ஐரோம்
சர்மிளா, நவம்பர் 2 ,
2000 மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில்
பேருந்து நிறுத்தத்தில் இருந்த பத்து பேர் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான
அசாம் ரைபிள்சினால் சுடப்பட்டு இறந்தனர். அதில் 1988ஆம்
ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணியும் அடக்கம்.
இந்த
படுகொலைக்கு எதிராக 28 வயது ஐரோம்
சர்மிளா நவம்பர் 4 உண்ணா
போராட்டம் துவங்குகிறார். அன்றையில் இருந்து மூன்றாம் நாள் சர்மிளா தற்கொலைக்கு
முயல்வதாக கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கிறது காவல்துறை. வலுகட்டயமாக மூக்கு
வழியே உணவு தரப்பட்டுகிறது. இந்திய அமைப்பு சட்டத்தின்படி தற்கொலை முயற்சிக்கு ஓர்
ஆண்டு சிறை தண்டனை என்பதால் அன்றையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விடுவித்து
மீட்டும் கைது செய்யப்படுகிறார்.
இந்திய
தலைநகர் டெல்லியில் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாகி உயிர் விட்ட பெண்ணை இன்று வரை
உரித்து உரித்து பார்த்துக்கொண்டு இருக்கிறது நீதித்துறையும் அரசாங்கமும்.
நீதிமன்ற வேலை நேரம் முடித்து மீண்டும் தனி அமர்வில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின்
மேல் முறையீட்டை கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அவர்களுக்கு என வாதாட வக்கீல்
தரப்படுகிறது. அவரும் வாய்க்கு வந்த வண்ணம் இன்னும் அந்த பெண்ணை அறுத்து
கூறுபோட்டு குற்றவாளிகள் விடுதலைக்கு அயராது பாடுபடுகிறார்.
ஆனால்
இந்த ஐரோம் சர்மிளா விடுதலை கைது விடுதலை கைது என மாறி மாறி தன் வாழ்நாளில்
ஐந்தில் ஒரு பங்கை உண்ணாமல் நோம்பு இருந்து கழித்ததன் காரணம் கேட்க ஆராய இன்று வரை
எந்தத்துறையும் செவி சாய்க்கவில்லை.
16 வருடமாக ஐரோம் சர்மிளா இருந்ததன் நோக்கம் ஆயுதப்படைகள் (சிறப்பு
அதிகாரங்கள்) சட்டம், 1958 திரும்பப் பெற வேண்டும் என்பது
இதற்க்கு இடையில் கருணாநிதி ஈழம் மலர உண்ணாவிரதம் இருந்தார், ரஜினி உடல் நிலை தேற
ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர், ஜெயலிதா விடுதலை அடைய தமிழகமே(!!??) உண்ணாவிரதம்
இருந்தது.
வடகிழக்கு
மாநிலங்களில் அமலில் உள்ள அந்த சட்டம் ஆயுதப்படைக்கு தரும் அதிகராம் யாதெனில் போராளி
என சந்தேகிக்கும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்ககாலம் சுட்டும் கொல்லலாம்.
மும்பையை அலறச் செய்த தீவிரவாதிக்கு தனி சிறை தனி நீதிமன்றம் அமைக்கத் தெரிந்த அரசிற்கு
கிழக்கில் உள்ள போராளிகளின் கோரிக்கைக்கு செவி கொடுக்க ஏனோ வலிக்கிறது.
இன்னமும்
அந்த சட்டம் அமலில் உள்ளது அவரினவரின் அடுத்த அடி மணிப்பூர் முதல்வர் இபோபி
சிங்கிற்கு எதிராக சுஎத்சியாக தேர்தலில் போட்டியிடப்போவது
வரும்
15ம் தேதி வாய்கிழிய அகிம்சை போராட்டம் மூலம் கிட்டிய சுதந்திரம் என மார்தட்டும்
போது நினைவில் கொள்ளவேண்டிய நிகழ்வு, உண்ணா போராட்டம் கைவிடப்பட்டவுடன் இம்பால்
மாஜிஸ்திரேட் கோர்ட் தலைமை நீதிபதியிடம் ரூபாய்10ஆயிரத்திற்கான
பத்திரத்தை அளித்து தற்கொலைக்கு முயல்கிறார் என அவர்
மீது உள்ள வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 23ம் தேதிக்கு
நடக்கும் என அறிவிக்கப்பட்டே பிணையத்தில் விடுவிக்கபட்டார் ஐரோம் சர்மிளா. கோட்சே அன்றே காந்தியை
சுட்டது காந்திக்கு நல்லது என இன்று நீதித்துறை இன்று நிருபித்துக் காட்டியது.
No comments:
Post a Comment