Sunday, September 11, 2016

முத்திரை குத்தப்பட்டவர்கள்

தோ ஒரு கோபத்தில் ஒருவர் செய்யும் கொடூரத்தைக்காட்டிலும் கொடியது அதை நாம் கையாளும் விதம். கொடுஞ்செயல் புரிந்தவனின் மொத்த இனத்தையே நாம் கொடூரராக பார்க்கத் துவங்குவோம். இந்த பார்வையானது இன்று நேற்று வந்ததல்ல, பரசுராமன் ஒரு மன்னன் மேல் இருந்த கோபத்தில் ஒட்டு மொத்த சத்திரிய இனத்தையே அளிக்கக் கிளம்பினார் என்கிறது இதிகாசம். இன்று நம் பார்வையும் இப்படியே இனம், நிறம், மொழி, எல்லை என விரிந்து பிரிந்து கிடக்கிறோம்.

இந்த பார்வையானது இராமாயணதில் துவங்கியது என்பதைவிடவும் இந்த இதிகாசங்களின் மீது சரியான பார்வையும் புரிதலும் இல்லாததே காரணம் என்பது நிதர்சனம். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என தாயின் தலை கொய்தவரும், சிவனின் அருள் பெற்றவரமான பரசுராமன் சத்திரியரான ராமனிடமே தோற்று மனம் மாறுவாதாக கூறப்படுகிறது. ஆக நாம் கொண்ட கொரூர எண்ணம் கொல்ல மீண்டும் ராமன் வரேவேண்டும் என்றால் இன்னுமொரு சீதை தீக்குளிக்க வேண்டுமே. இத்தகைய இதிகாசங்கள் சொல்லும் கருவை காணாது நுனிப்புல் மேய்ந்து ஒவ்வொருவரையும் அவதாரமாக்கி விழுந்து தொழுது பிரிந்து திரிகிறோம்.


ஏதோ ஒரு குழு தவறான புரிதலில் கடவுளின் பெயரால் செய்யும் கொலைகளுக்கு நம்மோடு வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் இனமக்களை ஒரு வித குற்றப் பார்வையில் பார்ப்பது மதம் என்ற முத்திரையோடு பார்க்கும் ஒரு கொடூரம். ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக செல்லும்போதும், ஆடி மாதம் ஒவ்வொரு தெருவிலும் பாட்டு கூத்து என அமக்களப்படும் போது இல்லாத சலசலப்பு இந்த விநாயகர் ஊர்வலத்தில் வருவதன் காரணம் இந்த முத்திரையோடு பார்க்கும் பார்வையை அரசியலாக்க பார்க்கும் கயவர்களின் வேலை. எல்லா பண்டிகைகளும் மக்கள் கொண்டாடும் போது சச்சரவு வருவதில்லை அதில் அரசியல் நுழையும் போதே மதம், மொழி, சாதி என்ற முத்திரையோடு காட்டப்படுகிறது.

 நாம் அறியாமல் நாம்மில் ஒட்டியிருக்கும் முத்திரையை பயன்படுத்தி ஆதாயம் தேடுகின்றனர். ‘தலித்’ பெண் கொலை, ‘முஸ்லிம்’ தீவிரவாதிகள் வெரிச்செயல், ‘பார்பனனின்’ சூழ்ச்சி போன்ற சொற்றொடர்கள் அர்த்தமற்றதாக வேண்டும்.
http://www.ndtv.com/tamil-nadu-news/tamil-nadu-woman-21-kills-herself-over-morphed-facebook-photos-1424358

நம்மை அறியாமலே நாம் ஒரு முத்திரை பார்வை தான் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பெண்களின் புகை படம் பதியவேண்டாம் சில கயவர்கள் அதை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தி இத்தளங்களை உலா வருவோர் எப்படியும் ஒருமுறையேனும் பார்த்திருக்கலாம். அப்படி தவறாக பயன்படுத்துதல் அல்ல அவளுக்கு பிரச்சனை அதை நாம் பெண் என்ற முத்திரையோடு அந்த முத்திரைக்கு பின்னால் கற்பு, அடக்கம் என்ற பொருளோடு கையாளும் விதமே அந்த பெண்ணுக்கு பிரச்சனை.

இந்த மொழி பேசுபவன் இப்படிப்பட்டவனாக தான் இருப்பான் என்ற மொழி முத்திரை. இது தான் திராவிட அரசியல், மொழியால் பிரித்து ஆளுவது. கயத்தாரில் ஆங்கிலேயரால் தூக்கிலடப்பட்ட தெலுங்கு நாயக்கர் வம்சமான வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்தவன் தமிழன். தன் சொந்த பணத்தில் கப்பல் வாங்கி சுதேசி கப்பல் விட்டு செக்கிழுத்து செல்வம் இழந்து வறுமையில் இறந்த வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்மும் (வ.உ.சி) தமிழர் தான். பிறப்பும், இனமும், பேசும் மொழியும் ஏதும் தந்திடாது செய்யும் செயலும், எண்ணமுமே வாழ்வு. மேய்வது வனமனாலும் சேர்வது இனமாக இருக்கட்டும் என்று சொல்வதுண்டு, இனத்தோடு இருப்பது தவறல்ல மற்ற இனத்தை வேறு மாதிரி பார்க்கும் போது தான் பிரச்சனை.

Family only, Brahmins only, vegetarians only, இந்தகைய கொடூர வார்த்தைகள் வாடகைக்கு வீடு தேடி அலையும் போது பார்த்திருக்கலாம். குடும்பம் அல்லாதவர்கள் இப்படி தான் இருப்பாகள் என்ற பார்வை, சைவம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தாமாக வைத்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு பார்வை. வீடுகள் தோறும் மாற வேண்டிய பார்வை.

இந்த பார்வை மாற நாம் கர்வமாக சுமக்கும் முத்திரைகள் களைய வேண்டும். நான் வெள்ளையாக, அழகாக, இன்ன சாதியில், இந்த வசதிகளோடு, இந்த ஊரில் என பெருமை பொங்க சுமக்கும் முத்திரைகளை களைந்தால் தான் பிறரை எந்த முத்திரை இன்றியும் பார்க்க முடியும். தான் வெள்ளையாக இருப்பதில் பெருமை கொண்டதால் தான் ஆப்ரிக்கா கண்டத்தை இழிவாக பார்க்கப்பட்டது. தாங்கள் நாகரிகம் அறிந்தவர்கள் என்ற கர்வம் தான் அமெரிக்க பூர்வீகர்கலான செவ்விந்தியர்களை அடிமைப் படுத்ததி அந்த இனம் அழியக் காரணமாக இருந்தது.


மனிதன் என்ற இறுமாப்பு முத்திரை தான் புலியை இன்று வெறும் ஆயிரம் எண்ணிகையில் இருக்க வைத்திருக்கிறது. இன்னும் ஒரு இனம் அழிவதற்குள் களைவோம் இந்த முத்திரைகளை.


No comments:

Post a Comment