் கொண்டு தானே வாக்களித்தோம்.”

மூன்று பக்கமும் கடல் சூழ்த்த நாடு இந்தியா, 1948ல் நெறிமுறைகளை மீறி செயல் பட்ட வி.கே. கிருஷ்ணா மேனன் நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியானார். இன்று வரை குற்றப் பின்னணி உள்ளவர்கள் நாட்டை ஆளும் அவலம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

காரணம் இங்கு இருக்கும் பழம்பெரும் கட்சிகளுக்கு பிரதானா வாக்காளர்கள் இருக்கிறார்கள் நல்லதோ கேட்டதோ அவர்கள் அதே கட்சிகளுக்கு தான் வாக்களிப்பார்கள் சராசரியாக நாற்பது சதவீதம். இது போக கட்சிசாரா மக்களின் முடிவே தலைவர் யார் என்பதை நிர்னைக்கும், அது மீதம் உள்ள அறுவது சதவீதம் அதில் இருப்பவர்களில் அதீதமானவர்கள் இன்று நான் வாக்களித்தால் நாளை எனக்கு என்ன கிடைக்கும் என்ற குறுகிய எண்ணத்தோடு  வாக்களிப்பதால் மாற்றம் வர வாய்பில்லை.

Source: https://data.gov.in/catalog/number-students 
2014 தேர்தல் கணக்கின் படி மொத்தம் 81.14 கோடி வாக்களர்கள். இதில் அறுவது சதவீதம் என்பது 48.8 கோடி. அத்தனை போரையும் மெருகேற்றி யோசிக்க செய்ய அடிப்படை கல்வியில் அரசியலை கொண்டு சேர்திருக்க வேண்டும். அரசியலின் முக்கியத்துவம், வாக்களிக்கும்போது கணக்கில் கொள்ள வேண்டிய பிரதான உண்மைகள், நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் தேர்தல் நேர வாக்குறுதிகள் என்ன பங்கு ஆற்றும் என்பதை கணக்கிடும் பக்குவம் என எல்லாமும் இருக்கும்படியான ஒரு கல்வி முறை இன்று வந்தால் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளில் மாற்றம் வரலாம். நாற்பது ஆண்டுகள் என்பதும் படித்து முடித்து வரும் இளைய சமுதாயத்தை கருத்தில் கொண்டு சொல்லப்படும் கணக்கே.

இத்தகைய குறுகிய என்னமுடையவர்களை கருத்தில் கொண்டே கிரேக்கத்தில் எதிநியன் சனநாயகம் உருவாக்கப்பட்டபோது பிளாடோ எதிர்த்தார். இன்றும் கட்சிசாரா வாக்காளர்கள் தெரிந்த சின்னத்தில் தான் வாக்களிக்கின்றனர் வேறு எந்த ஒரு எண்ணம் கொண்டும் இல்லை. இதற்க்கு சரியான உதாரணம் இன்று காணும் விளம்பரங்கள், சச்சினுக்கும் எழுதுகோலுக்கும், காற்றடிக்கும் என்ன சம்மந்தம் ஆனால் அவர் அந்த விளம்பரத்தில் வருகிறார். தெரிந்த முகம் ஒன்று தேவைப்படுகிறது கவனம் ஈர்க்க. இதை தான் அரசியல் கட்சிகளும் கையாளுகின்றன.

கல்வியில் மட்டும் இல்லாமல் மாற்றம் சநனாயக கூற்றிலும் தேவை. இன்று ஆட்சி செய்பவர்கள் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை கொண்டு அவர்களின் செயல் பாடுகள் அளவிட்டு அடுத்த தேர்தலை சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும். தேர்தல் அறிக்கைகளும் சரி பார்த்து அதனின் சாத்தியங்கள் கணக்கிட்டே வெளியிட வேண்டும் இவைகளை கையாள தேர்தல் ஆணையம் போல் அரசு சாரா துறை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். இத்துறையில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அறிவு சார்தவர்களே இருத்தல் வேண்டும். இதனால் வெறும் வாக்குறுதிகள் மட்டும் தந்து செயல் பாடாதவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்காது. ஏமாற்று வாக்குறுதிகள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு செய்யப்படின் ஆளுமை உள்ளவர்களில் மக்கள் செல்வாக்கு மிக்கவர் ஆட்சி அமைக்க முடியும். இப்போது உள்ள கூற்றின் படி செல்வாக்கு மிக்கவரும் வாக்குறுதிகள் அளிப்பவருமே மீண்டும் மீண்டும் ஆட்சி அமைப்பர். ஆனால் இதை ஒரு பொருட்டாக விவாதத்திற்காக கூட எந்த ஒரு கட்சியும் எடுக்காது என்பது நிதர்சனம். அளவீடு இல்லாது இருப்பதே இன்று நாம் இந்த நிலையிலேயே இருக்கக் காரணம்.


No comments:

Post a Comment